ஸ்பானிஷ் காய்ச்சலுக்கு தப்பியவரை கொரோனா கொன்றுவிட்டது!

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (1)
Share
Advertisement
spanishflu survivor, coronavirus, covid-19, 108year, latest victim, ஸ்பானிஷ்_காய்ச்சல், கொரோனா

லண்டன்: இரண்டு உலகப் போர்களிலிருந்தும், 1918 ஸ்பானிஷ் காய்ச்சல் தொற்றுநோயிலிருந்தும் தப்பிய இங்கிலாந்தைச் சேர்ந்த 108 வயது மூதாட்டி, 100 ஆண்டுகளுக்கு பின், கொடிய கொரோனா வைரஸ் பாதிப்பால் உயிரிழந்தார்.


latest tamil news




இங்கிலாந்தின் ஸ்டால்போர்டு நகர காப்பகத்தில் இருந்த அவருக்கு கொரோனா அறிகுறிகள் தென்பட்டது. இதைத் தொடர்ந்து, கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, அது உறுதியான, 24 மணி நேரத்தில் அவர் உயிரிழந்துள்ளார். இங்கிலாந்தில் கொரோனாவுக்கு உயிரிழந்த மிக வயதான நபராக இவர் கருதப்படுகிறார். இவருக்கு வரும் ஏப்., 5ம் தேதி பிறந்த நாள் என்பது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது தங்கை ஸ்பானிஷ் காய்ச்சலால் ஒரு வயதில் உயிரிழந்துள்ளார்.


latest tamil news




அவரது பேரன் அந்தோனி சர்ச்சில், கூறுகையில், அவருக்கு தேவையான நேரத்தில், எங்களால் உடன் இருக்க முடியவில்லை. எங்களின் அனைத்து நிகழ்வுகளிலும் அவர் இருந்தார். அவரது 109-வது பிறந்த நாளை, உற்சாகமாக கொண்டாட இருந்த நிலையில், கொரோனாவால் உயிரிழந்தது மிகுந்த மன வேதனயை தருகிறது என்றார்.

இங்கிலாந்தில் இதுவரை கொரோனாவால் 1,228 பேர் உயிரிழந்துள்ளனர். 19,522 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
G.BABU - HARROW,யுனைடெட் கிங்டம்
30-மார்-202011:58:56 IST Report Abuse
G.BABU இந்த ஸ்பானிஷ் காய்ச்சல் சம்பந்தப்பட்ட குறிப்புகளையும் ... ஆவணப் படங்களையும் ..வீட்டில் முடங்கி தேவையற்றதை இணையத்தில் தேடும் இணையவாசிகள் தேடிப்பார்த்து படிக்கவேண்டும். 1918 இல்... உலகம் முழுவதும் சுமார் ஐந்து கோடி மக்களை காவு வாங்கிய இந்த ஸ்பானிஷ் காய்ச்சலுக்கும், தற்போதுள்ள கொரோனா தொற்றுக்கும் பெரிய வித்தியாசமில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X