லண்டன்: ஜூன் 29ம் தேதி லண்டனில் துவங்கவிருந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ரத்தாகும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது
பிரிட்டனில் ஆண்டுதோறும் நடைபெற்று வந்த விம்பிள்டன் டென்னிஸ் போட்டி 1990களுக்குப் பிறகு உலகப் புகழ் பெற்றது. கடைசியாக் இரண்டாம் உலகப் போரின்போது விம்பிள்டன் போட்டி நிறுத்தப்பட்டது. அதன்பின்னர் தற்போதுதான் நிறுத்தப்பட்டுள்ளது. இதனை ஜெர்மன் டென்னிஸ் பெடரேஷன் துணை பிரஸிடண்ட் டிர்க் ஹார்டோர்ப் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். ஜூன் 29 1945ம் தேதி நடக்க இருந்த கிராண்ட் ஸ்லாம் போட்டி இரண்டாம் உலகப்போர் காரணமாக ரத்து செய்யப்பட்டபோது டென்னிஸ் வீரர்கள் அதிருப்தி அடைந்தனர்.

ஸ்கை ஸ்போர்ட்ஸ் இதழுக்கு பேட்டி அளித்த விம்பிள்டன் நிர்வாகிகள், அடுத்த புதனன்று நடக்கவுள்ள கூட்டத்தில் இந்த ஆண்டு விம்பிள்டன் போட்டிகள் நடக்குமா, நடக்காதா என இறுதி முடிவு அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். கொரோனா வைரஸ் பரவும் இந்த நேரத்தில் பல நாட்டு வீரர்கள் பிரிட்டன் வந்து சேருவது சாத்தியமற்றது. எனவே விம்பிள்டன் டென்னிஸ் போட்டி ரத்து செய்யப்படும் என கூறப்படுகிறது.
ஏற்கனவே இந்த ஆண்டு டோக்கியோவில் நடைபெற இருந்த ஒலிம்பிக் போட்டிகள் தள்ளிவைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE