பொது செய்தி

தமிழ்நாடு

ஊரடங்கு நாட்களில் என்ன படிக்கலாம்? எழுத்தாளர்களின் பரிந்துரை இதோ

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
coronavirus, lockdown, bored quarantine tips, curfew, ஊரடங்கு, புத்தகங்கள், எழுத்தாளர்கள், வரலொட்டி ரங்கசாமி, இளசை சுந்தரம், எஸ்.ராஜா, எஸ்.ராமகிருஷ்ணன், வைகைச்செல்வன், ஜெயஸ்ரீ

வாழ்வில் எதை இழந்தாலும் அதை திரும்பப் பெற முடியும். திரும்ப கிடைக்காத ஒன்று எது எனில், ஒரு நாளின் 24 மணி நேரம் தான். பயனுள்ள வகையில் அதை எப்படி பயன்படுத்துகிறோம் என்பதில் தான் ஒவ்வொருவரின் வெற்றி இருக்கிறது. உலகில் மிக நீளமானது சீனப் பெருஞ்சுவரா அல்லது நைல் நதி கடந்து செல்லும் வழியா என கேள்வி எழுந்தால், வேலையில்லாமல் இருக்கும் பகல் பொழுது தான். வீட்டில் முடங்கியுள்ள நாம் நீண்ட பொழுதை வாசித்து வாழ்வை அர்த்தமுள்ளதாக மாற்றலாம். இங்கிலாந்து எழுத்தாளர் ஜான் ரஸ்கின் எழுதிய, 'கடையனுக்கும் கடைத்தேற்றம்' புத்தகம் தான் நம் தேச தந்தை காந்தியின் வாழ்க்கை பாதையை மாற்றியதோடல்லாமல், 'மகாத்மா' வாகவும் மாற்றியது. 'கண்டதை படித்தால் பண்டிதன் ஆகலாம்' என்பதே படைப்பாளிகளின் அனுபவ உண்மை. இதோ எழுத்தாளர்கள், பேச்சாளர்கள் எதை படிக்கிறார்கள், எதை படிக்க வேண்டும் என வழிகாட்டுகிறார்கள்.


மூன்று புத்தகமும் அன்பே ஆன்மிகமும்latest tamil news
வரலொட்டி ரங்கசாமி, எழுத்தாளர்: மனைவி ஊரில் இல்லாததால் ஊரடங்கு அமலானதும் ஓட்டலில் தங்கி விட்டேன். அலுவலக சாதனங்களை கொண்டு வந்து பணியை தொடர்கிறேன். தாமரை பிரதர்ஸ் மீடியா பிரைவேட் லிட்.,சார்பில் மே 3 ல் வெளிவரவேண்டிய 'அன்பே ஆன்மிகம்' புத்தக தொகுப்பை எழுதி விட்டேன். தினமலர் ஆன்மிக மலர் இதழில் வெளியாகும், 'மீண்டும் பச்சைப்புடவைக்காரி' தொடர் எழுதுகிறேன். மனைவி இந்து பிழை திருத்துவது வழக்கம். தற்போது, அவர் வெளியூரில் இருப்பதால் வாட்ஸ் ஆப்பில் அனுப்பி திருத்தி வாங்குகிறேன். ஜக்கி வாசுதேவின் 'டெத்', தானா ஜோகர், இயார்ன் மார்சலின் 'ஸ்ப்ரிச்சுவல் கோசன்ட்', கவிதா கானேவின் 'அகல்யா' ஆகிய புத்தகங்களை படிக்கிறேன்.


2000 புத்தகங்களை எழுதுகிறேன்latest tamil news


Advertisementஇளசை சுந்தரம், மதுரை வானொலி நிலைய முன்னாள் இயக்குனர்: சுவாசிப்பதும், வாசிப்பதும் வாழ்க்கை என எப்போதும் கூறுவேன். சுவாசிப்பது உடலுக்கு, வாசிப்பது அறிவுக்கு என உணர்ந்து மக்கள் படிக்க வேண்டும். என்னிடம் உளள 2000 புத்தகங்களில் தன்னம்பிக்கை, இலக்கியம், ஆய்வு கட்டுரைகளை அதிகம் வாசிக்கிறேன். பட்டிமன்றம் தவிர எழுத்து பணிகளில் தொடர்ந்து ஈடுபடுவதால், தினமும், கவிதை, கட்டுரை எழுதுகிறேன். இதற்காக பல புத்தகங்களை படித்து தகவல்களை சேகரிக்கிறேன். என்னை போன்ற புத்தக பிரியர்களுக்கு இது ஒரு அருமையான வாய்ப்பு. நீண்டநாட்கள் தொடர்பில் இல்லாத வெளிநாட்டு நண்பர்களுடன் அலைபேசியில் பேசுகிறேன்


