பொது செய்தி

இந்தியா

கொரோனா எதிரொலி: தெலுங்கானா அரசு ஊழியர்கள் சம்பளம் குறைப்பு

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (30)
Share
Advertisement
Telangana government, employees salary, coronavirus crisis, economy, telangana economy, coronavirus india, தெலுங்கானா, அரசு ஊழியர்கள், சம்பளம், குறைப்பு

ஐதராபாத்: தெலுங்கானாவில் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள அரசு நிர்வாகத்தில் பல்வேறு பிரிவுகளில் உயரதிகாரிகள், ஊழியர்களுக்கு சம்பள குறைப்பை அம்மாநில அரசு அதிரடியாக அறிவித்துள்ளது.
இந்தியாவில் கொரோனா' வைரஸ் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில், ஏப்., 14 வரையில், 21 நாட்களுக்கு, நாடு முழுவதும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. 'மக்களுக்கு ஏற்படும் பொருளாதார இழப்பை தடுக்க மத்திய நிதி அமைச்சர், நிர்மலா சீதாராமன், பல்வேறு அறிவிப்புகளையும் வெளியிட்டார்.


latest tamil newsஇந்நிலையில் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவ் தலைமையில் நடந்த உயர்மட்ட குழு கூட்டத்திற்கு பின் முதல்வர் அலுவலகம் வெளியிடப்பட்ட அறிவிப்பு வருமாறு,தெலுங்கானாவில் பரவிவரும் கொரோனா வைரஸ் பாதிப்பை எதிர்கொள்ள வேண்டி, தெலுங்கானா அரசில் முதல்வர், மற்றும் அமைச்சரவை, எம்.எல்.ஏக்கள், எம்.எல்.சி.க்கள், மாநில நிறுவனத் தலைவர்கள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் சம்பளத்தில் 75 சதவீதம் குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

தவிர ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ், ஐ.எஃப்.எஸ்., உள்ளிட்ட மத்திய அரசு அதிகாரிகளுக்கு 60 சதவீத சம்பளக் குறைப்பு இருக்கும். மற்ற பிரிவு ஊழியர்களுக்கு 50 சதவீத சம்பளக் குறைப்பும், நான்காம் வகுப்பு, அவுட்சோர்சிங் மற்றும் ஒப்பந்த ஊழியர்களுக்கு, 10 சதவீத சம்பள குறைப்பும், அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள், அரசு மானியங்களைப் பெறும் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கும் சம்பள குறைப்பு இருக்கும். .இவ்வாறு அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (30)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mohanraj Raghuraman - Madurai,இந்தியா
31-மார்-202020:19:34 IST Report Abuse
Mohanraj Raghuraman ஆந்திர அரசின் சம்பள குறைப்பு ஆணை சரியில்லை. சேலம், திரு சுகவனம் அவர்களின் கருத்தை ஆதரிக்கிறேன்.
Rate this:
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
31-மார்-202012:47:08 IST Report Abuse
Bhaskaran தமிழ்நாட்டில் அரசியல்வாதிகளுக்கு சம்பளம் நிறுத்தலாம்
Rate this:
Cancel
CHINTHATHIRAI - TUTICORIN,இந்தியா
31-மார்-202012:04:29 IST Report Abuse
CHINTHATHIRAI அனைவரும் அரசு உத்திரவை கண்டிப்பாக கடைபிடிக்கவேண்டும் . STAY AT HOME. Reduce the workload to the medicos, sanitary authorities and police. They are also family. Human being. Please Stay at home.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X