மதவழிபாடு கூட்டத்தில் கொரோனா தொற்று; 6 பேர் பலி

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (46)
Share
Advertisement

ஐதராபாத் : டில்லியில் கடந்த வாரம் நடந்த மத வழிபாட்டில் கலந்து கொண்டவர்களில் தெலுங்கானாவை சேர்ந்த 6 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.



latest tamil news




கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே செல்வதால் பாதிப்பும் பலியும் கூடிக்கொண்டிருக்கிறது. நோய்த்தொற்றிலிருந்து பாதுகாக்க அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்கிறது. மக்கள் அதிகமாக கூடுமிடங்களில் நோய் பரவ வாய்ப்புள்ளதால் 144 தடை மற்றும் ஊரடங்கு உத்தரவு மூலம் மக்களை வீட்டினுள் இருக்க வைத்து பாதுகாப்பு அளித்து வருகிறது.

இந்நிலையில் டில்லியின் நிஜாமுதீனில் உள்ள மார்க்கஸில் (மசூதி) மார்ச் 13-15 வரை மதவழிபாடு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில் சுமார் 200 பேர் வரை கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இந்த கூட்டத்தில் சில வெளிநாட்டவர்களும் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்டவர்களில் தெலுங்கானாவைச் சேர்ந்த 6 பேர் உயிரிழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதை தெலுங்கானா மாநில அரசு நேற்று(மார்ச் 30) உறுதிபடுத்தியுள்ளது. மேலும் கொரோனா வைரஸ் தொடர்பான இந்த 6 இறப்புகளில், 2 காந்தி மருத்துவமனையிலும், அப்போலோ, குளோபல், நிஜாமாபாத் மற்றும் கட்வாலில் என தலா ஒருவர் உயிரிழந்தனர்.


latest tamil news



உயிரிழப்புகளை தொடர்ந்து, நிஜாமுதீனில் வழிபாடு நடந்த பகுதியில் பலருக்கு பாதிப்பு இருக்ககூடும் என்பதால் போலீசார் அநத பகுதிக்கு சீல் வைத்தனர். கொரோனா தொற்று உள்ளதாக பலரையும் மருத்துவமனையில் சோதனைக்காக அனுமதித்தனர்.

இது தொடர்பாக அதிகாரி ஒருவர் கூறுகையில், அரசு விதித்த தடை உத்தரவை மீறி கூட்டம் நடந்துள்ளது. இதை ஏற்பாடு செய்தவர்களுக்கு நோட்டீஸ் அளித்துள்ளோம். கொரோனா நோய் தொற்று தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்டுள்ளது என கூறினார்.



இந்நிலையில் தெலுங்கானாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 76 ஆக அதிகரித்துள்ளது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்களுக்கு நோய் தொற்று இருந்தாலும், அது தொடர்பான தகவல்கள் தெரிந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் என தெலுங்கானா மாநில சுகாதாரத்துறை கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
SaiBaba - Chennai,இந்தியா
31-மார்-202013:26:54 IST Report Abuse
SaiBaba கூட்டம் போட்டதுல நல்லது தானே நடந்திருக்கு.
Rate this:
Cancel
kumzi - trichy,இந்தியா
31-மார்-202012:52:20 IST Report Abuse
kumzi இந்த கூட்டத்தில் கலந்துகொண்ட அனைவரையும் கொர்ர்ரானா கூட்டி செல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
Rate this:
Cancel
BALAMURUGAN.E - CHENNAI,இந்தியா
31-மார்-202012:46:51 IST Report Abuse
BALAMURUGAN.E இந்த கும்பலே இருக்கும் என்பதற்கு உதாரணம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X