பொது செய்தி

இந்தியா

'என்னை மன்னியுங்கள்!' பிரதமர் மோடி நாட்டு மக்களிடம் வேண்டுகோள்

Updated : ஏப் 06, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (62)
Share
Advertisement
'என்னை, மன்னியுங்கள்!', பிரதமர் மோடி ,நாட்டு மக்களிடம், வேண்டுகோள்

புதுடில்லி:''கொரோனா வைரசை கட்டுப்படுத்த, ஊரடங்கு உத்தரவு பிறப்பிப்பதை தவிர வேறு வழியில்லை. ஊரடங்கால் ஏற்பட்ட பாதிப்புக்காக, நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோருகிறேன். கொரோனாவை தடுப்பது, வாழ்வா,சாவா போராட்டம் போன்றது. இந்த கொடிய நோயை நம்மால் வெல்ல முடியும் என்ற நம்பிக்கை உள்ளது,''என, பிரதமர் நரேந்திர மோடி உருக்கமாக பேசினார்.

பிரதமர் நரேந்திர மோடி, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிறன்று, அகில இந்திய
வானொலியில், 'மன் கி பாத்' எனப்படும், 'மனதின் குரல்' நிகழ்ச்சி மூலம், நாட்டு மக்களுக்கு உரையாற்றி வருகிறார்.

மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் மக்களுடன் பேசினார் பிரதமர். கொரோனா எதிர்ப்பு போரில் அரசு போட்ட ஊரடங்கு உத்தரவால் மக்கள் வீட்டில் முடங்கி கிடக்கும் சிரமம் நன்றாக புரிகிறது என்றார்.


21 நாள் ஊரடங்கு

அன்றாட நிகழ்வுகள், மாணவர்கள் தேர்வு எழுதுவதற்கான அறிவுரைகள் மற்றும் பல்வேறு
சாதனைகள் குறித்து, இந்த நிகழ்ச்சியில் பிரதமர் பேசுவது வழக்கம். கொரோனா வைரஸ்
பரவுவதை தடுப்பதற்காக, நாடு முழுதும், 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டு உள்ள நிலையில், மன் கி பாத் நிகழ்ச்சியில், பிரதமர் நேற்று பேசியதாவது:உலகின்பல்வேறு
நாடுகளில் பெரும் பாதிப்பை ஏற்படுத்திய கொரோனா வைரஸ், நம்நாட்டிலும் தாக்கத்தை
ஏற்படுத்தி வருகிறது.

இந்த வைரஸ், மேலும் பரவாமல் தடுப்பதற்காகவே, 21 நாள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.இந்த உத்தரவை பிறப்பித்ததற்காக, சிலர் என் மீதுகோபமாக இருக்கலாம். ஊரடங்கு உத்தரவால், ஏழை சகோதர -- சகோதரிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுஉள்ளனர்.'நம்மை இப்படி ஒரு நெருக்கடியான நிலையில் பிரதமர் தள்ளி விட்டு விட்டாரே' என, அவர்கள் நினைக்கலாம்.
ஊரடங்கால் பாதிக்கப்பட்டுள்ள ஏழை மக்களிடம், மன்னிப்பு கோருகிறேன். நீங்கள்
மன்னிப்பீர்கள்என உறுதியாகநம்புகிறேன்.

அரசு அறிவித்துள்ள கடுமையான கட்டுப்பாடுகளால், மக்கள், பல்வேறு பிரச்னைகளை சந்திக்க வேண்டியுள்ளது என்பதை அறிந்துள்ளேன். ஆனால், கொடிய நோயான கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதற்கு, இதைத் தவிர வேறு வழியில்லை.


சிறந்த வழி

நம் நாட்டில், 130 கோடி மக்கள் உள்ளனர். இவர்களை காப்பாற்ற வேண்டிய கடமை எனக்கு
உள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்துவது, வாழ்வா, சாவா போராட்டம் போன்றது.
கொரோனாவை கட்டுப்படுத்துவதற்கு ஊரடங்கு தான் சிறந்த வழி என உலகமே சொல்கிறது. எனவே, நாட்டு மக்கள்ஒவ்வொருவரதுபாதுகாப்பும்உறுதி செய்யப்பட வேண்டும்.அரசு
அறிவித்து உள்ள கட்டுப்பாடு களால் ஏதாவதுஅசவுகரியம்ஏற்பட்டிருந்தால், அதற்காக மீண்டும் ஒருமுறை நாட்டுமக்களிடம்மன்னிப்புகோருகிறேன்.

