இடம்பெயர்ந்து வந்தோர் மீது கிருமி நாசினி தெளிப்பு; உ.பி.,யில் சர்ச்சை

Added : மார் 31, 2020 | கருத்துகள் (42)
Share
Advertisement
லக்னோ: வெளிமாநிலங்களில் இருந்து, உத்தர பிரதேசத்துக்கு, சிறப்பு பஸ்களில் வந்தவர்கள் மீது, கிருமி நாசினி, பீய்ச்சி அடிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.டில்லி உட்பட வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்த, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், சிறப்பு பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். பரேலி மாவட்ட எல்லையில், அவர்கள் குழுவாக உட்கார வைக்கப்பட்டு, அவர்கள் மீது கிருமி
Fight against corona, corona crisis, coronavirus, covid19, disinfectant, migrant workers, UP govt, coronavirus news, Uttar Pradesh, உத்தரபிரதேசம்

லக்னோ: வெளிமாநிலங்களில் இருந்து, உத்தர பிரதேசத்துக்கு, சிறப்பு பஸ்களில் வந்தவர்கள் மீது, கிருமி நாசினி, பீய்ச்சி அடிக்கப்பட்டது, சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டில்லி உட்பட வெளி மாநிலங்களில் வேலை பார்த்து வந்த, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், சிறப்பு பஸ்கள் மூலம் அழைத்து வரப்பட்டனர். பரேலி மாவட்ட எல்லையில், அவர்கள் குழுவாக உட்கார வைக்கப்பட்டு, அவர்கள் மீது கிருமி நாசினி, பீய்ச்சி அடிக்கப்பட்டது. இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியானதையடுத்து, சர்ச்சை ஏற்பட்டது.


latest tamil news
முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான ஜிதின் பிரசாதா கூறுகையில், ''நாட்டில் என்ன நடக்கிறது. இந்த மக்களை, இப்படியா துன்புறுத்த வேண்டும். ''அவர்கள் மீது, வேதிப்பொருள் கலந்த தண்ணீரை பீய்ச்சியடிக்க, உ.பி., அரசு எப்படி உத்தரவிட்டது? ஏற்கனவே, இந்த மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிட்ட நிலையில், அதிகாரிகளும் இப்படி நடந்து கொள்வது, எந்த வகையில் நியாயம். இது, நிச்சயம் கண்டனத்திற்குரியது,'' என, தெரிவித்தார்.

'குளோரின் கலந்த தண்ணீர் தான் பீய்ச்சி அடிக்கப்பட்டது. அதில், ரசாயனம் ஏதும் சேர்க்கப்படவில்லை. கண்களை மூடிக் கொள்ளும்படி அனைவரிடம் கூறினோம். அவர்களை பாதுகாக்கவே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதில், மனித உரிமை மீறல் ஏதுமில்லை' என, உத்தர பிரதேச அதிகாரிகள் கூறியுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (42)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ராஜா - Chennai,இந்தியா
31-மார்-202016:56:53 IST Report Abuse
ராஜா இது மாதிரி மத பிரச்சாரத்துக்கு வந்தவன், தேவை இல்லாமல் காசு வாங்கி மதத்தை வைத்து போராட்டம் செய்து நோயை பரப்புணவன் மேல எல்லாம் பினாயில கரைத்து அடிங்க. நாடு சுத்தமாகட்டும்.
Rate this:
தஞ்சை மன்னர் - Thanjavur,இந்தியா
31-மார்-202018:15:46 IST Report Abuse
தஞ்சை மன்னர் முதலில் இந்த காவி கும்பல் மீது எதாவது தெளித்து புத்தி தெளிய வைக்கவேண்டும்...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
31-மார்-202013:32:03 IST Report Abuse
Natarajan Ramanathan மெட்ரோ வாட்டர் குளோரின் கலந்துதான் வருகிறது. அதில்தானே நாம் தினமும் குளிக்கிறோம்.....
Rate this:
Cancel
Girija - Chennai,இந்தியா
31-மார்-202012:58:26 IST Report Abuse
Girija வெளிநாடுகளில் நிறுவனங்கள் மற்றும் பெரிய மால்களின் வாசலில் தானியங்கி ஏர் ப்ளோயர் மூலம் உள்ளே நுழைபவர் மீது வேகத்துடன் காற்று வீசி அடிக்கப்படுகிறது, சில நாடுகளில் பயணிகளுடன் விமானம் தரை இறங்குவதற்கு பத்து நிமிடம் முன்பே ஏரோசால் ஆன்டி பாக்டீரியா இரண்டு கேன் முழுவதும் ஸ்பிரே செய்யப்படுகிறது .
Rate this:
Rajesh - Chennai,இந்தியா
01-ஏப்-202006:39:17 IST Report Abuse
Rajeshபயித்தியம் கிளம்பிடுச்சி........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X