ஐரோப்பிய நாடுகளில் கொத்துக் கொத்தாக மடியும் மக்கள்

Updated : ஏப் 01, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (6)
Share
Advertisement
ஐரோப்பிய நாடுகளில் கொத்துக் கொத்தாக மடியும் மக்கள்

பாரிஸ்: கொரோனா வைரஸ் பாதிப்பால், உலகெங்கும், 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இதில், ஐரோப்பிய நாடுகளில் 25 ஆயிரம் பேர் பலியாகி உள்ளனர்.

கொரோனா வைரஸ் பாதிப்பை தடுக்க முடியாமல் உலக நாடுகள் திணறி வருகின்றன. தடுப்பூசியும் இல்லை, மருந்தும் இல்லை என்ற நிலையில், இந்த வைரஸ் தொற்று, மிக மிக வேகமாக பரவி வருகிறது.உலகெங்கும், 185 நாடுகளில், ஏழு லட்சத்து, 38 ஆயிரத்து, 987 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. அதில், ஒரு லட்சத்து, 56 ஆயிரத்து, 317 பேர் குணமடைந்துள்ளனர். அதே நேரத்தில், 35 ஆயிரத்து, 13 பேர் உயிரிழந்துள்ளனர்.இதில், 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பலி, ஐரோப்பிய நாடுகளில் பதிவாகியுள்ளது.


latest tamil news



ஸ்பெயினில், 24 மணி நேரத்தில், 812 பேர் உயிரிழக்க, பலி எண்ணிக்கை, 7,340ஆக உயர்ந்துள்ளது. புதிதாக, 5,086 பேருக்கு தொற்று ஏற்பட, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 85 ஆயிரத்து, 195ஆக உயர்ந்துள்ளது. அதே நேரத்தில், அதிக பலியில், இத்தாலி முதலிடத்தில் உள்ளது. அங்கு, 10 ஆயிரத்து, 779 பேர் உயிரிழந்துள்ளனர். அங்கு, 97 ஆயிரத்து, 689 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு, ஐரோப்பிய நாடான பெல்ஜியத்தில், பலி எண்ணிக்கை, 513ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை, 11 ஆயிரத்து, 899ஆக உயர்ந்துள்ளது.இந்நிலையில், அதிக வைரஸ் தொற்று உள்ளோர் பட்டியலில், அமெரிக்கா தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது. அங்கு, ஒரு லட்சத்து, 42 ஆயிரத்து, 793 பேருக்கு தொற்று உள்ளது. வைரசால், 2,490 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news




ஈரான்



மேற்காசிய நாடான ஈரானிலும், வைரஸ் பாதிப்பு மிகத் தீவிரமாக உள்ளது. அங்கு, 41 ஆயிரத்து, 495 பேருக்கு வைரஸ் தொற்று உள்ளது. இதுவரை, 2,767 பேர் உயிரிழந்துள்ளனர்.கடந்த, பிப்., 19ல் தான், ஈரானில், முதல் தொற்று பதிவானது. மிக வேகமாக பரவி வருவதால், ஏற்கனவே, ஊரடங்கு அங்கு அமலில் உள்ளது. இந்த நிலையில், ஏப்., 8 வரை, நகரங்களுக்கு இடையேயான பயணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.


ஊரடங்கு தொடருமா?



இதுவரை சந்தித்திராத, மிகத் தீவிரமான ஊரடங்கு உத்தரவை, ஐரோப்பிய நாடுகள் சந்தித்து வருகின்றன. அதிக பலியில் முதலிடத்தில் உள்ள இத்தாலியில், ஏற்கனவே விதிக்கப்பட்ட, ஊரடங்கு உத்தரவு, ஏப்., 3ல் முடிவுக்கு வருகிறது. பலி எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருவதால், ஊரடங்கு உத்தரவு தொடருமா என்ற சந்தேகம் இருந்தது.

இந்நிலையில், 'மிக நீண்ட கால ஊரடங்கை நாம் சந்திக்க நேரிடும். நிலைமை சீரானால் தான், படிப்படியாக விலக்கி கொள்ளப்படும்' என, இத்தாலி அமைச்சர்கள் கூறி வருகின்றனர். ஏற்கனவே, அங்கு மருத்துவ அவசரநிலை, ஜூலை, 31 வரை இருக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால், ஜூன் வரை, ஊரடங்கு அமலில் இருக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


இந்திய டாக்டர் எச்சரிக்கை



ஐரோப்பிய நாடான பிரிட்டனில் பணியாற்றும், இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, டாக்டர் குட்டி சிங் கூறியுள்ளதாவது:உயர்மட்ட நிலையில் எடுக்கப்பட்ட சில தவறான தவறுகளால், லண்டன் உள்பட, பிரிட்டனில் மிகப் பெரிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க போதிய மருத்துவமனைகள் இல்லை. முக கவசம் உள்ளிட்ட பாதுகாப்பு சாதனங்களுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. அடுத்த சில நாட்களில், சுனாமி போல், மக்கள், மருத்துவமனைகள் முற்றுகையிடும் அபாயம் உள்ளது.இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


தவிக்கும் தொழிலாளர்கள்



சவுதி அரேபியா உள்ளிட்ட, வளைகுடா நாடுகளில், ஒரு கோடி வெளிநாட்டவர் பணியாற்றி வருகின்றனர். இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். உலகெங்கும் உள்ள, வெளிநாட்டு தொழிலாளர்களில், 10 சதவீதம் பேர், வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்றனர்.தங்களுடைய நாடுகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், உள்ளே நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், வெளியேற முடியாமல், வளைகுடா நாடுகளிலேயே தங்கியுள்ளனர். வேலையை இழந்ததுடன், கையில் பணம் இல்லாமல், உணவு கிடைக்காமல் இவர்கள் தவித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
vbs manian - hyderabad,இந்தியா
31-மார்-202012:02:59 IST Report Abuse
vbs manian அன்று ஹிட்லர் செய்த வேலையை காரோண இன்று எந்த சப்தமும் இன்றி செயகிறது
Rate this:
Cancel
Mohan Kumar - Chennai,இந்தியா
31-மார்-202008:49:35 IST Report Abuse
Mohan Kumar சீனா தன்னை தவிர்க்க முடியாத சக்தியாக ஆக்கி கொள்ள செயல்படுகிறது. இனி உலக மக்கள் அனைவரும் சீன தயாரிப்புகளை தவிர்ப்பது மட்டுமே அந்த நாட்டை வழிக்கு கொண்டுவர ஒரு வழியாக இருக்கும்.
Rate this:
nicolethomson - சிக்கநாயக்கனஹள்ளி ,துமகூரு,இந்தியா
02-ஏப்-202005:47:48 IST Report Abuse
 nicolethomsonஅது மிகவும் கஷ்டம் சார்...
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
31-மார்-202004:11:34 IST Report Abuse
blocked user சீனா உட்பட பல நாடுகள் பொருளாதாரம் படுத்துவிடும் என்ற பயத்தில் மக்களை கொன்று குவிக்கிறார்கள். பணக்கார, தொழில்வள நாடுகள் கூட சிக்கி சின்னாபின்னமாகிறது. ஆகவே இந்தியா அதன் ஊரடங்கை மதித்து நோயை தடுக்க முயலவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X