பொது செய்தி

தமிழ்நாடு

களமிறங்கியது தோட்டக்கலை துறை: 2 நாளில் 1, 897 டன் காய்கறி விற்பனை

Added : மார் 29, 2020
Share
Advertisement
 களமிறங்கியது தோட்டக்கலை துறை: 2 நாளில் 1, 897 டன் காய்கறி விற்பனை

சென்னை:தோட்டக்கலை துறை வாயிலாக, மாநிலம் முழுவதும், இரண்டு நாட்களில், 1,897 டன் காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
'கொரோனா' தடுப்பு நடவடிக்கையாக, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ளது.இதனால், சென்னை, கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி மார்க்கெட்டுகளுக்கு, பொது மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு உள்ளது. சில்லரை வியாபாரிகள் மட்டுமே, அங்கு அனுமதிக்கப்படுகின்றனர். மாநிலம் முழுவதும், சில்லரை விற்பனையில், காய்கறிகள் விலை பல மடங்கு உயர்த்தப்பட்டுள்ளதால், பொது மக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர். 'டான்ஹோடா'இப்பிரச்னைக்கு தீர்வு காணும் வகையில், தோட்டக்கலைத் துறையின் கீழ் இயங்கும், 'டான்ஹோடா' நிறுவனம் வாயிலாக, காய்கறிகள், பழங்கள் மற்றும் கீரைகள் விற்பனை துவங்கியுள்ளது. வெண்டை, தக்காளி, பச்சை மிளகாய், சின்ன வெங்காயம், கோஸ், சுரைக்காய், முள்ளங்கி, பலவகை கீரைகள், முருங்கை, பூசணிக்காய், மரவள்ளி உள்ளிட்டவை, விவசாயிகளிடம் இருந்து, நேரடியாக கொள்முதல் செய்யப்பட்டு வருகின்றன.180 வாகனங்கள்டான்ஹோடாவின், 180 வாகனங்கள், இதற்காக பயன்படுத்தப்படுகின்றன. பொது மக்கள் வசிக்கும் இடங்களுக்கே சென்று, காய்கறிகள் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.மாவட்ட தலைநகரங்களில் உள்ள, டான்ஹோடா விற்பனை மையங்கள், மாநில தோட்டக்கலை பண்ணைகள், சில மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகம் மற்றும் உழவர் சந்தைகளிலும், விற்பனை நடக்கிறது.
சென்னையை பொறுத்தவரை, மூன்று வாகனங்கள், வடசென்னை, தென்சென்னை, மத்திய சென்னை பகுதி களை சுற்றி, காலை நேரங்களில், காய்கறிகளை விற்பனை செய்கிறது.மாதவரம் தோட்டக்கலை பண்ணை, தேனாம்பேட்டை செம்மொழி பூங்கா, அண்ணாநகர் மற்றும் திருவான்மியூர்தோட்டக்கலை கிடங்கு ஆகியவற்றிலும், விற்பனை நடந்து வருகிறது. இவ்வாறு, மாநிலம் முழுவதும், இரண்டு நாட்களில், 1,897 டன் காய்கறிகள், தோட்டக்கலை துறையால் விற்பனைசெய்யப்பட்டுள்ளன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X