பொது செய்தி

இந்தியா

அவசர உதவி எண்ணில் சமோசா கேட்டு தொந்தரவு:பாடம் புகட்டிய மாஜிஸ்திரேட்..!

Updated : மார் 30, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (20)
Share
Advertisement

கொரோனா உதவி எண்ணுக்கு போன் செய்து சமோசா கேட்டு தொந்தரவு செய்த நபருக்கு வினோத தண்டனை அளித்த சம்பவம் நடைபெற்றுள்ளது.



latest tamil news



கொரோனா பரவாமல் தடுக்க ஏப்.14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோருக்கு உதவ அந்தந்த மாவட்ட நிர்வாகம் சார்பில் அவசர உதவி எண்கள் அறிவிக்கப்பட்டன.
உ.பி.,யின் ராம்பூர் மாவட்ட அவசர உதவி எண்ணுக்கு இளைஞர் ஒருவரிடம் இருந்து அழைப்பு வந்துள்ளது. தன்னுடைய வீட்டு முகவரிக்கு சூடான சமோசா வேண்டுமென அவர் கேட்டுள்ளார். தொடர்ச்சியாக பலமுறை உதவி எண்ணுக்கு அழைத்து நச்சரித்துள்ளார்.. இதனால் கடுப்பான மாவட்ட மாஜிஸ்திரேட் ஆஞ்சநேய குமார் சிங், போனில் தொந்தரவு செய்த ஆசாமிக்கு பாடம் புகட்ட முடிவு செய்தார்.
சூடான சமோசாவுடன் போனில் தொந்தரவு செய்த நபரின் வீட்டிற்கு நேரில் சென்று டெலிவரி செய்த மாஜிஸ்திரேட், உதவி எண்ணுக்கு அழைத்து தொந்தரவு செய்ததற்கு தண்டனையாக , அப்பகுதியில் உள்ள சாக்கடையை சுத்தம் செய்ய உத்தரவிட்டுள்ளார். மேலும் நாடு சுகாதார நெருக்கடி காரணமாக ஊரடங்கு அமலில் உள்ள சூழலில், தேவையற்ற முறையில் அழைப்பு விடுப்பதை மற்றவர்கள் தவிர்க்க வேண்டுமெனவும் கேட்டுகொண்டுள்ளார்.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (20)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ray - Chennai,இந்தியா
31-மார்-202012:08:57 IST Report Abuse
Ray மாவட்ட மாஜிஸ்திரேட் endraal kalakttar endrarika
Rate this:
Cancel
Muraleedharan.M - Chennai,இந்தியா
31-மார்-202005:12:44 IST Report Abuse
Muraleedharan.M இது எப்படி இருக்கு
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
31-மார்-202003:35:01 IST Report Abuse
J.V. Iyer நன்று..நன்று.. இதே பாணியில், சும்மா ஊர் சுற்றுபவர்களை தண்டிக்கலாம். உடனே செயல் படுத்துங்கள். ஒரு நாள் சாக்கடை, டாய்லெட் சுத்தம் செய்யவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X