நியூயார்க்கில் முழு ஊரடங்கு; டிரம்ப்புக்கு திடீர் ஞானோதயம்

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (16)
Share
Advertisement
coronavirus, covid19, America, coronavirus in US, New York, Trump, lockdown, டிரம்ப்,கொரோனா

நியூயார்க்: அமெரிக்காவில் பலி எண்ணிக்கை, 2,438; தொற்று உள்ளோர் எண்ணிக்கை, 1.38 லட்சத்தை தாண்டியுள்ள நிலையில், 'நியூயார்க் நகரில், முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்' என, அதிபர், டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார்.

'கொரோனா' வைரஸ் தொற்று மிக வேகமாக பரவி வருகிறது. அமெரிக்காவில் அதைவிட வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக, நியூயார்க் நகர் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.


மறுப்பு:இதையடுத்து, 'நியூயார்க் நகரில், முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டும்' என, மருத்துவ துறையினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். ஆனால், அதை, அதிபர், டொனால்டு டிரம்ப் ஏற்கவில்லை. 'முழு ஊரடங்கு உத்தரவு தேவையில்லை' என, அவர் சமீபத்தில் கூறியிருந்தார்.

இந்நிலையில், அமெரிக்காவில், வைரஸ் தொற்றால் பலியானோர் எண்ணிக்கை, 2,438 ஆக உயர்ந்துள்ளது. நியூயார்க்கில் மட்டும், 517 பேர் உயிரிழந்து உள்ளனர். வைரஸ் தொற்று உள்ளோர் எண்ணிக்கையில், அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது.


latest tamil news

வந்தார் வழிக்கு!தற்போது, அது மேலும் உயர்ந்துள்ளது. அங்கு, 1.38 லட்சத்துக்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் தொற்று உள்ளது. நியூயார்க்கில் மட்டும், 52 ஆயிரம் பேருக்கு வைரஸ் தொற்று உறுதியாகி உள்ளது. மூன்று நாட்களில், உயிரிழந்தோர் எண்ணிக்கை, இரட்டிப்பாகி உள்ளது. தொற்று உள்ளோர் எண்ணிக்கை, கடந்த வாரத்தில், 8,000மாக இருந்தது. ஒரு வாரத்துக்குள், 1.38 லட்சத்தை தாண்டியுள்ளது.

நிலைமை மேலும் மோசமாகி வரும் சூழலில், 'நியூயார்க் நகரில், இரண்டு வாரங்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்துவது குறித்து முடிவெடுக்கப்படும். 'நியூஜெர்சி, கனெக்டிகட் பகுதிகளிலும், இதை நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளோம்' என, டிரம்ப் கூறியுள்ளார்.

இதற்கு, நியூயார்க் கவர்னர், ஆன்ட்ரூ கியூமோ எதிர்ப்பு தெரிவித்துள்ளார். 'சீனாவில் பாதிப்பு ஏற்பட்டபோது, வூஹான் நகரை முடக்கினர். அதுபோல, நியூயார்க் நகரை முடக்குவது அர்த்தமில்லாதது' என, அவர் கூறியுள்ளார்.

இதற்கிடையே, அமெரிக்க அதிபர் தேர்தலில், கட்சியின் வேட்பாளர்களை தேர்வு செய்யும், பிரைமரி தேர்தல், நியூயார்க்கில், ஏப்., 28ல் நடப்பதாக இருந்தது. அது, ஜூன், 23 வரை ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
suman - madurai,இந்தியா
30-மார்-202014:46:58 IST Report Abuse
suman சீனா எக்கனாமியில் எழுந்து வரும் நேரத்தில் தாம் முடங்கிவிடக்கூடாது என்று டிரம்ப் இவ்வாறு செய்கிறார். ஆனால் லாக்டவ்ன் செய்யாவிடில் மொத்த நாடும் சுடுகாடாகிவிடும் என்பதையம் அவர் யோசிக்க வேண்டும். உலகம் முழுவதும் சீனா பொருட்களை வாங்கா விடில் இது சரிப்பட்டு வரும். கம்யூனிச சீனா, நெறிமுறையற்ற சீனா உலகில் பெரிதாக வளர்ந்தால், அடுத்த இருபது வருடங்கலில் உலகில் ஜனநாயகம் என்ற வார்த்தையே இருக்காது. அணைத்து உலக நாடுகளும் சீனா தயாரிப்புகளுக்கு பதில் பிற வளரும் நாடுகளை வளர்த்து விட வேண்டும். வேறு வழி இல்லை.
Rate this:
truth tofday - india,இந்தியா
31-மார்-202010:46:18 IST Report Abuse
truth tofdayஇன்று பாமர்கள் மொபைல் பேசுவது நல்ல ஆடை அணிவது நல்ல வீடுகட்டுவதுநல்ல போக்குவரத்துக்கு நல்ல வாழ்க்கை நல்ல டிவி எலக்ட்ரானிக்ஸ் எல்லாம் சீனாவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சி மலிவுவிலை குறைந்த லாபம் கொண்ட போட்டுருட்களால் தான் அமெரிக்கா ஐரோப் மனிதகுலத்தை மிக அதிக லாபம் சம்பாதித்து பாதி உலகடை இன்னும் கட்ட வண்டி கழித்தால் தான் வைத்திருப்பார்கள்...
Rate this:
Cancel
Jebamani Mohanraj - Chennai,இந்தியா
30-மார்-202013:17:41 IST Report Abuse
Jebamani Mohanraj இந்தியா இதிலும் உலகுக்கு வழிகாட்டி. அமெரிக்கா ஊரடங்கை மீறுபவர்களுக்கு என்ன தண்டனை கொடுக்கிறது என்பதை பார்த்து இந்தியாவும் அதை செய்யவேண்டும்.
Rate this:
Cancel
Mahesh - New Jersey,யூ.எஸ்.ஏ
30-மார்-202009:21:03 IST Report Abuse
Mahesh இந்தியா வேகமாக நடவடிக்கை எடுக்கிறது, அமெரிக்கா மெத்தனமாக சொதப்பிவிட்டது என்று இரண்டு வாரங்களுக்கு முன்பு கருத்து எழுதினேன். அது எவ்வளவு உண்மை என்று பாருங்கள்..
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
31-மார்-202012:12:06 IST Report Abuse
 Muruga Velபெரிய தீர்க்க தரிசி சொல்லிட்டார் .. ட்ரம்ப் தேர்தல்ல ஜெயிப்பாரா ..சொல்லுங்க தெரிஞ்சிக்குவோம்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X