நிறுவனங்கள் மூடினாலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் ; யோகி உத்தரவு

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

லக்னோ : ஊரடங்கு உத்தரவால் தற்போது தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. ஆயினும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்க வேண்டும் என உ.பி முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.



latest tamil news




கொரோனா உலகின் பல நாடுகளையும் அச்சுறுத்தி வருகிறது. நாளுக்கு நாள் பாதிப்பும் பலியும் கூடிக்கொண்டே செல்கிறது. இதன் எதிரொளியாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. உ.பி மாநிலத்தில் கொரோனா ஊரடங்கு உத்தரவிற்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் நேரடியாக ஆய்வு செய்தார். அப்போது வெளிமாநில தொழிலாளர்களிடம் நலன் விசாரித்து பேசினார். தொடர்ந்து மருத்துவமனைக்கும் சென்று தற்போது அளிக்கப்படும் சிகிச்சை முறை குறித்தும் கேட்டறிந்தார்.


latest tamil news




தொடர்ந்து அவர் கூறுகையில், ஊரடங்கு உத்தரவால் நிறுவனங்கள் மூடப்பட்டிருந்தாலும் தொழிலாளர்களுக்கு ஊதியம் வழங்குவதை நிறுத்தக்கூடாது. அவர்களுக்கான ஊதியத்தை கொடுக்க வேண்டும். அத்துடன் தினசரி கூலித் தொழிலாளர்களையும், ஏழை மக்களையும் கண்டறிந்து அவர்களுக்கு அரசு ஒதுக்கிய நிதியிலிருந்து குடும்பத்திற்கு தலா 1000 ரூபாய் வழங்க அரசு அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அது போல் வீட்டு உரிமையாளர்கள் குடியிருக்கும் ஏழைகளிடமிருந்து வாடகை வசூலிக்க வேண்டாம். மக்களால் மின்சாரக் கட்டணம் செலுத்தமுடியவில்லை என்றாலும் மின் இணைப்பு துண்டிக்கப்படாது.

மாநிலத்தில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தேவையான அடிப்படை வசதிகளை வழங்கவும் மற்ற மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்களுக்கு தேவையான அத்தியாவசிய நடவடிக்கைகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
mridangam - madurai,இந்தியா
30-மார்-202015:04:49 IST Report Abuse
mridangam சன் டிவி, spice jet க்கு இந்த உத்தரவு பொருந்துமா ?
Rate this:
Cancel
Ray - Chennai,இந்தியா
30-மார்-202013:34:15 IST Report Abuse
Ray தட்டு வண்டிகக்காரனுக்கும் தெருவில் செருப்பு தைத்து பிழைப்பவருக்கும் கீரைக்காரி பூக்காரிக்கும் டாட்டா பிர்லா அனில் அம்பானிகள் தர வேண்டுமோ? வருமானம் இழப்பு இழப்புதான் மாரட்டோரியம் EMI நிறுத்திவைப்பு இதெல்லாம் அவர்களுக்கு கவைக்குதவாதுங்கோ
Rate this:
Cancel
30-மார்-202012:54:19 IST Report Abuse
இனியவன் உபியில் யாருயா இருக்கானுக. எல்லா பயலும் இங்க வந்து பஞ்சம் பிழைச்சுக்கிட்டு இருக்கானுக.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X