டோக்கியோ: ஜப்பானிய ஸ்டேஜ் காமெடியன் கென் ஷிமுரா, 70 கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக நிமோனியா ஏற்பட்டு உயிரிழந்தார்.
ஜப்பானில் தொலைக்காட்சி காமெடி சீரீயல்களில் அறிமுகமான ஷிமுரா பின்நாட்களில் ஜப்பானின் புகழ்பெற்ற ஸ்டேஜ் காமெடியனாக புகழ்பெற்றார். டிரிப்டர்ஸ் என்ற காமெடி குழு 1970களில் ஜப்பானிய தொலைக்காட்சி காமெடி ஷோக்களில் உச்சத்தை தொட்டது. அதன் உறுப்பினர் ஷிமுரா.ஷிமுரா நடிப்பில் வெளியான 'ஏ க்ளூலஸ் ஃபவுடல் லார்ட்' என்ற நாடகம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

இந்நிலையில் நேற்று இரவு கொரோனா வைரஸ் தொற்றுக்கு பலியானதாக ஷிமுராஸ் டேலன்ட் ஏஜன்ஸி இசாவா அலுவலகம் உறுதி செய்துள்ளது.
ஷிமுரா மறைவுக்கு ஜப்பானிய காபினெட் செயலாளர் மற்றும் செய்தித் தொடர்பாளர் யொஷிஹிடே சுஹா ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். ஷிமுராவின் ரசிகர்கள் பேஸ்புக், டுவிட்டர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் அவருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE