வூஹானில் கடைகள் திறப்பு மக்கள் வீதிகளில் கொண்டாட்டம்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (22)
Share
Advertisement
coronavirus wuhan, coronavirus China, coronavirus, covid 19, china, health, disease,
வூஹான், கடைகள் திறப்பு,  கொண்டாட்டம்

வூஹான் : கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்த, சீனாவின் வூஹான் நகரில், இரு மாத ஊரடங்கு முடிவிற்கு வந்ததை அடுத்து, நேற்று பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.
ஏராளமான மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து, சுதந்திர காற்றை சுவாசித்து, மகிழ்ச்சியில் திளைத்தனர். ''எனக்கு ஓ வென கத்தி அழணும் போல இருக்கு,'' என, துள்ளிக் குதிக்கிறார், சுஹி ஹன்ஜி என்ற ஆசிரியை.


latest tamil news
சோதனை


நான்ஜிங் நகரில் பணியாற்றி வரும் இவர், ஜனவரியில், தன் குடும்பத்தாரை சந்திக்க, வூஹான் வந்து, வெளியேற முடியாமல் சிக்கிக் கொண்டார்.நேற்று, நகரில், 80 சதவீதம் பேர் கடைகளை திறந்திருந்தனர். ஒருசில கடைகாரர்கள், வாடிக்கையாளர்கள் நுழைய கட்டுப்பாடுகள் விதித்திருந்தனர்.
சில கடைகளின் வாசலில், கிருமி நாசனி பாட்டில்கள் வைக்கப்பட்டிருந்தன.அவற்றை பயன்படுத்திய பிறகே, வாடிக்கையாளர்கள் உள்ளே நுழைய அனுமதிக்கப்பட்டனர். ஒரு சில வியாபாரிகள், வெப்ப மானி சோதனையுடன் வாடிக்கையாளர்களை வரவேற்றனர்.இந்தாண்டு, ஜன.,23ல், நிறுத்தப்பட்ட பஸ்,ரயில் சேவைகள், மூன்று தினங்களுக்கு முன் மீண்டும் துவங்கின.ஹூபய் மாகாணத்தில், வூஹான் உள்ளிட்ட பெரும்பாலான நகரங்களில் விதிக்கப்பட்ட, பயணக் கட்டுப்பாடு,23ம் தேதியன்று தளர்த்தப்பட்டது.
வூஹான் நகரை விட்டு வெளியேறுவதற்கான கட்டுப்பாடு, ஏப்.,8ல்முடிவடைகிறது. உற்பத்தி மையமாக விளங்கும் வூஹான் நகரில், வாகன தயாரிப்பு உள்ளிட்ட பல தொழிற்சாலைகள் திறக்கப்பட்டுள்ளன.எனினும், உதிரி பாகங்களை கொள்முதல் செய்ய வேண்டியுள்ளதால், இயல்பு நிலைதிரும்ப சில நாட்களாகும் என, எதிர்பார்க்கப்படுகிறது. பல நிறுவனங்களில், சொந்த ஊர் சென்ற ஊழியர்கள் இன்னும் திரும்பாததால், முழு அளவில் பணிகள் துவங்கவில்லை.


விழிப்புணர்வு


வூஹான் நகரில், ஆங்காங்கே, முக கவசத்தின் அவசியத்தை உணர்த்தும் கொரோனா விழிப்புணர்வு பதாகைகள், ஊர் திரும்புவோரை வரவேற்கும் விளம்பர தட்டிகள் வைக்கப்பட்டுஉள்ளன. பஸ்ஸில் சென்று கொண்டிருந்த சிலர், சாலையோரம் நின்றிருந்த இரு மருத்துவ பெண்மணிகளை பார்த்து,கையசைக்கின்றனர்.அது, மிகப்பெரிய தேசத்தின் மக்களை, அழிவில் இருந்து காத்த கரங்களுக்கு கூறும் நன்றி.

Advertisement
வாசகர் கருத்து (22)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
31-மார்-202012:48:18 IST Report Abuse
Bhaskaran உலகநாடுகளிலிருக்கும் அப்பாவிகளின்மேல் நோயை ஏவிவிட்டுவிட்டு ஒங்களுக்கு கொண்டாட்டம் வேறா
Rate this:
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
31-மார்-202011:50:12 IST Report Abuse
J.Isaac சீனா பொருட்களை புறக்கணிப்போம்
Rate this:
Cancel
S.Venkatesh Kumar - CHENNAI,இந்தியா
31-மார்-202010:17:31 IST Report Abuse
S.Venkatesh Kumar First you avoid Chinese item starting from children s dolls ,pins, plastic items all crockery items, flowers shows ,folies etc don't buy any things from shop selling. China items ,then only indian economy will grow by using indian product s , India is biggest market for Chinese product s and there economy ,then don't go for medical seat to China this year admission should be zero from India . Agent s and parents from India should avoid medical colleges adminsion of China, Indonesia, Malaysia , Philippines and Thailand . This my request , Valka Valamudan .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X