பொது செய்தி

இந்தியா

பிரதமர் நிவாரண நிதி: தொழில் நிறுவனங்கள்,பிரபலங்கள் ஆர்வம்

Updated : ஏப் 01, 2020 | Added : மார் 30, 2020 | கருத்துகள் (14)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க,உச்ச நீதிமன்ற ஊழியர்கள், தொழில் நிறுவனங்கள், பிரபலங்கள் என, பலரும் முன்வந்துள்ளனர்.உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டியிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க,
பிரதமர் நிவாரண நிதி: தொழில் நிறுவனங்கள்,பிரபலங்கள் ஆர்வம்

புதுடில்லி : கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமரின் நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்க,உச்ச நீதிமன்ற ஊழியர்கள், தொழில் நிறுவனங்கள், பிரபலங்கள் என, பலரும் முன்வந்துள்ளனர்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ், வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில், இந்த வைரசால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, ஆயிரத்தை தாண்டியிருப்பதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். இந்த வைரஸ் பரவலை தடுக்க, மத்திய, மாநில அரசுகள், பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. இதற்காக, பிரதமர் நரேந்திர மோடி, நிதியுதவி செய்யும்படி, கடந்த, 28ம் தேதி, நாட்டு மக்களிடம் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, பலரும் தங்கள் பங்களிப்பை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற ஊழியர்கள், பிரதமரின் நிவாரண நிதிக்கு, நன்கொடை வழங்க முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து, அதன் பதிவாளர் ராஜேஷ் குமார் கோயல் கூறியதாவது:அனைத்து 'கெஜடட்' அதிகாரிகளும், தங்கள், மூன்று நாள் சம்பளத்தையும், கெஜடட் அல்லாத அதிகாரிகள், இரண்டு நாள் சம்பளத்தையும், 'குரூப் சி' ஊழியர்கள், ஒரு நாள் சம்பளத்தையும், பிரதமரின் நிவாரண நிதிக்கு, நன்கொடையாக வழங்குவர். இந்த நன்கொடை, மார்ச் மாத சம்பளத்தில் இருந்து பிடித்தம் செய்யப்படும். நன்கொடை அளிக்க விரும்பாதவர்கள், இன்று காலை, 10 மணிக்குள், நீதிமன்ற அலுவலகத்தில் வந்து தெரிவிக்கவேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.
கட்டுமான துறையில் முன்னணியில் இருக்கும், லார்சன் அண்ட் டூப்ரோ நிறுவனம், கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக, பிரதமரின் நிவாரண நிதிக்கு, 150 கோடி ரூபாய், நன்கொடை வழங்குவதாக அறிவித்துள்ளது.

இதைத்தவிர, தன் நிறுவனத்தில் பணிபுரியும், 1.60 லட்சம் ஒப்பந்த தொழிலாளர்களுக்கு உதவும் வகையில், மாதம், 500 கோடி ரூபாயை ஒதுக்கவும் முடிவு செய்துள்ளது.பிரபல பாலிவுட் நடிகர் கார்த்திக் ஆர்யன், 1கோடி ரூபாயும், நடிகை ஷில்பா ஷெட்டி - ராஜ் குந்த்ரா தம்பதி, 21 லட்சம் ரூபாயும், நன்கொடையாக வழங்குவதாக அறிவித்துள்ளனர்.


