பொது செய்தி

இந்தியா

முக கவசங்கள் விஞ்ஞான முறையில் அழிக்கப்படுகிறதா?

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
mask, corona update, covid 19 India, India fights corona, corona virus crisis, corona virus update, lockdown, quarantine, 21 days lockdown, curfew, india, masks for coronavirus, face shields

புதுடில்லி: கொரோனா வைரஸ் பரவலையடுத்து, முக கவசம் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. ஆனால், பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள், விஞ்ஞான முறைப்படி அழிக்கப்படாததால், பிரச்னை மேலும் அதிகரிக்கும் அபாயம் எழுந்துள்ளது.

தமிழகம், கர்நாடகம் உட்பட, நாட்டின் அனைத்து மாநிலங்களிலும், கொரோனா வைரஸ் பரவியுள்ளது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, பொது மக்கள், முக கவசங்களையும், கையுறைகளையும் பயன்படுத்துகின்றனர். கட்டாய காரணங்களால், வெளியே செல்பவர்கள் மட்டுமின்றி, வீட்டில் உள்ளவர்களும் கூட முக கவசம் அணிந்து நடமாடுகின்றனர். இதனால், முக கவசங்கள் பயன்பாடு அதிகரித்துள்ளது. கையுறைகளும் அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன.

ஆனால், பயன்படுத்தப்பட்ட முக கவசங்கள், கையுறைகள், விஞ்ஞான முறையில் அழிக்கப்படுவதில்லை. பொது மக்கள் பயன்படுத்திய முக கவசங்கள் மற்றும் கையுறைகளை, தனியாக சேகரித்து கொடுக்க வேண்டும்; மற்ற குப்பையுடன் சேர்த்து தரக்கூடாது என, கர்நாடகாவில், நகர வளர்ச்சி துறை உத்தரவிட்டுள்ளது. சில இடங்களில் பயன்படுத்தப்பட்ட முக கவசங்களை துவைத்து, மீண்டும் பயன்படுத்துகின்றனர்; இதனால் அச்சுறுத்தல் ஏற்படுகிறது. குப்பை அள்ளும் துப்புரவு தொழிலாளர்களின் ஆரோக்கியமும் பாதிக்கப்படுகிறது.


latest tamil news
'பயன்படுத்தப்பட்ட முக கவசம், கையுறைகளை பொது இடங்களில் வீசியெறிவது, கொரோனா வைரஸ் பரவ காரணமாகி விடும்' என, அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர். இது குறித்து, நகர வளர்ச்சி துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: ஒரு முக கவசத்தை, ஆறேழு மணி நேரம் பயன்படுத்தலாம். அதன் பின், அவற்றை விஞ்ஞான முறைப்படி அழிக்க, பொது மக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும். பயன்படுத்திய முக கவசங்கள், கையுறைகளை தனியாக கொடுக்க வேண்டும்.

இவற்றை, இரண்டு நாட்கள் வெயிலில் வைத்து, சுடுநீரில் சில மணி நேரம் நனைத்து வைத்த பின், துப்புரவு தொழிலாளர்களிடம் கொடுக்க வேண்டும். இது போன்று செய்வதால், கிருமி பரவுவதை கட்டுப்படுத்தலாம். இதை, அனைவரும் பின்பற்ற வேண்டும். இவ்வாறு, அவர் கூறினார்.

ஒரு முறை பயன்படுத்திவிட்டு, துாக்கி எறியக்கூடிய கவசங்கள் எரியூட்டப்பட வேண்டும். ஆனால், அவை, சாலையில் வீசப்படுகின்றன. இதுகுறித்து, சரியான அறிவுறுத்தலை அரசு அறிவிக்க வேண்டும்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkadesh Lakshmanan - Tenkasi,இந்தியா
31-மார்-202012:09:29 IST Report Abuse
Venkadesh Lakshmanan நல்ல செய்தி
Rate this:
Cancel
sekar ng -  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-202006:10:59 IST Report Abuse
sekar ng தேவை யில்லாமலிருந்தாலும் பின்பற்ற வழிவகுக்கும் .எதையும் எதிர்க்கும் ராகுல் ஸ்டாலினை போல் செயல்பட வைக்காதீர் முன் உதரணமாக வைத்துக் கொள்ளுங்கள்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X