ஏப்ரலில் குறையும்; மே மாதம் ஒழியும்: 'கொரோனா' பற்றி ஜோதிட சிறுவன் கணிப்பு

Updated : ஏப் 01, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (179) | |
Advertisement
கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான். இந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன், அபிக்யா ஆனந்த். சிறு வயதிலேயே ஜோதிடத்தில், வானவியல் சாஸ்திரத்தில், நிபுணத்துவம் பெற்றான். தன் ஜோதிட அறிவுக்காக, பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளான்.நோய்

கொரோனா வைரஸ் தாக்குதல் குறித்து, எட்டு மாதங்களுக்கு முன்பே கணித்த, 14 வயது இந்திய சிறுவன், கொரோனா தொற்று, மே, 29ல் முடிவுக்கு வரும் என தெரிவித்துள்ளான்.latest tamil newsஇந்தியாவை சேர்ந்த, 14 வயது சிறுவன், அபிக்யா ஆனந்த். சிறு வயதிலேயே ஜோதிடத்தில், வானவியல் சாஸ்திரத்தில், நிபுணத்துவம் பெற்றான். தன் ஜோதிட அறிவுக்காக, பல்வேறு பதக்கங்களையும், விருதுகளையும் பெற்றுள்ளான்.


நோய் அச்சுறுத்தல்


கடந்த, 2019 ஆகஸ்ட் மாதம், ஒரு வீடியோவை வெளியிட்டான். அதில், 2019 ஆகஸ்ட் முதல், 2020 ஏப்ரல் வரை, உலகை மிகப்பெரிய நோய் அச்சுறுத்தும் என்பதை, கணித்து கூறினான்.
'மிகவும் அரிதாக, செவ்வாய், குரு, சனி, ராகு, சந்திரன் ஆகியவை, சூரிய குடும்பத்தின் வெளி வளையத்தில், ஒரே நேர்கோட்டில் வருகின்றன. இம்மூன்று கிரகங்களும் மிகவும் சக்தி வாய்ந்தவையாக கருதப்படுகின்றன.


latest tamil newsஇவை இணைவதால், அதிகமான கதிர்வீச்சு, பூமியை தாக்கும். அதேநேரம் சந்திரனும், ராகுவும் இணைவதும், சக்தி வாய்ந்ததாகும். ராகு, உலகில் நோய்களை பரப்பும்' என, ஆனந்த் கணித்து கூறினான்.அதேபோல், தற்போது உலகை, கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. மனிதர்களுக்கும், வைரசுக்கும் இடையிலான போராக, இது பார்க்கப்படுகிறது.இன்னமும் மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில், இந்நோயின் தாக்குதல் எப்போது குறையும் என, மக்கள் தவித்து வருகின்றனர்.


ஆலோசனை

இந்நிலையில், கொரோனா வேகம் எப்போது குறையும் என்பதையும், ஆனந்த் கணித்து கூறிஉள்ளான்.ஏப்., 1 வரை, கொரோனா தாக்கம் அதிகம் இருக்கும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில், பாதிப்பு அதிகமாக இருக்கும்.


ஆந்திரா, மேற்கு வங்கம், ஒடிசா போன்ற மாநிலங்களிலும், பாதிப்பு அதிகமாக இருக்கும்.
ஏப்ரலுக்கு பின், படிப்படியாக குறைந்து, மே, 29ல் கொரோனா வைரஸ் முடிவுக்கு வரும்.
பொருளாதார வீழ்ச்சியும், நவம்பரில் முடிவுக்கு வரும் என, கணித்து கூறிஉள்ளான்.

கொரோனா நோய் பரவாமல் இருக்க, தண்ணீருடன், மஞ்சள், எலுமிச்சை, தோல் சீவப்பட்ட இஞ்சி, துளசி ஆகியவற்றை சேர்த்து, கொதிக்க வைக்க வேண்டும்.நன்கு கொதித்து ஆவி வரும்போது, அடுப்பிலிருந்து இறக்கி, தலை மீது துண்டை போர்த்தி, அந்த ஆவியை நுகர வேண்டும். அது, மூக்கு துவாரத்தின் வழியே சென்று, கிருமிகளை அழிக்கும்; புத்துணர்ச்சி தரும்.