அம்பானி ரூ.500 கோடி


'கொரோனா' நிவாரண நிதிக்கு இந்த வரிசையில், 'ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்' தலைவர் முகேஷ் அம்பானி, 500 கோடி ரூபாய், நிதி அளித்துள்ளார். மேலும், மஹாராஷ்டிரா மற்றும் குஜராத் மாநில அரசுகளுக்கு, கூடுதலாக, தலா ஐந்து கோடி ரூபாய் நிதி உதவி அறிவித்துள்ளார்.இதற்கான அறிவிப்பு, நேற்று வெளியிடப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
31-மார்-202023:54:56 IST Report Abuse
தமிழர்நீதி கொரோனா நமக்கு வெளிச்சம் போட்டு காட்டிய மூடநம்பிக்கைகள் ( மாமியும் காணோம் மாமாவையும் காணோம் , அங்கியையும் காணோம் லுங்கியையும் காணோம் . சங்கியும் தொலைந்தான் , திருப்பதி முடி வியாபாரியும் அழிந்தான் ) 1. திருப்பதியில் இருந்து பழனி திருவண்ணாமலைன்னு அத்தனையும் டுபாக்கூர். 2. வாடிகன்ல இருந்து வேளாங்கண்ணி வரைக்கும் வெறும் டுமீல். 3. மெக்காவுல இருந்து லோக்கல் மசூதி வரைக்கும் மொத்தமும் புஸ்ஸ்சு. 4. யோகா அத்தனை நோயையும் குணப்படுத்தும் ன்னு சொன்ன ராம்தேவ் காணாமல் போனான் 5. தியானத்தின் மூலம் குணப்படுத்தலாம்ன்னு சொன்ன ஜக்கி ஓடி ஒளிந்தான். 6. ஏசுவையே தன்னோட வீட்டில் வாடகைக்கு வெச்ச மாதிரி, அப்பப்போ ஏசுவை அழைக்கிறேன் அழைக்கிறேன்னு ஒரேயொரு பைபிளை வைத்து உலக கோடீஸ்வரன் ஆன பால்தினகரன் எங்க போனான்னு தெரியல. 7. மருந்தே வேணாம் வெறும் ஹீலிங்ல குணப்படுத்தலாம்ன்னு சொன்ன ஹீலர் பாஸ்கர் எங்கேன்னு தெரியல. 8. ஒரு நொடியில் எல்லாத்தையும் குணப்படுத்தும் நவீன் பாலாஜி ஆளையே காணோம் 9. மோகன் சி லாசரஸ்ன்னு ஒருத்தர் பைபிள வெச்சு குணப்படுத்துற உலகமகா டாக்டர் அவரை காணல 10. காசினி கீரை மூலம் உலகிலுள்ள அனைத்து வியாதியையும் குணம் படுத்துகிறோம் என புரூடால சம்பாதிக்கிற வாணியம்பாடி அப்துல் கவுசர் காணாமல் போயிட்டான் 11. ஐயர்களின் லோக குரு காஞ்சி மடாதிபதி விஜயேந்திரன் மடத்தையே மூடிட் டான். 12. கண்ணுக்கு தெரியாத ஒரே ஒரு கிருமியை பார்த்து ஒட்டு மொத்த கடவுள் வியாபரிகளும் போலி ஹீலர்களும் துண்டக்கானோம் துணியக்கானோம்னு ஓடராணுக. கல்கி பகவான் காணாமல் போய் விட்டான். மேல்மருவத்தூர் அம்மா வையும் காணோம்.அம்மா பசங்களாய்யும் காணோம். ஆனா ஓட்டுதுணி கூட இல்லாத சாலையோர சாமானியன் சாக்கடையோரத்துல கொசுக்கடில நிம்மதியா தூங்கறான். சிந்தித்து பார்த்தால் உண்மை விளங்கும் : கடவுள் கோவுலுக்குள்ளும் இல்லை . சாமியாடிகளிடமும் இல்லை . தனிமனிதன் உள்ளத்தில் இருந்து செயலாக உருப்பெறுகிறான் .மனிதனில் தெய்வம் உருவெடுக்கிறார் . அதை மறந்த மனிதன் கடவுளை விற்பவனிடம்இறைவன் பேரில் உடுக்கைஅடித்து உண்டியலை நீட்டுபவனிடம் மாட்டிக்கொள்கிறான். கடவுள் பற்றி சரியான புரிதல் சரியான அணுகுமுறை சரியான விழிப்புணர்வு ஆகியவைகள் இருந்தால் நாடு முன்னேறும் மனிதனுக்கு மனிதனே உதவுவான் ஓட்டுனராக நண்பனாக மருத்துவனாக ஆசிரியனாக செவிலியராக இன்னும் ஏராளமாக....கருத்து பகிக்கிறவனாக .. கடவுளை வெளிப்படுத்துகிறான் .. கோவில்கள் மூடப்பட்டதால் , மதம் தணிந்து கடவுள் மனிதனில் பரவிவிட்டான் .. மனிதம் போற்றுவோம் சக மனிதர்களை மதிப்போம் காப்போம்
