திடீர் ஊரடங்கு உத்தரவால் மக்களிடம் பதற்றம்: ராகுல்

Updated : மார் 30, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (67)
Share
Advertisement
 திடீர், ஊரடங்கு, உத்தரவால், மக்களிடம், பதற்றம்,ராகுல், coronavirus, curfew, nationwide lockdown, economic slowdown, Rahul Gandhi, corona, PM Modi, opposition

புதுடில்லி:'கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்க, திடீரென, நாடு முழுதும் ஊரடங்கு உத்தரவு, பிறப்பிக்கப்பட்டது, மக்களிடையே பெரும் குழப்பத்தையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது' என, காங்கிரஸ், எம்.பி., ராகுல் தெரிவித்துள்ளார்.


அவசியம்

இது தொடர்பாக, பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், ராகுல் கூறியிருப்பதாவது:
வளர்ந்த நாடுகளில், கொரோனா வைரஸ் பரவு வதைக் கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவுக்குப் பதிலாக, வேறு பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.இந்தியாவின் சூழல் மிகவும் வித்தியாசமானது என்பதை, நாம் புரிந்துகொள்வது முக்கியம்.

முழுமையான ஊரடங்கு உத்தரவை விட, வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டியது அவசியம்.நாள்தோறும் கிடைக்கும் ஊதியத்தை நம்பி வாழும் கூலித் தொழிலாளர்கள், ஏழைகள் இருக்கும் நாடு இந்தியா. திடீரென ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், அவர்களின்
பொருளாதாரச் செயல்பாடுகள் முடக்கப்பட்டுள்ளன.

கொரோனாவால் ஏற்படும் உயிரிழப்புகளைவிட, பொருளாதார முடக்கத்தால் ஏற்படும்
விளைவுகள் மோசமாக இருக்கும் என, அஞ்சுகிறேன்.திடீரென அறிவிக்கப்பட்ட ஊரடங்கு,
மக்களிடையே பெரும் பதற்றத்தையும், குழப்பத்தையும் ஏற்படுத்திஉள்ளது.தொழிற்சாலைகள், சிறு தொழில்கள், கட்டுமான தொழில்கள் முடங்கியுள்ளதால், பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள், தங்களின் சொந்த மாநிலங்களுக்கு செல்கின்றனர்.


உதவ வேண்டும்

இவர்களைப் போன்ற ஏழைத் தொழிலாளர்களுக்கு தங்க இடம் அளித்து, அவர்களின் வங்கிக் கணக்கில், அடுத்த சில மாதங்களுக்கு, நேரடியாக பணம் செலுத்தி, அரசு உதவ வேண்டும்.
முழுமையான ஊரடங்கு, லட்சக்கணக்கான மக்களை வேலையின்மையில் தள்ளும். இதனால், அவர்கள் சொந்த ஊர்களுக்கு செல்வர்.இதன் மூலம் வீடுகளிலும், கிராமங்களிலும் இருக்கும் முதியோர்கள், நோய் தாக்குதலுக்கு ஆளாக நேரிடும். இதனால், பிரமாண்ட உயிரிழப்பு நேரிடும்.
இவ்வாறு, அவர் கடிதத்தில் கூறியுள்ள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (67)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
unmaitamil - seoul,தென் கொரியா
30-மார்-202022:42:33 IST Report Abuse
unmaitamil தமிழக பப்பும், டெல்லி பப்பும் சிறு குழந்தைகள். பெரியவர்கள் பேசும்போது சிறு குழந்தைகள் இடையில் வந்து தத்தக்க புக்கக்க என்று பேசும். அதில் பொருள் ஒன்றும் இருக்காது. அதுபோல்தான் இந்த இரண்டு பப்புகளும். பாவம் விட்டுவிடுவோம்.
Rate this:
Cancel
அம்பி ஐயர் - நங்கநல்லூர்,இந்தியா
30-மார்-202021:46:49 IST Report Abuse
அம்பி ஐயர் //முழுமையான ஊரடங்கு உத்தரவை விட, வேறு நடவடிக்கைகளை எடுத்திருக்க வேண்டியது அவசியம்.// அப்படி என்ன வேறு நடவடிக்கைகள் எடுப்பதாம்....??? அதையும் கொஞ்சம் சொல்லியிருந்தால் பப்புவுக்கு கொஞ்சமாவது மூளை இருக்கிறது என ஒத்துக்கொண்டிருக்கலாம்....
Rate this:
Cancel
ராமதாசன் - chennai,இந்தியா
30-மார்-202019:59:45 IST Report Abuse
ராமதாசன் வளர்ந்த நாடுகள் என்று எந்த நாடுகளை சொல்றார் - அமெரிக்கா / ஐரோப்பா / ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் எல்லாம் 6 மாதத்திற்கு ஊரடங்கு போட்டு இருக்கு. எதுவும் தெரியாத மாதிரி பேச வேண்டியது.. இதை பத்திரிக்கைகளும் / ஊடகங்களும் பெரிதாக வேறு சொல்கின்றன
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X