பொது செய்தி

இந்தியா

தவித்த தொழிலாளர்களை மீட்ட சுங்க அதிகாரிகள்: நிர்மலா பாராட்டு

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

புதுடில்லி: நாடு முழுவதும் ஊரடங்கு அமலானதையடுத்து திருச்சியில் சிக்கி தவித்த ராஜஸ்தானை சேர்ந்த 8 தொழிலாளர்களை சுங்கத்துறை அதிகாரிகள் மீட்டனர். அவர்களுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பாராட்டு தெரிவித்துள்ளார்.


latest tamil news



கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து மாநில எல்லைகளும் மூடப்பட்டன. அத்தியாவசிய சேவைகள் தவிர அனைத்து போக்குவரத்திற்கும் தடை விதிக்கப்பட்டன. இதனால் வெளிமாநிலங்களில் பணியாற்றுவதற்காக இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களுக்கு உணவு, இருப்பிடத்தை மாநில அரசு உறுதி செய்ய வேண்டும் எனவும், இடம்பெயராமல் உரிய வசதிகள் ஏற்படுத்த வேண்டும் எனவும் மத்திய அரசு அறிவுறுத்தியிருந்தது.



latest tamil news



இந்நிலையில் ராஜஸ்தானை சேர்ந்த 8 பேர் மார்ச் 26ம் தேதி, சொந்த ஊருக்கு செல்ல முடியாமல் தவித்துள்ளனர். இவர்களை திருச்சி சுங்கத் தடுப்பு மண்டல அதிகாரிகள், அவர்களுக்கு உணவு, தங்குமிடம் மற்றும் தண்ணீர் ஆகிய உடனடி உதவிகளை வழங்கினர். இதனை திருச்சி சுங்கத் தடுப்பு மண்டலத்தின் டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டனர். அதிகாரிகளின் இந்த செயலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வெகுவாக பாராட்டினார். அவரின் பதிவில், நல்ல செயல். சம்பந்தப்பட்ட மாவட்ட அதிகாரிகளுடன் தொடர்புகொண்டு அவர்களின் ஒட்டுமொத்த கவனிப்பை உறுதிப்படுத்துவீர்கள் என நம்புகிறோம், என பாராட்டி பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலசுப்பிரமணியன் அ அம்மணி நாட்டு மக்கள் தங்களால் இயன்றவரை உதவி செய்கிறார்கள். அரசும் கொஞ்சம் வரிச்சலுகை அளித்தால் நாம் இந்த எதிர்பாராத பேரிடர் போராட்டத்தில் வெற்றி பெருவோம்.
Rate this:
Cancel
Muthuraman - Wasington DC,யூ.எஸ்.ஏ
30-மார்-202023:22:20 IST Report Abuse
Muthuraman நாட்டில் இப்படிப்பட்ட நல்ல அதிகாரிகளும் இருக்க தான் செய்கிறார்கள். .இந்த நல்ல உள்ளங்களை வாழ்த்துவோம். இதுபோல் அனைவரும் இருந்துவிட்டால் நம் நாடு விரைவில் இந்த கொரோனாவில் இருந்து விடுபடும்..வாழ்த்துக்கள்.
Rate this:
Cancel
bal - chennai,இந்தியா
30-மார்-202021:13:43 IST Report Abuse
bal இவர்கள் அறிவித்த எந்த சலுகையும் யாரையும் போய் சேரவில்லை...இல்லையென்றால் டில்லியில் ஏன் தொழிலார்கள் ஊரை விட்டு போகிறார்கள். ஒரு பள்ளியிலோ கல்லூரியிலோ இடம் கொடுத்து சாப்பாடு போடா வக்கில்லை இந்த மோடி, நிர்மலா மற்றும் அமித் ஷா அதோடு ஜோக்கர் கெஜ்ரிவால்...இவர்களையெல்லாம் தூக்கி எரியனும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X