ஜெர்மன் அமைச்சர் தற்கொலை!

Updated : மார் 30, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement

பெர்லின்:ஜெர்மனியின் ஹெஸ்ஸி மாநில நிதி அமைச்சர் தாமஸ் ஷேஃபர் (54) சனிக்கிழமை ரயில் பாதையின் அருகே இறந்து கிடந்தார். அவர் தற்கொலை செய்து கொண்டதாக அரசு தரப்பில் கூறுகின்றனர்.latest tamil newsகொரோனா வைரஸால் ஏற்பட்ட பொருளாதார வீழ்ச்சியை, எவ்வாறு சமாளிப்பது என்பது குறித்து ஆழ்ந்த கவலையில் ஷேஃபர் இருந்ததாகவும், அதனால் ஏற்பட்ட மன அழுத்தம் காரணமாக, அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் ஹெஸ்ஸி மாநில பிரதமர் வோல்கர் போபியர் தெரிவித்துள்ளார். மேலும் இச்சம்பவம் அதிர்ச்சியையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்தியுள்ளதாக கூறினார்.
ஜெர்மனியின் பொருளாதார தலைநகரான பிராங்க்பர்ட் ஹெஸ்ஸி மாநிலத்தில் தான் அமைந்துள்ளது. மிகப்பெரிய வங்கிகளான ஐரோப்பிய மத்திய வங்கி, டாய்ச் வங்கி உள்ளிட்டவை இங்கு உள்ளது. 10 ஆண்டுகளாக ஹெஸ்ஸி மாநிலத்தின், நிதித் தலைவராக இருந்த ஷேஃபர், கொரோனா வைரஸ் ஏற்படுத்தியுள்ள பொருளாதார தாக்கத்தை, நிறுவனங்களும், தொழிலாளர்களும் சமாளிக்க, இரவும் பகலும் பணியாற்றி வந்துள்ளார். இது அவருக்கு கடும் மன உளைச்சலை ஏற்படுத்தியிருக்கூடும் என்கின்றனர்.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A.George Alphonse - Visakhapatnam,இந்தியா
31-மார்-202014:10:21 IST Report Abuse
A.George Alphonse இவர்தான் உண்மையான அரசியல் வாதியும்,மக்களுக்காக,நாட்டுக்காக தன்னையே தியாகம் செய்த தியாக செம்மல். இவர் இறந்தது ஜெர்மன் நாட்டுக்கே பேரிழப்பு.RIP.
Rate this:
Cancel
Nepolian S -  ( Posted via: Dinamalar Android App )
30-மார்-202013:19:10 IST Report Abuse
Nepolian S நம்ம நாட்டுலயிம் சில பேர் இருக்காங்கோ...
Rate this:
dandy - vienna,ஆஸ்திரியா
30-மார்-202013:56:44 IST Report Abuse
dandyமுன்னாள் அதிபர் HELMEDT SCHMIDT ..தனது கட்சி பெயரில் கவனிக்க சொந்த பெயரில் அல்ல அண்டைய நாட்டில் வங்கி கணக்கு வைத்து இருந்ததற்காக அரசியலில் இருந்தே வெளியேற்ற படடார்....இன்றைய அதிபர் ANGELA வின் வாரிசு என்று அழைக்க படட பிரபுக்கள் குடும்பத்தை சேர்ந்த இளம் அரசியல் வாதி ஒருவர் தனது DOCTORATE THESIS வேறு ஒருவர் எழுதியது என்ற காரணத்திற்காக அரசியலில் அஸ்தமனம் ..ஹி ஹி ஹி நம்ம கட்டுமரம் பயமுறுத்தி இலவச DARKDAR பெற்றவர் படம் மகனோ கேள்விப்படாத அமெரிக்க பல்கலைக்கழக DARKDAR படடம். பணம் கொடுத்து வாங்கியவர் ..ஜேர்மன் அரசியவாதிகள் இவர்களிடம் பிச்சை வாங்க வேண்டும்...
Rate this:
Cancel
30-மார்-202013:01:17 IST Report Abuse
இனியவன் . அதைப் பார்த்து கத்துக்குங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X