உயிரை தக்கவைக்க நேரம் ஒதுக்கும் அரசு; கொரோனாவால் பிரிட்டனில் அவலம்

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (13)
Share
Advertisement
coronavirus, corona, ventilator, britain, london, UK coronavirus, patient, கொரோனா, கொரோனாவைரஸ், வெண்டிலேட்டர், பிரிட்டன், லண்டன், நோயாளிகள், மருத்துவர்கள்,

லண்டன்: பிரிட்டனில் வெண்டிலேட்டர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அனைவருக்கும் சரிசமமாக வெண்டிலேட்டர் அளிக்க முடியாமல் பிரிட்டன் அரசு திணறி வருகிறது.
ஏற்கனவே 1019 பேர் பிரிட்டனில் கொரோனாவால் மரணம் அடைந்தனர். தற்போது மேலும் 209 பேர் மரணம் அடைந்துள்ளனர். இதுவரை 19,522 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். பிரதமர் போரிஸ் ஜான்ஸனும் இதில் அடங்குவார். கொரோனா பாதித்தவர்களில் வெகு சிலர் மட்டுமே அதிக நேரம் செயற்கை சுவாசத்துக்காக வெண்டிலேட்டரில் வைக்கப்படுவர். பலருக்கு வெண்டிலேட்டர் அதிக நேரம் தேவைப்படாது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.