தினமலர் நாளிதழுக்கு வாழ்த்துக்கள்latest tamil newsஎஸ்.ராஜா பட்டிமன்ற பேச்சாளர்: தினமும், நண்பர்கள், உறவினர்களுடன் அலைபேசியில் பேசுகிறேன். என்னிடம் உள்ள புத்தகங்களில், அ.முத்துலிங்கத்தின், ' இங்கே நிறுத்தக்கூடாது' மற்றும் 'ஐயாவின் கணக்கு புத்தகம்' டவாசோபெலின் 'கலீலியோஸ் டாட்டர்', வால்டர் ஐசக்சனின் 'லியோனர்டோ டாவின்ஸி, கம்பராமாயணம் படிக்கிறேன். இந்த சூழலில் கூட வாசகர்களுக்கு பாதுகாப்பான முறையில் தினமலர் நாளிதழை கொண்டு சேர்ப்பதற்கு வாழ்த்துக்கள். நல்ல நிலையில் இருக்கும் நாம் முடிந்த வரை எளிய மக்களுக்கு உதவ வேண்டும். ஆன்மிக பூமியான இந்தியா, 'கொரோனா வைரஸ்' பிடியில் இருந்து விரைவில் மீளும் என நம்புவோம்.


திட்டமிட்டு படியுங்கள்latest tamil news
எஸ்.ராமகிருஷ்ணன், 'சாகித்ய அகாடமி' விருது எழுத்தாளர் :
வாடிவாசல்( சி.சு.செல்லப்பா), அம்மா வந்தாள், மோகமுள்( தி.ஜானகிராமன்), கரைந்த நிழல்கள் (அசோகமித்ரன்), பசித்த மானுடன்(கரிச்சான்குஞ்சு), ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் (ஜெயகாந்தன்), புயலிலே ஒருதோணி(பா.சிங்காரம்), ஒரு புளியமரத்தின் கதை(சுந்தர ராமசாமி), கோபல்ல கிராமம்(கி.ராஜநாராயணன்) சாயாவனம்(சா.கந்தசாமி), புத்தம் வீடு(ஹெப்சிபா ஜேசுதாசன்), கம்பாநதி(வுண்ணநிலவன்), நாளை மற்றொரு நாளே(ஜீ. நாகராஜன்), ஒரு கடலோர கிராமத்தின் கதை( தோப்பில் முகமது மீரான்), தலைகீழ் விகிதங்கள் (நாஞ்சில் நாடன்), வானம் வசப்படும்( பிரபஞ்சன்), தலைமுறைகள்(நீல. பத்மநாபன்), காடு(ஜெயமோகன்), கூளமாதாரி (பெருமாள்முருகன்) கொரில்லா( ஷோபா சக்தி)நாவல்கள்,
வாழ்வின் அர்த்தம் மனிதனின் தேடல் - விக்டர் பிராங்கல்(தமிழில் ச.சரவணன்), ஒரு இந்திய கிராமத்தின் கதை- ராமகிருஷ்ண பிள்ளை(தமிழில் ச.சரவணன்), சுவாசம் காற்றில் கரைந்தபோது பால் கலாநிதி- (தமிழில் சிவ. முருகேசன்) சக்கரவாளம் பெளத்தம் பற்றிய குறிப்புகள்(கணேஷ் வெங்கட்ராமன்), ஒரு சிற்பியின் சுயசரிதை(எஸ்.தனபால்), கடைசி முகலாயன் வில்லியம் டேல் ரிம்பிள்( தமிழில் ரா.செந்தில்), நைல் நதியோரம்(நோயல் நடேசன்) கட்டுரை புத்தகங்களை வாசகர்களுக்கு பரிந்துரைக்கிறேன். என்ன வாசிக்க வேண்டும் என திட்டமிட்டு துவக்கினால் குழப்பம் வராது. 21 நாட்களில் வாழ்க்கை வரலாறு,நாவல்களை படிக்க தேர்வு செய்துவைத்துள்ளேன். தற்போது 'லியோ டால்ஸ்டா'யின் 'புத்துயிர்ப்பு' நாவலை வாசித்து கொண்டிருக்கிறேன்