சூரிய ஒளியில், அதிக நேரம் நிற்கலாம் என்றும், ஆலோசனை வழங்கியுள்ளான். இச்சிறுவனின் வீடியோக்கள், தற்போது இணையதளத்தில் வேகமாக பரவி வருகின்றன.
-- நமது நிருபர்- -

Advertisement
வாசகர் கருத்து (179)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Subramaniam - Prague,செக் குடியரசு
04-ஏப்-202002:48:26 IST Report Abuse
Subramaniam இவர்கள் தமிழர்களை மூடர்களாக்கி பணம்பறிப்பதே வழக்கமாக கொண்டுள்ளார்கள்.
Rate this:
A P - chennai,இந்தியா
06-ஏப்-202013:43:34 IST Report Abuse
A Pஇந்தப் பையனே தமிழ் நாட்டில் பிறந்து வளர்ந்து இருந்தால், தமிழ் பேசி, தமிழனாகத்தான் இருந்திருப்பான். தமிழிலேயே ஜாதகத்தின் உண்மைகளைப் புட்டுப் புட்டு வைத்திருப்பான். முகத்தில் என்னே ஒரு தெளிவு, அறிவின் முதிர்ச்சி. இதெல்லாம் தெரியாத மூடர்கள் தான், தப்பு தப்பாகக் க்ருத்து போடுகிறார்கள். தமிழன் என்றால் யாரென்று நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள் ? செம்மறி ஆடு போல நடந்துகொள்ளக் கூடாது. தான் கோடிக்கணக்கில் பகல் கொள்ளை அடிக்க, தமிழ் பேசுபவர்களை அறுபது ஆண்டுகளாய் செய்தவர்களின் தப்பான கருத்துக்களை இனி காதால் கேட்காதீர்கள். நன்றி. வீட்டிலும், வெளியிலும் தமிழே பேசுபவர்கள்தான் தமிழர்கள்.. வீட்டில் வேறு மொழி பேசி, வெளியில் மட்டும் தமிழ் பேசுபவர்கள் அப்படியா ?...
Rate this:
naadodi - Plano,யூ.எஸ்.ஏ
06-ஏப்-202023:12:42 IST Report Abuse
naadodi"தமிழர்களை மூடர்களாக்கி" அந்த வேலையெல்லாம் உங்க ராமசாமி நாயக்கரூ , கட்டுமரம், சுடலை, கோரமணி, சைக்கோ , குருமா, பேமான்...இவிகெல்லாம் செஞ்சுப் புட்டாக..இந்த சிறுபய புள்ள மேல பழியைப் போடாதீங்கோ...
Rate this:
Cancel
Tamilnesan - Muscat,ஓமன்
03-ஏப்-202020:02:28 IST Report Abuse
Tamilnesan வல்லரசுகள் என்று மார் தட்டிக்கொள்ளும் நாடுகள் இன்னும் கொரானா வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டு பிடிக்காததின் மர்மம் என்ன? வல்லரசுகள் சீனாவிற்கு எதிராக கடுமையான பொருளாதார தடை விதிக்காததின் காரணமென்ன? சீனாவில் பெய்ஜிங், ஷாங்காய் போன்ற நகரங்களில் கொரானா தாக்கம் சிறிதும் இல்லையே. என்ன காரணம்? இது போன்ற பல சந்தேகங்கள் சாதாரண மக்களுக்கு இருக்கும்போது பெரியண்ணன் அமெரிக்கா மற்றும் வல்லரசு நாடுகள் மவுனம் காப்பதின் காரணமென்ன.........இது போல என்ன என்ன என்று ஆயிரம் "என்ன" இருக்கிறது. பதில் சொல்வார் யாரோ
Rate this:
Cancel
Arun kumar - Jubail,சவுதி அரேபியா
03-ஏப்-202015:54:07 IST Report Abuse
Arun kumar அகத்திய நாடி சோதிடர் பாபு அக்டோபர் 2019 சொல்லிவிட்டார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X