அரசியல் செய்தி

தமிழ்நாடு

430 குடும்பம் தவிப்பு ஸ்டாலின் கடிதம்

Updated : மார் 30, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (40)
Share
Advertisement
 430 குடும்பம் தவிப்பு ஸ்டாலின் கடிதம்

சென்னை:'இந்தோனேஷியாவில் தவிக்கும், 430 தமிழர் குடும்பத்தினரை, தாயகத்திற்கு அழைத்து வர வேண்டும்' என, பிரதமர் மோடிக்கு, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்து உள்ளார்.
ஸ்டாலினுக்கு, இந்தோனேஷிய தமிழ்ச்சங்கம் அனுப்பியுள்ள கடிதம்:இந்தோனேஷியாவில், கொரோனா பாதிப்பு மிகவும் வேகமாக அதிகரித்து வருகிறது. இங்கு, தமிழகத்தைச் சேர்ந்த, 400 குடும்பங்கள், தலைநகர் ஜகார்தாவிலும், 30 தமிழ் குடும்பங்கள், பாண்டுங் நகரத்திலும் வாழ்ந்து வருகின்றனர்.அவர்கள் அனைவரும், தமிழகம் வர விரும்புகின்றனர். ஆனால், வர முடியாமல் தவிக்கின்றனர். தாங்கள், பிரதமர் மோடி, முதல்வரிடம் பரிந்துரைத்து, விமான போக்குவரத்து ஏற்பாடு செய்து தர வேண்டும்.இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.இதைத் தொடர்ந்து, அவர்கள் தாயகம் திரும்ப நடவடிக்கை எடுக்கும்படி, பிரதமர் மோடிக்கு, ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார்.
இதுகுறித்து, டுவிட்டர் பக்கத்தில், ஸ்டாலின் கூறியிருப்பதாவது:இந்தோனேஷியாவில் தவிக்கும், 430 தமிழ் குடும்பத்தினர், தமிழகம் வருவதாக தகவல் தெரிவித்துள்ளனர். அவர்களை உடனே, அங்கிருந்து அழைத்து வந்து, பாதுகாப்புடன் வீட்டிற்கு அனுப்பி வைத்து உதவும்படி பிரதமர் மற்றும் முதல்வரிடம் கேட்டுள்ளேன்; கடிதமும் எழுதியுள்ளேன்..இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Modify India - Calgary,கனடா
31-மார்-202001:24:39 IST Report Abuse
Modify India இந்தோனேசியாவில் தமிழர்கள் என்றால் அது பசங்க அதான் இவ்ளோ அக்கறை அய்யாவுக்கு முதலில் இந்த திராவிட திருட்டு கும்பலை அடியோடு அளிக்க வேண்டும் திராவிடர் கழகம் என்று ஒன்றை ஆரம்பித்து சித்த , ஆயுர்வேதம் ஆகிய நாட்டு மருந்துகளை முன்னேற விடாமல் தடுத்த கும்பல் . சித்த என்பது தமிழ்நாட்டிற்க்கே சொந்தமானது . ஆனால் சித்த வில் சித்தர் இருக்கிறார் - அது மூட நம்பிக்கை என்று சொல்லி அதை அளித்தார்கள் மேலும் குலா தொழில் கற்க வேண்டும் என்று ராஜாஜி சொன்னதை ' , நான் ஏன் கேக்கணும் ?' னு சொல்லியே கை வைத்திய முறைகளை ஒளிந்தார்கள் ரெசீர்வதின் என்று ஒன்றை கொண்டு வந்து திறமை ஆன டார்கள் உருவாகுவதை தடுத்தார்கள் இப்பொழுது முலடிஸ்பிசியலிட்டி ஹாஸ்பிடல் அண்ணா அறிவாலயம் அருகில் தான் உள்ளது - அங்க பனி புரியும் டாக்டர் , nurse களுக்கு அடைக்கலம் கொடுப்பார்களா ? அவர்கள் இப்பொழுது தீண்ட தகாதவர்கள் - அவனை தொட கூடாது , சுத்தம் இல்லை இதை தானே இவர்கள் கரைத்து கொட்டும் சாஸ்திரமும் சொல்கிறது ? மக்கள் இதை புரிந்து கொண்டு திராவிடர் கட்சிகளுக்கு பாடை கட்ட வேண்டும்
Rate this:
Cancel
Modify India - Calgary,கனடா
31-மார்-202001:19:44 IST Report Abuse
Modify India indonesiavil tamilargal endraalea Adhaan ivlo akkarai ayyaavukku mudhalil indha dravida thiruttu kumbalai adiyodu alika vendum dravidar kalagam endru onrai aarambithu sidha, ayurvedham aagiya naattu marundhugalai munnaera vidaamal thadutha kumbal. Sidha enbadhu tamilnaatirkae sondhamaanadhu. Aanaal sidha vila sidhar irukiraar - adhu mooda nambikai endru solli adhai alithaargal melum kula tholil karka vendum endru rajaji sonnadhai 'paapaan solraan, naan en kaekanum?' nu solliyae kai vaithiya muraigalai olithaargal reservation endru ondrai kondu vandhu thiramai aana doctorgal uruvaakuvadhai thaduthaargal ippoludhu multispeciality hospital anna arivaalayam arugil dhaan ulladhu - anga pani puriyum doctor, nurse galukku adaikalam kudupaargalaa? avargal ippoludhu theenda thagaadhavargal - avanai thoda koodaadhu, sutham illai idhai thaanae ivargal karaithu kottum saasthiramum solgiradhu? Makkal idhai purindhu kondu dravidar katchigalukku paadai katta vendum
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
30-மார்-202021:43:23 IST Report Abuse
அம்பி ஐயர் இப்படி எல்லாம் பொய்யைச் சொல்லி.... அங்க இருக்குற மார்க்கத்து ஆளுங்களை கொரானோவோடு இங்க கூட்டிட்டு வந்து.... சிஏஏ எதிர்ப்பு.... என்ஆர்சி எதிர்ப்பையும் அதே சமயத்துல மதம் மாற்றும் தொழிலையும் தடையில்லாமல் செய்யிறதுக்கு செய்கிற சதியோ... எனத் தோன்றுகிறது..... அப்படி உண்மையிலேயே அக்கறை இருந்தால்....இவுருக்குத் தான் சொந்தமாக ஃப்ளைட் இருக்கிறதே..... அப்படி இல்லையென்றாலும் வாடகிக்கு எடுத்து... அரசிடம் அனுமதி வாங்கி இவுரே நேரடியாகச் சென்று அனைவரையும் அழைத்துவந்து கோபால புரத்திலயும்..... சொறிவாலயத்திலயும்.... தங்க வைக்கலாமே....??? செய்வாரா...???
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X