தினமும் 2 மணி நேரம் வாசிப்புlatest tamil news
வைகைச்செல்வன், பேச்சாளர், எழுத்தாளர் :
இந்த ஊரடங்கில் சிறுவர்களுக்காக நேரம் ஒதுக்கி பெற்றோர்கள் கதை சொல்ல வேண்டும். ஜெயகாந்தன், அகிலன், தி.ஜானகிராமன், அசோகமித்ரன், எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன், ஓசோவின் படைப்புகளை வாசிக்க பரிந்துரைக்கிறேன். சித்தா, யுனானி, உட்பட பல்வேறு மருத்துவம் சார்ந்த புத்தகங்களை வாசித்தால் ஒவ்வொரு மருத்துவத்திற்கும் உள்ள வேறுபாடுகளை கற்க முடியும். சட்டம் சார்ந்த புத்தகங்களை சிறுகதைகள், மர்மக்கதைகள் வாசிக்கலாம்.தினமும், 2 மணி நேரம் வாசிப்பேன். தற்போது கூடுதல் நேரம் வாசிக்க முடிகிறது. சங்க இலக்கியங்களை வாசிக்கிறேன். அதற்கு எளிய உரை எழுத உள்ளேன். சிந்துசமவெளி, கிரேக்கம், எகிப்து, மெசபடோமியா உட்பட உலக நாகரீகங்களை வாசிக்கிறேன். எழுதுகிறேன். கீழடி நாகரிகம் பற்றி எழுதிக்கொண்டிருக்கிறேன்.


கொரோனாவில் இருந்து மனதை திருப்பலாம்latest tamil news
ஜெயஸ்ரீ, 'சாகித்ய அகாடமி' விருது எழுத்தாளர்:மலையாளத்திலிருந்து தமிழில், 'நிலம் பூத்து மலர்ந்தால்' நாவலை மொழி பெயர்த்ததற்காக 'சாகித்ய அகாடமி' விருது அறிவிக்கப்பட்டதை அறிந்து தமிழகம், மும்பை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து எனக்கு தினமும் அலைபேசியில் வாழ்த்து தெரிவிக்கின்றனர். சாண்டில்யன், தமிழ்வாணன், ராஜேஷ்குமார் என பல மூத்த படைப்பாளிகளின் படைப்புகளை வாசித்துவிட்டு, பல வாசகர்கள் சமூக வலைதளத்தில் அதற்குரிய 'லிங்க்'கை அனுப்புகின்றனர். அந்தளவிற்கு வாசிப்பிற்கான தளமாக தொலைத் தொடர்பு சாதனங்கள் துணை புரிகின்றன. இதன் மூலம் கொரோனாவில் இருந்து நம் மனதை திருப்ப முடியும்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற சோ.தர்மனின் 'சூல்' நாவல் எளிய குடும்பத்தின் பருவ ஆணின் நாம் பார்க்காத மற்றொரு வாழ்க்கை பாகுபாடுகளை வெளிப்படுத்தும். ராம்தங்கத்தின் 'திருக்கார்த்தியல்' நாவலை பரிந்துரைக்கிறேன். இமயமலை பயண அனுபவம் குறித்த 'மணிமகேஷ்' (உமா பிரசாத் முகோபாத்தியாய் - தமிழில் சு.கிருஷ்ணமூர்த்தி), நோபல் பரிசு பெற்ற 'பாரபாஸ்'(பேர் லாகர் குவிஸ்டு- தமிழில்( கா.ந.சுப்பிரமணியம்) படிக்கிறேன். மலையாளத்தில் கே.வி.மோகன்குமார் ஐ.ஏ.எஸ்., எழுதிய உஷ்ணராசி' நாவலை தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டுள்ளேன். அது கேரள சாகித்ய அகாடமி விருது பெற்றது. கேரளாவில், கம்யூனிஸ்ட் கட்சி எப்பட ஆட்சியை பிடித்தது மற்றும் அதன் பின்னோக்கிய 100 ஆண்டுகள் கேரளாவின் இயற்கை வளத்தை அந்நாவல் பேசுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kalyanasundaram - ottawa,கனடா
30-மார்-202016:33:39 IST Report Abuse
kalyanasundaram DO NOT READ BUT STUDY RELIGIOUS BOOKS AND UNDER STAND ITS DEPTH OF ADVICE WITH MIND
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-மார்-202015:07:54 IST Report Abuse
வெகுளி கவிஞர் எழுதிய வனவாசம் படியுங்கள்....
Rate this:
karutthu - nainital,இந்தியா
31-மார்-202017:06:13 IST Report Abuse
karutthuகவிஞரின் வனவாசத்துடன் மனவாசம் புத்தகத்தையும் சேர்ந்து படித்தால் தான் நாத்திகமும் அஸ்திகமும் அவரை எப்படி செயல்படுத்தியது என தெரியும் ........
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
30-மார்-202014:44:37 IST Report Abuse
J.Isaac Read Bible to bring transformation in life. God loves and wants justice, and will bring justice
Rate this:
karutthu - nainital,இந்தியா
31-மார்-202017:07:33 IST Report Abuse
karutthuஅது ஐசக் போன்றவர்கள் மட்டுமே படிக்கவேண்டிய புத்தகம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X