கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணா இவர்?| Coronavirus patient zero identified | Dinamalar

கொரோனாவால் முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணா இவர்?

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (10) | |
வூஹான்: சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஹூனான் சந்தையில் இறால் விற்ற 57 வயது மதிக்கத்தக்க பெண்ணே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.உலகம் முழுவதும் கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சுமார் 7.2 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்நிலையில்
coronavirus, covid19, china, health, disease, கொரோனா,சீனா

வூஹான்: சீனாவின் வூஹான் நகரில் உள்ள ஹூனான் சந்தையில் இறால் விற்ற 57 வயது மதிக்கத்தக்க பெண்ணே, கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட முதல் நபர் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

உலகம் முழுவதும் கோர முகத்தை காட்டி வரும் கொரோனாவால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 34 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. சுமார் 7.2 லட்சம் பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.


latest tamil news




இந்நிலையில் கொரோனா தொற்றால் முதன்முதலில் பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயர் வெய் குய்சியன் என்றும், ஒரு மாத சிகிச்சைக்கு பின் ஜனவரியில் அப்பெண் முழுமையாக குணமடைந்துள்ளார் என அமெரிக்காவின் வால் ஸ்ட்ரீட் ஜெர்னல், மிர்ரர் யூ.கே உள்ளிட்ட நாளிதழ்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

டிச.10ம் தேதி சாதாரண சளியால் பாதிக்கப்பட்ட அப்பெண், அருகில் உள்ள கிளினிக்கிற்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தொடர்ந்து உடல்நலக்குறைவு ஏற்படவே வூஹானில் உள்ள யூனியன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார். தனக்கு தாங்க முடியாத அளவுக்கு வலி இருப்பதாக குய்சியன் கூறியுள்ளார். அதனை தொடர்ந்து அவரை போன்ற அறிகுறியுடன் ஹூனான் சந்தையில் இருந்து பலர் வந்துள்ளனர்.


latest tamil news




ஹூனான் இறைச்சி சந்தையில் உள்ள பொது கழிப்பறையை பயன்படுத்தியதால் தான் தனக்கு கொரோனா தொற்று பரவியதாக அப்பெண் கூறியுள்ளார். அவருடன் நெருங்கிய தொடர்புள்ள பலருக்கும் கொரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அரசாங்கம் விரைந்து செயல்பட்டு இருந்தால் உயிரிழப்பை குறைத்து இருக்க முடியுமெனவும் வெய் குய்சியன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக டிசம்பர். 1ம் தேதி கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட முதல் நபர் கண்டறியப்பட்டதாக லான்செட் மருத்துவ இதழ் தெரிவித்திருந்தது.

Advertisement




We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X