2 வாரங்களில் அமெரிக்க பலி உச்சக்கட்டமாக இருக்கும்: டிரம்ப்

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (23) | |
Advertisement
வாஷிங்டன்: இன்னும் இரு வாரங்களில் கொரோனாவால் அமெரிக்காவில் இறப்பு விகிதம் உச்சக்கட்டத்திற்கு செல்லும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.உலகயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பல உயிர்கள் பலியாகி வருகின்றன. சுமார் 199 நாடுகளில் பரவி இருக்கும் இந்த வைரஸ் தொற்றால் மொத்தம் 7 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 51 ஆயிரம் பேர்
America, US, Coronavirus, Donald Trump, President Trump, social distancing, US President, டிரம்ப், அமெரிக்கா, இறப்பு விகிதம், கொரோனா வைரஸ், உச்சக்கட்டம்

வாஷிங்டன்: இன்னும் இரு வாரங்களில் கொரோனாவால் அமெரிக்காவில் இறப்பு விகிதம் உச்சக்கட்டத்திற்கு செல்லும் என அந்நாட்டு அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

உலகயே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரசால் பல உயிர்கள் பலியாகி வருகின்றன. சுமார் 199 நாடுகளில் பரவி இருக்கும் இந்த வைரஸ் தொற்றால் மொத்தம் 7 லட்சத்து 22 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டு, ஒரு லட்சத்து 51 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர். 33,980 பேர் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் மட்டும் 1,42,178 பேர் பாதிக்கப்பட்டு, 2,484 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலகிலேயே அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளில் முன்னிலையில் இருக்கும் அமெரிக்காவில் வைரஸ் தொற்றை தடுக்க பல்வேறு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.மேலும், கொரோனாவால் அமெரிக்காவில் 1 முதல் 2 லட்சம் பேர் உயிரிழக்க வாய்ப்புள்ளதாக அந்நாட்டு தேசிய தொற்றுநோய் சிகிச்சை மைய இயக்குனர் ஆன்டனி பாஸி தெரிவித்துள்ளார்.


latest tamil newsஇந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறியதாவது: வைரஸ் பரவாமல் தடுக்க சமூக விலகலை கடைப்பிடித்தல் அவசியமாகும். இதனால் அமெரிக்காவில் ஏப்.,30 வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது. அமெரிக்காவில் இன்னும் 2 வாரங்களில் இறப்பு விகிதம் உச்சநிலைக்கு செல்லும். ஜூன் 1ம் தேதிக்கு பின்னர், கொரோனாவிலிருந்து நாம் முழுவதுமாக மீள்வோம். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dr Rajendran Thangavel - Dindigul ,இந்தியா
30-மார்-202019:47:50 IST Report Abuse
Dr Rajendran Thangavel Indian Govt must make a decision on ending of lockdown only after assessing the trend of the spread of the disease. As the most populous country, we can't be unconcerned about the loss of life of the people, despite the economic implications. This is not the time to worry about the economic difficulties of the country, which can be set right over a period of time.
Rate this:
Cancel
சீனு கூடுவாஞ்சேரி இந்தியர்கள் கவலைப்பட தேவையில்லை. இந்திய அணிக்கு இக்கட்டான காலத்தில் கோலி தனியாளாக பல வெற்றிகளை குவிப்பது போல் நமது பாரதப் பிரதமர் நல்ல பல வியூகத்தை வடிவமைத்துள்ளார். இந்த வரட்டுத் தவளைகளின் எதிர்மறை ஓலத்தை முறியடித்து பாரதம் கொடிய கொரோனாவை வெல்லும். இது உறுதி.
Rate this:
Cancel
sundarsvpr - chennai,இந்தியா
30-மார்-202013:48:24 IST Report Abuse
sundarsvpr இப்போது 21 நாட்கள் ஊரடங்கு . முதலில் ஒரு நாள் ஊரடங்கு செய்து பணிசெய்திடும் காவலர் மருத்துவர்களுக்கு கைத்தட்டி நன்றியினை தெரிவித்தோம். மஹாபாரதத்தில் எல்லாம் வல்ல இறைவன் கிருஷ்ணன் அஸ்வத்தாமா இட்ட நாராயண அம்புக்கு மரியாதை செய்தார். குரானா வீரியம் எப்போது நீங்கும் என்பது கணிக்க இயலவில்லை மருந்தும் இல்லை. இறைவன் தான் மருத்துவனும் மாத்திரையும். அவனை உலக மக்கள் ஒட்டுமொத்தமாய் ஒருநாள் சரண் அடைவதை தவிர வழி இல்லை. அந்த ஒரு நாளை ஐக்கிய உலக சுகாதார நிறுவனம் தீர்மானிக்கலாம். இரண்டு கையை கூப்பி வண்ங்குவதுதான் நம்மை காப்பாற்றும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X