வளைகுடா நாடுகளில் தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்| Coronavirus: foreign workers stranded in Gulf | Dinamalar

வளைகுடா நாடுகளில் தவிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்கள்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (21)
Share
corona update, covid1 9, coronavirus crisis, coronavirus update, lockdown, quarantine, curfew, கொரோனா,வளைகுடா_நாடுகள்

சவுதி: வளைகுடா நாடுகளில் பணியாற்றும் இந்தியா உள்ளிட்ட வெளிநாட்டு தொழிலாளர்கள், வேலை இழப்பால் பணம் இன்றியும், உணவு கிடைக்காமலும் தவித்து வருகின்றனர்.

சவுதி அரேபியா உள்ளிட்ட, வளைகுடா நாடுகளில், ஒரு கோடி வெளிநாட்டவர் பணியாற்றி வருகின்றனர். இதில், இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், நேபாளத்தைச் சேர்ந்தவர்கள் அதிகம் உள்ளனர். உலகெங்கும் உள்ள, வெளிநாட்டு தொழிலாளர்களில், 10 சதவீதம் பேர், வளைகுடா நாடுகளில் பணியாற்றுகின்றனர்.


latest tamil news
தங்களுடைய நாடுகளில், ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாலும், உள்ளே நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாலும், வெளியேற முடியாமல், வளைகுடா நாடுகளிலேயே தங்கியுள்ளனர். வேலையை இழந்ததுடன், கையில் பணம் இல்லாமல், உணவு கிடைக்காமல் இவர்கள் தவித்து வருகின்றனர்.

Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X