பொது செய்தி

இந்தியா

கொரோனாவை கட்டுபடுத்த மக்கள் ஒத்துழைப்பு அவசியம்: மத்திய அரசு

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement
corona, coronavirus, health department, கொரோனா, கொரோனாவைரஸ், மத்தியசுகாதாரத்துறை,

புதுடில்லி: கொரோனா வைரசை கட்டுப்படுத்துவதில் மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அவசியம் என மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா வைரஸ் தொற்று குறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் லுவ் அகர்வால் நிருபர்களிடம் கூறியதாவது: இந்தியாவில் 1071 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பு 92 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. 29 பேர் உயிரிழந்தள்ளனர். 99 குணமடைந்துள்ளனர். கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை. ஊரடங்கு உத்தரவை 100 சதவீதம் அமல்படுத்துவதை உறுதிபடுத்த வேண்டும் என மாநில அரசுகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறித்து ஆய்வு செய்ய நாடு முழுவதும் 115 ஆய்வகங்கள் அமைக்கப்பட்டுள்ளன. புதிதாக 47 தனியார் ஆய்வகங்களுக்கு இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

கொரோனாவை தடுப்பதில் மக்களின் ஒத்துழைப்பு அவசியம். நோய்வாய்ப்பட்டுள்ள முதியவர்கள், எளிதில் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. இதனால், அவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அரசின் விதிமுறைகளை பின்பற்ற வேண்டும். தற்போதைய நிலையில் விழிப்புணர்வு தான் தேவை. பீதியடைய தேவையில்லை.இந்த வைரஸ் பாதிப்பை ஆரம்ப நிலையிலேயே 80 சதவீதம் குணப்படுத்திவிட முடியும்.


latest tamil news
கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை நூறில் இருந்து ஆயிரத்தை எட்டுவதற்கு 12 நாட்கள் ஆகியுள்ளது. வடகிழக்கு பிராந்தியங்களுக்கு மருந்து மற்றும் அவசர பொருட்களை கொண்டு செல்வதற்கு, சரக்கு விமானங்களை இயக்க வடகிழக்கு மாநிலங்களுக்கான வளர்ச்சி கவுன்சில் ஒப்புதல் வழங்கியுள்ளது.

புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு முகாம் அமைக்க மாநில அரசுகளுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனை போர்க்கால அடிப்படையில் செய்ய வேண்டும். தொழிலாளர்களுக்கு முழு சம்பளம், மற்றும் அவதிக்குள்ளாகியுள்ள தொழிலாளர்களுக்கு உணவு மற்றும் புகலிடம் வழங்குவதை மாவட்ட எஸ்.பி.,, மாவட்ட கலெக்டர் உறுதி செய்ய வேண்டும் என அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - கோல்கத்தா,இந்தியா
30-மார்-202019:22:42 IST Report Abuse
Nallavan Nallavan ஆமாம் உள்துறை மந்திரி என்று ஒருத்தர் இருந்தாரே எங்கே காணொம் ஏதாவது தனிமை படித்து கொண்டாரா இல்லை கொரன அவரை தனிமை படுத்தி விட்டதா ,விவரம் தெரிந்தவர்கள் சொல்லவும்
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,யூ.எஸ்.ஏ
30-மார்-202019:20:42 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN     கொரான வைரஸ் பரவலை தடுப்பதற்கு அரசின் ஊரடங்கு உத்திரவு அவசியமானது . ஆனால் இவ்வுத்திரவினால் சமூகத்தின் பலதரப்பட்ட மக்களும் பல்வேறு வகையான துயரங்களுக்கு ஆளாகிவுள்ளனா். இதனை களைவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் எனக் ராகுல் கூறுவது எவ்வாறு அரசியலாகும்,, மேலும் சில குறிப்பிட்ட மக்கள் படும் துயரத்தை ராகுல் அவர்கள் சொல்வது என்பது எவ்வாறு அரசியலாகும்.
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
30-மார்-202019:18:19 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் பிரதமர் அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவை முழு மனதுடன் வரவேற்று, பாராட்டி, முழு ஒத்துழைப்பு தருவோம் என்று அறிவித்த ஒரே அரசியல் கட்சி காங்கிரெஸ்தான். அதனால், அன்றாடம் நிகழும் குறைபாடுகளை சொல்லவே மாட்டோம் என்பது அர்த்தமல்ல. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நிலை பரிதாபமாக இருப்பதை கண்முன் பார்க்கிறோம். அதை சொல்வது எப்படி தவறாகும்? இது அரசியல் என்று பார்ப்பதுதான் தவறு, நீங்கள் சொன்னதை தான் ராகுல் சொன்னார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X