பொது செய்தி

இந்தியா

கொரோனா;உலக நாடுகளை பாராட்டி தலாய்லாமா கடிதம்

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

இடாநகர்: கொரோனா தொற்று நோயை எதிர்த்து, உலக நாடுகள், குடிமக்களை பாதுகாப்பதற்காக, கடினமாக போராடி வருகின்றன. இதனை பாராட்டும் விதமாக புத்தமத தலைவர் தலாய்லாமா எழுதிய கடிதத்தை, அருணாச்சலப் பிரதேச முதல்வர், பெமாகாண்டு டுவிட்டரில் வெளியிட்டுள்ளார்.



latest tamil news


தலாய்லாமா தனது கடிதத்தில் கூறியுள்ளதாவது:
உலகம் முழுவதும் பலர் வேண்டுகோளுக்கு இணங்க இந்த வார்த்தைகளை எழுதுகிறேன். கொரோனா தொற்றுநோயால், நாம் கடினமான சூழலை எதிர்கொண்டுள்ளோம். இந்தியா உட்பட, அனைத்து நாடுகளுக்கும் எனது வாழ்த்துகளையும், நன்றிகளையும் தெரிவித்து கொள்கிறேன். இந்த வைரஸை கட்டுப்படுத்த ஒருங்கிணைந்து முயற்சி எடுத்து வரும் நாடுகளை பாராட்டுகிறேன்.


latest tamil news


இந்தியா, சார்க் நாடுகளை ஒருங்கிணைத்து நிதிஒதுக்கீடு, தகவல் பகிர்வு, கோவிட்-19ஐ எதிர்கொள்வதற்கான நிபுணர் குழுவை அமைத்து மேற்கொண்ட தொடக்ககால முயற்சிகளை பாராட்டுகிறேன். இதுபோன்ற முயற்சிகள், எதிர்காலத்தில் தொற்று நோய்களை தடுப்பதற்கு சிறந்த உதாரணமாகும்.உலகம் முழுவதும் ஊரடங்கு அமலில் இருப்பதால், அன்றாடம் வேலை செய்து பிழைப்போரின் வாழ்வாதாரம் மிகுந்த பாதிப்பிற்கு ஆளாகியுள்ளது. வருமானமின்றி தவித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்காகவும் இறைவனை வேண்டுகிறேன்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பாலசுப்பிரமணியன் அ. தலாய் லாமா மிகவும் மனிதாபிமானம் உள்ள மனிதர். இந்த இக்கட்டான காலத்தில் அந்த மகானின் நல் ஆசிகள் மக்களை காக்க மிகவும் அவசியம்.
Rate this:
Cancel
30-மார்-202018:57:47 IST Report Abuse
ஆப்பு இவுரு நம்ம தலிவரையே தூக்கி சாப்பிட்டுருவாரு.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
30-மார்-202018:19:12 IST Report Abuse
வெகுளி உங்க ஆசீர்வாதத்தினால் நல்லதே நடக்கட்டும் சாமி.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X