latest tamil newsபிரிட்டனின் பெரிய அரசு மருத்துவமனையான என்.ஹெச்.எஸ்-ல் போதுமான வெண்டிலேட்டர்கள் உள்ளன. ஒருவருக்கு கொரோனா முற்றிய பின்னர் அவரது உயிரை இழுத்து பிடிக்க ஒன்று அல்லது இரண்டு வாரங்கள் வெண்டிலேட்டரில் வைப்பது சரியான தீர்வாகாது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். இதனால் மருத்துவமனையில் அவசரமாக வெண்டிலேட்டர் தேவைபடும் பிற நோயாளிகளுக்கும் வெண்டிலேட்டர் கிடைக்கத் தாமதமாகும். எனவே உயிர் பிழைக்க வாய்ப்புள்ள நோயாளிகளுக்கு மட்டுமே வெண்டிலேட்டரை சாதுர்யமாக பயன்படுத்த வேண்டும் என்கின்றனர் மருத்துவர்கள்.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-மார்-202016:18:37 IST Report Abuse
Janarthanan நாங்க எல்லாம் வளர்ந்த நாடுகள் ,சம உரிமை கொடுக்க வேண்டும் என்று இனிமேல் சொல்லி கிட்டு வந்தீங்க அசிங்கமா திட்டி புடுவோம் ???? இந்தியாவில் அப்படி செய்தால் இந்த அரசு அந்த பர்டிகுலர் குரூப்பை பழி வாங்க செய்கிறது என்று கிளம்பி இருப்பார்கள் , வெஸ்டென் மீடியா ஆயிரம் கட்டுரை எழுதுவான் ???
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
30-மார்-202016:46:50 IST Report Abuse
Malick Rajaஎழவு வீட்டிலே பாட்டு பாடுறதுபோல இருக்கு .. எவ்வளவு பெரியநாடானாலும் இதுபோன்ற pandamic. ஏற்பட்டால் ஒன்றும் செய்ய முடியாது .. ஆறறிவுள்ள எவரும் இதுக்கெல்லாம் ரூம் போட்டு யோசிக்கவேண்டியதில்லை...
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-மார்-202016:56:39 IST Report Abuse
Janarthananஇந்தியாவில் நடக்கும் போது நீ இதே மாதிரி பேசுவாயா...
Rate this:
Yaro Oruvan - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
30-மார்-202019:06:56 IST Report Abuse
Yaro Oruvanஆனா ஆல்ரெடி அந்த மாதிரி மத்திய அரசை எதுத்து பாட்டு பாடுற சிகாமணிகளை என்ன செய்ரது .... தனிமைப்படுத்துனா சிறுபான்மை வந்துரும்..ஒரு நடிகங்கனாம் (மன்சூர் அலிகான் ) என்னமோ மோடி CAA போராட்டத்தை ஒடுக்க மோடி கொரோனாவை பயன்படுத்துறாருங்கறான் ......
Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
30-மார்-202020:01:44 IST Report Abuse
Enrum anbudanஅப்போ ஆறறிவு உள்ளவர்கள் தான் கொரோனா என்று அறிவித்த போதும் கூட்டமாக போராட்டம் அறிவித்து போராடினார்களோ. அது என்ன பாய் உனக்குன்னா ஒரு மாதிரி கருத்து போடுற அதுவே வெளிநாட்டினர் பண்ணா pandamic . வெள்ளைக்காரன் சொன்னா அதுல உண்மை இருக்குமோ??? . எவன் வீட்டிலாது எழவு விழுந்தால் கூட மோடி மீது குறை கூறும் உங்களைப்போல் உள்ளவர்கள் மற்றவர்களை குறை கூறக்கூடாது. ஓகே ....
Rate this:
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
30-மார்-202020:05:26 IST Report Abuse
Enrum anbudanஇதே போல் நம் நாட்டில் ஒரு நிலைமை வந்தால் என்ன ஆகும் என்று யோசிக்காமல் CAA. என்ற நம் நாட்டில் உள்ளவர்களை சற்றும் பாதிக்காத ஒரு சட்டத்திற்க்காக நீங்கள் கூட்டமாக போராடியது எவ்வளவு அறிவு கெட்ட தனம் தெரியுமா? எல்லாவற்றையும் சமமாக யோசியுங்கள் . மூடத்தனமாக ஒரு சார்பாக யோசிக்க கூடாது ....
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
30-மார்-202020:10:28 IST Report Abuse
Rajeshஜனார்த்தனன், இன்னும் வளரவே இல்லை [அறிவை சொன்னேன்]...
Rate this:
Janarthanan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
30-மார்-202022:13:18 IST Report Abuse
Janarthananசரி தாத்தா ??? பப்பு உன் யார்டஸ்ட்டிக்...
Rate this:
Cancel
vasan - doha,கத்தார்
30-மார்-202015:59:27 IST Report Abuse
vasan இப்படி ஒரு நிலை நம் நாட்டில் ஏற்பட்டால் பணமுதலைகள், அரசியல் வியாதிகளுக்கு மட்டுமே நம் ஊரில் சிகிச்சை கிடைக்கும் அவன் பிழைக்க மாட்டான் என்று தெரிந்தும்...பாமர மக்களின் நிலைமை இது தான் நம் நாட்டில் நிலவும்.....ஆண்டவன் புண்ணியத்தில் அப்படி நடக்காது...
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-மார்-202015:54:08 IST Report Abuse
வெகுளி பிரிட்டனின் பெரிய அரசு மருத்துவமனையான என்.ஹெச்.எஸ்-ல் நோயாளிகளுக்கு இலவசமாக வெண்டிலேட்டர் தரணும்...... தமிழன்டா.....
Rate this:
Yes your honor - கோயமுத்தூர்,இந்தியா
30-மார்-202017:38:16 IST Report Abuse
Yes your honorஅதிலேயும் தமிழன் என்றால் இரண்டு வென்டிலேட்டர்கள் வைக்க வேண்டும், இல்லையேல் நாங்கள் அறிவாளிகள் எல்லாம் ஒன்றுகூடி மத்திய மானில அரசுகளின் போக்கைக் கண்டித்து மாபெரும் போராட்டம் நடத்துவோம்...... அட புத்திசாலிங்களா உங்க மனசுல ஏதாவது ஐடியா இருந்தா (இருந்தா) முரட்டுத் தனத்தையெல்லாம் ஓரங்கட்டிவிட்டு, ஒரு மனிதனாக, மனித நேயத்தோடு வெளியில் சொன்னால் உங்களுக்கும் மரியாதை, உங்கள் வார்த்தைகளுக்கும் மரியாதை கிடைக்கும். இதவிட்டு விட்டு ஊரிலேயே உத்தமன் நாந்தான் என்று டாய் டூய் என்று குதித்தால் உங்கள் வீட்டில் மனைவிமார்கள், துணைவிமார்கள் கூட மதிக்க மாட்டார்கள்... என்றுதான் திருந்துவார்களோ......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X