பொது செய்தி

தமிழ்நாடு

அமைந்தகரை மார்க்கெட் கிரசன்ட் பூங்காவிற்கு மாற்றம்?

Added : மார் 31, 2020
Share
Advertisement

அண்ணாநகர் : அமைந்தகரை மார்க்கெட், தற்காலிகமாக கிரசன்ட் பூங்காவிற்கு மாற்றும் பணியை, மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், பல்வேறு நடவடிக்கைகள், சென்னை மாநகராட்சியினர் மேற்கொண்டு வருகின்றனர். பல்பொருள் அங்காடி, மார்க்கெட் உள்ளிட்ட கடைகளுக்கு செல்லும் மக்கள், சமூக இடைவெளி விட்டு சென்று தான், தங்களுக்கு தேவையானவற்றை வாங்க வேண்டும் என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.அதன்படி சில இடங்களில் இடநெருக்கடியில் செயல்பட்டு வரும் மார்க்கெட்கள், தற்காலிகமாக, அருகில் உள்ள மாநகராட்சி விளையாட்டு மைதானம், பூங்காவிற்கு மாற்றப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், அமைந்தகரை மார்க்கெட்டை தற்காலிகமாக கிரசன்ட் பூங்காவிற்கு மாற்ற, அண்ணாநகர் மண்டல அதிகாரி சுந்தர்ராஜன் தலைமையிலான அதிகாரிகள் முடிவு செய்தனர்.அதன்படி, தற்போது பூங்காவில், சமூக இடைவெளி விட்டு கோடு போட்டு வருகின்றனர்.

இது குறித்து அண்ணாநகர் மண்டல செயற்பொறியாளர் கூறியதாவது:அமைந்தகரை மார்க்கெட்டில், காய்கறி கடைகள், 52, மீன் கடைகள், 44, ஆட்டு இறைச்சி கடைகள், 10 உள்ளன. தற்போது செயல்பட்டு வரும் அமைந்தகரை மார்க்கெட், இடநெருக்கடியில் செயல்பட்டு வருகின்றன.மக்கள் நலன் கருதியும், சமூக இடைவெளி தேவை என்பதாலும், தற்காலிகமாக, கிரசன்ட் பூங்காவிற்கு மாற்றும் பணி மேற்கொண்டு வருகிறோம்.இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X