'எந்த ஒரு பிரச்னையையும் துவக்கத்திலேயே கண்டறிந்து, அதை முளையிலேயே
கிள்ளியெறிய வேண்டும்' என,நம் நாட்டில் பழமொழி உண்டு. கொரோனாவும்அப்படித் தான்;

இதை துவக்கத்திலேயே தடுக்காவிட்டால், பெரும் பாதிப்புகளை சந்திக்க நேரிடும்.
கொரோனா பாதிப்பு உள்ளதா என கண்டறிவதற்காக, சிலரை வீடுகளிலும், முகாம்களிலும்
தனிமைப் படுத்தியுள்ளோம். இவர்களை, அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள், மோசமாக கையாளுவதாக தகவல்கள் வருகின்றன; இது, மிகவும் கவலை அளிக்கிறது.

இதுபோன்ற சம்பவங்கள் எனக்கு மிகுந்த மன வேதனையை தருகின்றன; இது, மிகவும் துரதிர்ஷ்டவசமானது. இப்போது ஏற்பட்டுள்ள நெருக்கடியான சூழலை, நாம் புரிந்து கொள்ள வேண்டும். சமூக விலகலை பின்பற்ற வேண்டுமே தவிர, உணர்வு மற்றும் மனிதாபிமான ரீதியாக விலகி இருப்பது சரியான செயல் அல்ல.கொரோனா வைரஸ், உலகம் முழுவதும் பாதிப்பை
ஏற்படுத்தி வருகிறது. அனைவரும் ஒருங்கிணைந்து இதை முறியடிக்க வேண்டும். அடுத்த பல நாட்களுக்கு, நாட்டு மக்கள், தங்களை தாங்களே பாதுகாக்க வேண்டும். தயவு செய்து, 'லட்சுமண ரேகை'யை தாண்ட வேண்டாம்.

விதிமுறைகளை மீறி, சிலர், வீதிகளில் நடமாடுவதாக தகவல்கள் வருகின்றன. பிரச்னையின் தீவிரத்தை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகளை மீற வேண்டாம். விதிமுறைகளை மீறினால், கொரோனா வைரசிடமிருந்து, நம்மை பாதுகாப்பது கடினம்.உலகின் பல்வேறு நாடுகளில், 'கொரோனா வைரஸ் என்னை பாதிக்காது' என கூறி கிண்டலடித்தவர்கள் எல்லாம், இப்போது எவ்வளவு வருந்துகின்றனர் என்பது அனைவருக்கும் தெரியும். பலரது வாழ்க்கையே பறிபோய் விட்டது.

இந்த நெருக்கடியான நேரத்தில், நாட்டு மக்களின் அன்றாட வாழ்வு சுமுகமாக இருப்பதற்காக, எலெக்ட்ரீஷியன், மளிகை கடை உரிமையாளர்கள், தொலை தொடர்பு சேவை வழங்குவோர் கடுமையாக உழைக்கின்றனர். அவர்கள், 'ஹீரோ'க்களாக உருவெடுத்துள்ளனர்.
கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில், நாடு முழுவதும் உள்ள டாக்டர்கள், நர்சுகள், சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி ஊழியர்கள், போர் வீரர்களைப் போல் பணியாற்றி வருகின்றனர். அவர்களைப் பாராட்ட, வார்த்தைகள் இல்லை.

இவர்களது நலனும் முக்கியமானது. இதை கருத்தில் வைத்துத் தான், மருத்துவர்கள் மற்றும் சுகாதார பணிகளில் ஈடுபட்டுள்ள, 20 லட்சம் பேருக்கு, 50 லட்சம் ரூபாய்க்கு காப்பீடு
அறிவிக்கப்பட்டுள்ளது.ஊரடங்கு உத்தரவால் வீடுகளுக்குள் இருக்கும் மக்கள், தங்களைத்
தாங்களே புதுப்பித்துக் கொள்ள இந்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும். பழைய பொழுது போக்குகளை மேற்கொள்வது, பழைய நண்பர்களை தொடர்பு கொண்டு பேசுவதற்காக, இந்த நேரத்தை பயன்படுத்தலாம்.இவ்வாறு, பிரதமர் பேசினார்.


