பொது செய்தி

தமிழ்நாடு

வங்கி நிதி கையிருப்பு; அமைச்சகம் வேண்டுகோள்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020
Share
Advertisement
bank, salary, corona crisis, finance ministry, finance ministry news, coronavirus news, வங்கி,சம்பளம்

சென்னை: சம்பள தேதி நெருங்குவதால், அனைத்து பொதுத்துறை வங்கிகளும், தேவையான நிதி கையிருப்பு வைத்திருக்குமாறு, மத்திய நிதித்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

நாளை முதல், இம்மாதம், 10ம் தேதி வரை, பல்வேறு நிறுவனங்களும், தங்கள் ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கும். இதையடுத்து, வங்கிகளிலும், ஏ.டி.எம்.,களிலும், மக்கள் கூட்டம் அதிகம் காணப்படும். மேலும், விவசாயிகள், முதியோர், விதவைகள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்திர உதவித்தொகையும், இந்த காலகட்டத்தில், வங்கி கணக்கில், 'டிபாசிட்' செய்யப்படும்.


latest tamil news




எனவே, பொதுமக்களின் தேவைகளை பூர்த்தி செய்ய, தேவையான நிதி கையிருப்பு வைத்திருக்குமாறு, அனைத்து பொதுத்துறை வங்கிகளுக்கும், மத்திய நிதித்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. மேலும், சிறு பயிர் கடன்கள் மீதான வட்டி மானியம், மே மாதம், 31 வரை நீட்டிக்கப்படுவதாக, மத்திய அரசு அறிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X