கொரோனா தாக்கத்திலும் வேகமாக வளர்ந்து வரும் இந்தியா..!

Updated : மார் 29, 2020 | Added : மார் 29, 2020 | கருத்துகள் (21)
Share
Advertisement

கொரோனா தாக்கத்திலும், ஜி 20 நாடுகளில் வேகமாக வளர்ந்து வரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குமென ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



latest tamil news



கொரோனா தொற்று அச்சுறுத்தல் காரணமாக இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி 6 சதவீதத்தில் இருந்து 2.1 சதவீதமாக குறையுமென எக்னாமிஸ்ட் இண்டெலிஜெண்ட் யூனிட் கணித்துள்ளது. இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி வெறும் 2.1 சதவீதமாக இருக்குமென்பது மிகப்பெரிய சரிவு என்றாலும் அமெரிக்கா, ஐரோப்பிய மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளோடு ஒப்பிடுகையில் இந்தியாவின் ஜி.டி.பி வளர்ச்சி அதிகமாகும். ஜி 20 நாடுகளை பொறுத்தவரை இந்தியாவுடன், சீனா மற்றும் இந்தோனேஷியா மட்டுமே 1 சதவீத வளர்ச்சி அடைந்தால் மந்தநிலையை தவிர்க்க இயலும்.
கொரோனாவால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட இத்தாலியின் பொருளாதார வளர்ச்சி மைனஸ் 7 சதவீதமாக இருக்குமென கணிக்கப்பட்டுள்ளது.
கொரோனா தாக்கத்தால் அனைத்து நாடுகளின் பொருளாதார வளர்ச்சியில் மாற்றம் இருக்குமென கணித்துள்ளது. அதன் முடிவுகள் இருண்ட நிலையாக இருப்பதை காட்டுகிறது. 3 நாடுகள் தவிர அனைத்து நாடுகளும் இந்தாண்டு மந்த நிலையை சந்திக்கும். உலகளவில் பொருளாதார வளர்ச்சி 2.2 சதவீதமாக சுருங்கும்.
இருண்ட பொருளாதாரத்தில் மீட்பு என்பது கொரோனாவின் எதிர்கால எழுச்சியால் பாதிக்கப்படும். உலக பொருளாதார வரைபடம் இருண்டு காணப்படுகிறது. உலகம் முழுவதும் அனைத்து வளர்ந்த நாடுகளில் பொருளாதார மந்தநிலை காணப்படும். இரண்டாவது பாதியில் பொருளாதார மீட்பு துவங்குமென கணித்துள்ள இ.ஐ.யூ, இதிலும் கொரோனாவின் இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை பரவலால் வளர்ச்சியை மேலும் மூழ்கடிக்குமெனவும் கூறியுள்ளது.
வரவிருக்கும் கடன் நெருக்கடி குறித்து எச்சரித்துள்ளதோடு ஊரடங்கிற்கு பிந்தைய நிலை குறித்து தெளிவாக குறிப்பிடவில்லை. தற்போதைய நிலையில், ஊரடங்கிற்கு பிந்தைய கோட்பாடு குறித்து கணிப்பது கடினம் என்றாலும், நிலையற்ற தன்மை அதிகம் இருப்பதால் இறுதியாக வருவாய் குறைந்து, செலவு அதிகரிப்பால் பல நாடுகளும் கடனில் மூழ்குமெனவும் இ.ஐ.யூ இயக்குனராக அகத்தே டெமரைஸ் கணித்துள்ளார்.
அமெரிக்காவின் பொருளாதார வளர்ச்சி 2.8 சதவீதமாக இருக்குமெனவும், கொரோனா தொற்றை அமெரிக்க நிர்வாகம் மோசமாக கையாள்வதால் கொரோனா தொற்று அங்கு வேகமாக பரவி வருகிறது. இது டிரம்ப் மீண்டும் தேர்தலில் போட்டியிடுவதை கடினமாக்குவதோடு, வேலைவாய்ப்பின்மை வேகமாக அதிகரித்து வருகிறது.
சார்ஸ் பாதிப்பால் ஏற்பட்ட பாதிப்பை விட சீன பொருளாதாரம் அதிகம் பாதிப்பை சந்திக்கும். சீன பொருளாதார வளர்ச்சி 6.1 சதவீதமாக இருக்குமென கணிக்கப்பட்ட நிலையில் உண்மையில், 2020ம் ஆண்டில் அதன் வளர்ச்சி 1 சதவீதமாக இருக்குமென கூறப்பட்டுள்ளது.

கொரோனாவால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதார வளர்ச்சி மிக கடுமையாக பாதிக்கப்படும். ஓராண்டு முழுவதும் பொருளாதார மந்தநிலையானது நீடிக்கும். ஜெர்மனி ( - 6.8 %), இத்தாலி (-7 % ), மற்றும் பிரான்ஸ் ( - 5 %) நாடுகளில் சரிவு ஏற்படும். லத்தீன் அமெரிக்க நாடுகளான அர்ஜெண்டினா ( - 6.7%), பிரேசில் (-5.5 %), மெக்ஸிகோ (-5.4 %) எதிர்மறை வளர்ச்சியுடன் மந்தநிலையில் நீடிக்குமெனவும் கூறியுள்ளது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
30-மார்-202012:25:40 IST Report Abuse
siriyaar முயல் ஓடாததனால் ஆமை வெற்றி
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
30-மார்-202011:21:23 IST Report Abuse
 Sri,India ஊழல் அரசு அதிகாரிகள் ,அரசியல்வாதிகளின் சொத்துக்கள் தான் உயரும்
Rate this:
Cancel
30-மார்-202010:24:51 IST Report Abuse
ஆப்பு இவிய்ங்களுக்கு நம்மவரே தேவலை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X