பாதிக்கப்பட்டவர்களுடன் உரையாடல்

பிரதமர் மோடி, நேற்றைய, 'மன் கி பாத்' நிகழ்ச்சியின் போது, கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த இரண்டு பேரிடமும், கொரோனாவுக்கு சிகிச்சை அளிக்கும் இரண்டு
டாக்டர்களிடமும் உரையாடிய பதிவும் ஒலிபரப்பானது.கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்த ரமகாம்பா தேஜாகூறுகையில், ''நோய் பாதிப்பு ஏற்பட்டதும், பயந்தேன்.
டாக்டர்கள் தைரியம்அளித்ததால், அந்த பயம் போய் விட்டது,'' என்றார்.

ஆக்ராவைச் சேர்ந்த, அசோக் கபூர் கூறுகையில், ''நானும், என் குடும்பத்தினரும், ஐரோப்பிய நாடான இத்தாலியில் இருந்து வந்தோம். கொரோனா பாதிப்பு ஏற்பட்டதால், சிகிச்சை பெற்று, குணமடைந்தோம்,'' என்றார். இதையடுத்து, 'கொரோனா தடுப்பு குறித்து, நாட்டு மக்களிடம்
விழிப்புணர்வை ஏற்படுத்துங்கள்' என, அவரிடம் பிரதமர் கூறினார்.

கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் டாக்டர்கள் நிதிஷ் குப்தா, போர்ஸ் ஆகியோர் கூறுகையில், 'வைரஸ் பாதிப்புக்காக சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ள
நோயாளிகளிடையே, கடும் பீதி நிலவுகிறது. அவர்களது மன உளைச்சலை போக்க, மன நல ஆலோசனைகளை வழங்கவேண்டும். பெரும்பாலான நோயாளிகள் பூரண குணமடைந்து,
வீடுதிரும்பியுள்ளனர்' என்றனர்.

Advertisement
வாசகர் கருத்து (62)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
chenar - paris,பிரான்ஸ்
31-மார்-202003:08:56 IST Report Abuse
chenar இதில் மன்னிப்பதற்கு என்ன இருக்கிறது ? சில குறைபாடுகள் இருந்தாலும் மிக நன்றாக இந்த நேரத்தில் செயல்படுகிறீர்கள் எங்கள் அனைவரின் ஒத்துழைப்பும் உங்களுக்கு உண்டு வாழ்த்துக்கள்
Rate this:
Cancel
Dr.C.S.Rangarajan - Fort Worth,யூ.எஸ்.ஏ
30-மார்-202020:12:47 IST Report Abuse
Dr.C.S.Rangarajan பிரதம மந்திரியின் தனிப்பட்ட முடிவாக இருக்கக்கூடுமா? பாராளுமன்ற உறுப்பினர் பலர் எந்த அளவு விஞ்ஞான அறிவுபடைத்தவரோ அந்தநிலையைவிட விஞ்ஞான அறிவுப்படைத்தவர்களுடன் உறவாடி, விவாதித்ததினால் சில முடிவுகளை விரும்பியோ, விரும்பாமலோ எடுக்கத்தான் வேண்டும். 'எல்லோரும் அவரவர்' இடங்களுக்கு சென்றபின் முடிவு எடுக்கும் நிலையில் கொரோண வியாதி நமக்கு நேரமும் காலமும் நிர்ணயித்து தரவில்லை. அடுத்த தலைமுறையை பற்றி பிரதமர் கவலை கொள்ளும்போது, அடுத்த தேர்தலை நினைவில் வைத்திருப்போரை கவனத்தில் கொள்ளும்போது காரோண நம்மையும் தாண்டி சென்றிருக்கும். நடந்துகொண்டிருப்பவைகள் நன்மையைத்தான் தரும் மனம் தளராது நம்பிக்கையுடன் செல்வதுதான் "விவேகம்". அதற்கும் 'பஞ்சம்' வரும் நிலைமைதனை உருவாக்கக்கூடாது.
Rate this:
Cancel
Gopinath Raman - THANE,இந்தியா
30-மார்-202019:22:01 IST Report Abuse
Gopinath Raman Central Government failed to stop this virus to enter India. Now you guys are acting in front of the people. So funny. God will decide whether to forgive or take you on.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X