பொது செய்தி

தமிழ்நாடு

பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 14வது நாளாக, இன்று (மார்ச் 30) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.



latest tamil news



பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.


latest tamil news



இந்த முறை, 2016 ஜூனில் அமலுக்கு வந்தது. இருப்பினும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல் நடந்த சமயத்தில், பெட்ரோல், டீசல் விலை, தினமும் மாற்றப்படவில்லை.

தமிழகத்தில், இம்மாதம், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின. அதன்பின், விற்பனை விலையில், 14வது நாளாக இன்றும் எந்த மாறுதலும் செய்யபடவில்லை.சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 14வது நாளாக, இன்று (மார்ச்., 30) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
30-மார்-202007:50:18 IST Report Abuse
ஆப்பு அடுத்த பேரிடருக்கு பெட்ரோல் இப்படி அநியாய விலைக்கு வித்தே நிதி சேர்த்து விடலாம். கேட்டா, மன்னிச்சுருங்கன்னு ஒரே வார்த்தை.
Rate this:
Cancel
Manithan -  ( Posted via: Dinamalar Android App )
30-மார்-202006:59:17 IST Report Abuse
Manithan ஏன்டா ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் விலை தற்போது 20 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் உள்ளது.கச்சா எண்ணெயின் மதிப்பு உயரும் போது பெட்ரோல்,டீசல் விலையை உடனே உயர்த்தும் நீங்கள் அதன் மதிப்பு பாதியாக குறைந்தும் விலையை குறைக்கவில்லையே. உங்களுக்கு அந்த கச்சா எண்ணெய்யால் தான் சாவு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X