பொது செய்தி

இந்தியா

'குடி' நோயிலிருந்து மீட்க இலவச சிகிச்சை: கேரள அரசு அதிரடி

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (8)
Share
Advertisement

திருவனந்தபுரம்: இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் கேரளாவும் ஒன்று. அங்கு, 'ஊரடங்கு உத்தரவு அமலில் இருக்கும்வரை அனைத்து மதுபான மற்றும் கள்ளுக் கடைகளும் மூடியிருக்கும்' என, கேரள மாநில அரசு அறிவித்துள்ளது.latest tamil news
தினமும் குடிக்கும் 16 லட்சம் பேர்


கேரளாவில், 16 லட்சம் பேர் தினமும் மதுக் குடிக்கும் பழக்கம் கொண்டவர்களாக உள்ளனர் என, கேரள சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இந்நிலையில், திடீரென மதுக்கடைகளும் கள்ளுக் கடைகளும் மூடப்பட்டதால், இவர்கள் பெரும் சிக்கலைச் சந்தித்து வருகின்றனர்.
மது போதைக்கு அடிமையான சிலர், தற்கொலை முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதில் இதுவரை, 5 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த கேரள முதல்வர் பினராயி விஜயன் இன்று (30ம் தேதி) அவசர ஆலோசனை நடத்தினார். அதன்பின், செய்தியாளர்களிடம் பினராயி விஜயன் தெரிவித்துள்ளதாவது:


latest tamil news


குடிப்பழக்கத்தை திடீரென நிறுத்துவதால் ஏற்படும் பாதிப்பை சரி செய்யவும், தேவையற்ற தற்கொலைகளைத் தடுக்கவும், மதுவுக்கு அடிமையானவர்களுக்கு மருத்துவர்களின் ஆலோசனைப் படி, தேவையான அளவில் மதுவை வினியோகம் செய்யவும், கலால் துறைக்கு அனுமதி அளிக்கப்படுகிறது.
மேலும், மதுபோதையில் இருந்து விடுபட 'மதுபோதை மறுவாழ்வு' மையத்துக்கு வரும் மக்களுக்கு இலவச சிகிச்சை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.அதேபோல், மருத்துவர்களின் பரிந்துரைப்படி, தேவைப்படுவோருக்கு மட்டும், ஆன்லைன் மூலம் மதுவை விற்பனை செய்ய ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இவ்வாறு அவர் தெரிவித்தார்.


latest tamil news'குடி' நோயிலிருந்து மீள நினைப்பவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்க முன்வந்துள்ள கேரள அரசுக்கு பலரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இதேபோல், தமிழகம் உள்ளிட்ட பிற மாநில அரசுகளும் இது போல் நடவடிக்கை எடுக்கலாம் என கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
30-மார்-202020:38:37 IST Report Abuse
siriyaar அசைவ உணவையும் தடை செய்ய வேண்டும்.
Rate this:
Cancel
Sri,India - India,இந்தியா
30-மார்-202017:30:08 IST Report Abuse
 Sri,India Alcohol s more people than Korana viruses. Approximately above twenty thousand people ed by Drunken driving. Cancer , diabetes ratio higher than other countries due to Taasmac shops in Tamilnadu too.
Rate this:
Cancel
madhavan rajan - trichy,இந்தியா
30-மார்-202017:27:10 IST Report Abuse
madhavan rajan திடீரென மக்களை வெளியே வராமல் வீட்டில் இருக்கச் சொன்னால்கூட மக்களுக்கு சிக்கல் தான். அதனால்தான் கேரளா அரசு அதை சரியாக நடைமுறைப்படுத்தாமல் அதிக எண்ணிக்கையில் நோயாளிகளை வைத்துள்ளது மகாராஷ்டிராவுக்கு போட்டியாக. மத்திய அரசு சொல்வதை கேட்காது. ஆனால் நஷ்ட ஈடு மட்டும் அதிகம் வேண்டும் என்று மத்திய அரசை கேட்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X