பொது செய்தி

தமிழ்நாடு

16வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (7)
Share
Advertisement

சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 16வது நாளாக, இன்று (மார்ச் 31) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.



latest tamil news



பொதுத்துறையைச் சேர்ந்த இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தையில் நிலவும், கச்சா எண்ணெய் விலை நிலவரத்திற்கு ஏற்ப, பெட்ரோல், டீசல் விலையை தினமும் நிர்ணயம் செய்கின்றன.

இந்த முறை, 2016 ஜூனில் அமலுக்கு வந்தது. இருப்பினும், ஒன்றுக்கும் மேற்பட்ட மாநிலங்களில் சட்டசபை தேர்தல்கள் மற்றும் லோக்சபா தேர்தல் நடந்த சமயத்தில், பெட்ரோல், டீசல் விலை, தினமும் மாற்றப்படவில்லை.


latest tamil news



தமிழகத்தில், இம்மாதம், 15ம் தேதி, லிட்டர் பெட்ரோல், 72.45 ரூபாய்; டீசல், 65.87 ரூபாய்; 16ம் தேதி, பெட்ரோல், 72.28 ரூபாய்; டீசல், 65.71 ரூபாய் என, விற்பனையாகின. அதன்பின், விற்பனை விலையில், 15வது நாளாக இன்றும் எந்த மாறுதலும் செய்யபடவில்லை. சென்னை: கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக, தமிழகத்தில், 16வது நாளான இன்றும் (மார்ச்., 31) பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் செய்யப்படவில்லை.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
31-மார்-202021:26:37 IST Report Abuse
m.viswanathan எப்படி குறையும் கச்சா எண்ணெய் விலை 20 டாலரில் இருந்து 25 டாலர் ஆகும் போது ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 80 ரூபாய்க்கு விற்கும், கச்சா எண்ணெய் விலை குறைந்திருக்கும் போது பெட்ரோல் விலை குறையாததை பற்றி ஆதரவாளர் கூட்டம் வாயே திறக்காது
Rate this:
Cancel
K.Sugavanam - Salem,இந்தியா
31-மார்-202011:26:36 IST Report Abuse
K.Sugavanam பெட்ரோல் டீசல் விலை ஏறவில்லை, டோல் கலெக்ஷன் கிடையாது.. அத்யாவசிய பொருட்களை சரக்காக ஏற்றிவரும் வாகனங்களுக்கு சிறப்பு அனுமதி. இப்படி இருந்தும் மளிகை பொருட்களின் விலையை கடுமையாக ஏற்றி விற்கும் மொத்த,சில்லறை வியாபாரிகள்,விவசாயிகளிடம் குறைந்த விலைக்கு காய்கறிகளை வாங்கிவந்து கொள்ளைலாபம் வருமளவுக்கு விலை வைத்து விற்கும் காய்கறி வியாபாரிகள் இவர்கள் குறித்து செய்தி விரிவாக போடுங்க..உங்க சமூக அக்கறையை காட்டுங்க ...
Rate this:
Cancel
chris -  ( Posted via: Dinamalar Android App )
31-மார்-202010:57:12 IST Report Abuse
chris அரசுக்கு லாபம். ஆனால் ஊரடங்கு காரணமாக வியாபாரம் அரசு துறையிடம் இருந்துதான் வரவேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X