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
03-ஏப்-202000:22:34 IST Report Abuse
sankarமண்சுவனுக்கு மனிதன் எப்புடி உதவுவான் . ஒதுங்கி இரு யாரோடையும் பேசாதே துறவி போல் வாழ் என்று கோரோரோனோ சொல்கிறது...
Rate this:
sankar - new jersy,யூ.எஸ்.ஏ
03-ஏப்-202000:28:56 IST Report Abuse
sankarஒரு முறைதான் காதல் வரும் தமிழர் பண்பாடு அந்த ஒன்று எது என்பது தான் கேள்வி இப்போது வருவதெல்லாம் காதிலித்தால் வாழ்க்கை என்னாகும் தான் வாழ்க்கையையே காதலித்தால் புரியும் அப்போது என்ற பாட்டு உண்டு அதே போல . இறைவன் உதவமாட்டான் மனிதன்தான் உதவுவான் என்கிறீர்கள் . மனிதன் இறைவன்தான் என்ற அத்வைதம் புரிந்தால் மனிதனும் இறைவனும் மரம் செடி கோடி காது எல்லாம் ஒண்ணுதான் என்று புரியும் (வேதியல் படி ப்ரபஞ்சமி அணுக்கள் மூலக்கூறுகள்தான் )...
Rate this:
Cancel
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
31-மார்-202020:23:17 IST Report Abuse
தமிழர்நீதி 545 எம்.பி க்கள் 245 ராஜ்யசபா எம்.பி க்கள் 4210 எம்.எல்.ஏ க்கள் மொத்தம் 4910 மக்கள் பிரதிநிதிகளை கொண்டது இந்தியா. இவர்கள் ஒவ்வொருவரும் தலா 5 லட்சம் தங்கள் சொந்த பணத்தை இந்த தேசத்திற்காக செலவு செய்தால் வரும் தொகை எவ்வளவு தெரியுமா...2,455,000,000/- தமிழகத்தில் ஜெயா சசிக்கு சேர்த்தப்பணம் . ஆத்துமணலில் சேர்த்தப்பணம் .. சாலைபோட்டதில் சேர்த்தப்பணம் பாலம் கட்டியதில் அடித்தக்கொள்ளை . குட்காவில் சூறையாடிய பணம் . கார்போரேட்டுக்கு கரண்ட் கனெக்சன் கொடுக்க வாங்கியபணம் . மருத்துவக்கல்லூரி .. தாதியர் கல்லூரி கட்டிடம் கட்ட அனுமதிக்கு வாங்கியபணம் . வீடுகட்ட கட்டிட அனுமதிக்கு என்று தினம் சேர்க்கும் பணம் . அரசு மருத்துவமனைக்கு மருத்துவங்குவதில் அடித்தக்கொள்ளை . அரசு ஊழியர்கள் ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு வாங்கியபணம் . TNPSC தேர்வு தேறவைத்து சேர்த்த பணம் . எரிசாராயத்தில் நீரை ஊற்றி , சிறிது கலரைசேர்த்து , டாஸ்மாக் சரக்கு என்று சேர்த்தப்பணம் . கோடி கோடி கோடி கோடி .... இதுல பழனி நிதி கிடக்கிறார் .. மோடி நடுத்தர மக்களிடமே நிதியை கேட்கிறார் அவர்களிடம் அப்படி அரசு என்ன கொடுத்தா வைத்திருக்கிறது இந்த மக்கள் பிரதிநிதிகளை கொடுத்ததை போல..?? இந்த ஊழல் கும்பலை.. கேக்கட்டுமே கேட்டு இந்த தொகையை மக்களின் நலனுக்கு செலவு செய்யட்டுமே... நடுத்தர மக்களுக்கு மட்டும் தான் நாட்டின் நலனை காக்கும் அக்கறை இருக்கிறன்றதோ.? ஏன் இந்த எம்.பி மற்றும் எம்.எல்.ஏ க்களுக்கு ..ஊழல் கும்பலுக்கு .. தொழிலதிபர்களுக்கு .. அரிதார கும்பலுக்கு எந்த பொறுப்புமே இல்லையா..மிஸ்டர் ப்ரைம் மினிஸ்டர். மிஸ்டர் பழனிசாமி .. மக்கள் பணத்தில் மேல் இருக்கும் கண்ணை அவர்களின் நலனில் மேல் வையுங்கள். மக்களுக்கு 👉 மருத்துவ ஊழியர்களுக்கு .. களத்தில் நிற்போருக்கு.. நேரில் கொடுக்கத்தெரியும் .. நீங்கள் வரிப்பணத்தை .. உங்களிடம் கொட்டிக்கிடக்கும் ஊழல் பணத்தை வெளியிலெடுங்கள் .
Rate this:
Cancel
31-மார்-202019:06:11 IST Report Abuse
மனுநீதி-என் சொந்த பெயர் ராஜா இரும்பு மனிதன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X