சிறப்பு பகுதிகள்

பக்கவாத்தியம்

'பைக்கை பறிமுதல் பண்ணுங்க!'

Added : மார் 30, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement
 'பைக்கை பறிமுதல் பண்ணுங்க!'

தமிழக வடக்கு மண்டல, ஐ.ஜி., நாகராஜன், கள்ளக்குறிச்சி மாவட்டப் பகுதியில், ஊரடங்கு குறித்து, சமீபத்தில் ஆய்வு செய்தார்.
பின், நிருபர்களிடம் அவர் கூறுகையில், 'ஊரடங்கு உத்தரவை மீறி கள்ளக்குறிச்சி, விழுப்புரம், கடலுார் ஆகிய மூன்று மாவட்டங்களில், வெளியே சுற்றித் திரிந்தது தொடர்பாக, 1,182 பேர் கைது செய்யப்பட்டு, 810 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளன. மக்கள், அத்தியாவசிய தேவையின்றி, வெளியே சுற்றக் கூடாது' என்றார்.முக கவசம் அணிந்திருந்த, இளம் நிருபர் ஒருவர், 'சில சேட்டைக்கார பயலுக, வீட்டுக்குள்ளேயே இருக்க மாட்டேங்கிறாங்க... அவங்களை அடக்குறது, கொஞ்சம் கஷ்டம் தான் சார்...' என்றார்.
அதற்கு, மூத்த நிருபர், 'அதெல்லாம் இல்லை... வெளியே சுத்துற பசங்களோட, 'பைக்'கை பறிமுதல் செஞ்சு, ஊரடங்கு முடிஞ்ச பின், ஒப்படைச்சா போதும்... பாதி பிரச்னை சரியாகிடும்' என்றார். இளம் நிருபர், அதை ஆமோதித்தார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
31-மார்-202020:10:00 IST Report Abuse
Mohanraj Raghuraman காரணமில்லாமல் பைக் வைத்து சுற்றி வருபவர்களை அடக்க பைக்குகளை பறிமுதல் செய்வது நல்ல யோசனை தான். தடியடி செய்யக்கூடாது என்பது சரி தான். அதை பயன் படுத்திக்கொண்டு அமைதியாய் அறிவுரை சொல்லிக் கொண்டிருந்த காவலாளியை திடீரென ஒருவன் பளார் என்று அறைந்தது தான் மனதை நெருடுகிறது. இது போன்ற மதி கெட்டவர்களை தடியடியால் தான் சரி செய்ய முடியும்.
Rate this:
Cancel
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
31-மார்-202006:38:16 IST Report Abuse
 nicolethomson பைக்கை பறிமுதல் செஞ்சு அதனை காப்பது ?
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
31-மார்-202006:16:35 IST Report Abuse
D.Ambujavalli அந்த ‘சேட்டைக்காரப் பயல்கள்’ தாமும் வைரஸை விலைக்கு வாங்கி, ஊருக்கும் பரப்பும்போது அவர்களை போலீஸ் லாக்கப்பில் மடக்கிப்போட வேண்டும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X