பொது செய்தி

இந்தியா

பத்திரிகைகள் வினியோகத்தை தடுக்க கூடாது: மத்திய அரசு உத்தரவு

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (10)
Share
Advertisement
Newspaper, lockdown, coronavirus, corona, newspaper delivery, curfew, பத்திரிகை,வினியோகம்,அனுமதி

புதுடில்லி: பத்தரிகைகள் வினியோகம், பால், பால் சார்ந்த பொருட்கள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.


latest tamil news
உயிர் கொல்லி நோயான, கொரோனா வைரஸ் பரவலை தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது. இதனால் மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மத்திய, மாநில அரசுகள் எடுத்து வருகின்றன. இந்நிலையில், பல்வேறு மாநிலங்களிலும் பத்திரிகைகள் வினியோகிக்க போலீசார் கெடுபிடி காட்டுவதாக புகார்கள் எழுந்தன.

இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சக செயலாளர் அஜய் பல்லா, அனைத்து மாநில தலைமை செயலர்களுக்கு கடிதம் அனுப்பி உள்ளார். அதில் கூறப்பட்டுள்ளதாவது: ஊரடங்கு அமலாகி உள்ள நிலையில், சரக்குகள் அனைத்தும் தடையின்றி கொண்டு செல்லப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும்.


latest tamil news
பத்திரிகைகள் அச்சிடுவதற்கு ஊரடங்கிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. எனவே பத்திரிகைகள் வினியோகத்தை அனுமதிக்க வேண்டும். பால் கொள்முதல், வினியோகம், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பால் பொருட்கள் கொண்டு செல்வதையும் அனுமதிக்க வேண்டும். சானிடைசர்கள், கிருமி நாசினிகள், மளிகை பொருட்கள், பேட்டரி, சார்ஜர்கள் கொண்டு செல்லவும் தடை விதிக்கக்கூடாது. செஞ்சிலுவை சங்கத்தின் சேவைகளும் அனுமதிக்கப்பட வேண்டும். இவ்வாறு அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv srinivasankrishnaveni - Bangalore,இந்தியா
30-மார்-202015:01:27 IST Report Abuse
skv srinivasankrishnaveni news paper vandhu நாலுநாளாச்சுங்கோ ரெண்டுநாள் எங்க காலனிக்கு செக்யுரிட்டிக்கிடவந்தது பிறகு நின்னுபோச்சு நான் நெட் லேபடிக்கிறேன் ஆனால் என் கணவருக்கு பேப்பர்லேதான்படிக்கைப்பிடிக்கும்
Rate this:
Cancel
Lawrence Ron - WASHINGTON DC,யூ.எஸ்.ஏ
30-மார்-202013:41:46 IST Report Abuse
Lawrence Ron எனக்கு என் தொழில் முக்கியம் ..
Rate this:
Cancel
30-மார்-202011:53:38 IST Report Abuse
சுரேஷ் குமார் கு சார், கடந்த 25 வருடங்களாக தினமலர் வாசகனாக உள்ளேன். மிகவும் இக்கட்டான காலகட்டத்தில் கூட தினமலர் நாட்டிற்கு தன் பணியைத் திறம்படச் செய்து உள்ளது. இதுவும் ஒரு இக்கட்டான சூழ்நிலை. மழை வெயில் மற்றும் தொற்றுநோய் காலங்களிலும் பேப்பர் பாய்ஸ் ஆற்றும் சேவை போற்றுதலுக்குரியது. காவல்துறை அவர்களை தாக்கியதாக நீங்கள் எழுதிய போது பேப்பர் பாய்ஸ்க்காக மிகவும் வருந்தினேன். எனது ஆலோசனை என்னவென்றால் முடிந்தவரை பேப்பர் பாய்ஸ்க்காக நீங்கள் தனிக்கலரில் டீ சர்ட் மற்றும் தொப்பிகள் வழங்கினால் மற்றவர்கள் மத்தியில் தனியாக தெரிவார்கள். காவல்துறை தலையீடும் இருக்காது. நீங்கள் அத்தியாவசிய தேவைகளுக்கு வெளியே வருபவர்கள் தாக்குதலுக்கு உள்ளாவதாக எழுதி இருந்தீர்கள். நீங்கள் உண்மையைத்தான் எழுதியிருந்தீர்கள். அரசு காவல்துறைக்கு என்ன அறிவுறுத்தியதோ தெரியவில்லை அவர்கள் யாரிடமும் கடுமையாக நடந்து கொள்வது இல்லை. இந்த ஊரடங்கு நேரத்தில் அனைத்து ஊர்களிலும் தேவையில்லாமல் சுற்றுபவர்களை தயவுசெய்து இரும்புக் கரம் கொண்டு அடக்கம் சொல்லுங்கள். உங்களின் இந்த முயற்சி நமது பாரதப் பிரதமர் மற்றும் முதல்வர் மேற்கொள்ளும் கடின நடவடிக்கைகளுக்கு வலு சேர்க்கும் என்பது எனது தாழ்மையான கருத்து.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X