பொது செய்தி

தமிழ்நாடு

பரவை முனியம்மா மரணம்: ஓய்ந்தது நாட்டுப்புற சூறாவளி

Added : மார் 29, 2020
Share
Advertisement
 பரவை முனியம்மா மரணம்: ஓய்ந்தது நாட்டுப்புற சூறாவளி

சென்னை:நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா, 83, நேற்று காலமானார்.
பிரபல நாட்டுப்புற பாடகியும், நடிகையுமான பரவை முனியம்மா. மதுரையில், பரவை என்ற ஊரை சேர்ந்தவர் என்பதால், பரவை முனியம்மா என்று அழைக்கப்பட்டார்.சிறுநீரக கோளாறு உள்ளிட்ட, பல்வேறு உடல்நல பிரச்னைகளால் சிகிச்சை பெற்று வந்த அவர், கொஞ்சம் கொஞ்சமாக உடல் நலம் தேறினார். அவரது சிகிச்சைக்கு, திரையுலகினர் பலரும் உதவினர்.இந்நிலையில், மதுரையில் வசித்து வந்த பரவை முனியம்மா, கடும் மூச்சுத்திணறல் காரணமாக, நேற்று அதிகாலை, வீட்டிலேயே காலமானார். மறைந்த பரவை முனியம்மாவுக்கு, மூன்று மகன்கள், மூன்று மகள்கள் உள்ளனர். விக்ரம் உடன், துாள் படத்தில், 'சிங்கம் போல நடந்து வரான்…' என்ற பாடலை பாடி, சினிமாவில் அறிமுகமானார். இவர், 80க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். கடைசியாக சிவகார்த்திகேயன் உடன், மான் கராத்தே படத்தில் நடித்தார்.கடந்த, 30 ஆண்டுகளாக நாட்டுப்புற பாடல்கள் வாயிலாக, ரசிகர்களின் உள்ளத்தை கொள்ளை கொண்டவர்.
இவருக்கு, தமிழக அரசு, கலைமாமணி விருது வழங்கி கவுரவித்தது. கிராமப்புற சமையல் கலை தொடர்பான, 'டிவி' நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று, மண்மனம் மாறாத உணவு வகைகளை சமைத்து காட்டி, இல்லத்தரசிகளின் உள்ளத்தை கவர்ந்தார். மறைந்த பரவை முனியம்மாவின் இறுதிச்சடங்கு, மதுரையில், நேற்று மாலை நடந்தது. மறைந்த பரவை முனியம்மாவுக்கு திரையுலகை சேர்ந்த பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். கொரோனா பாதிப்பால், ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், ஒரு வாரத்தில், நடிகர் மற்றும் இயக்குனர்,விசு, நடிகர் மற்றும் மருத்துவர், சேதுராமன், நடிகை மற்றும் நாட்டுப்புற பாடகி, பரவை முனியம்மா என, மூவரை திரையுலகம் இழந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X