துபாயில் கொரோனா வார்டுக்கு சொந்த கட்டடத்தை கொடுத்த இந்தியர்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (12)
Share
Advertisement
coronavirus crisis, dubai, donations, Ajay Sobhraj, Finja Jewellery, corona update, covid 19,  coronavirus update, துபாய்,கொரோனா

துபாய்: துபாயில் வசிக்கும் இந்திய தொழிலதிபர் ஒருவர், அங்கு கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தனிமை வார்டுகள் அமைக்க, தனக்கு சொந்தமான கட்டடத்தை தந்து உதவி உள்ளது, பாராட்டை பெற்றுள்ளது.

மேற்காசிய நாடான ஐக்கிய அரபு எமிரேட்சின் துபாயில் வசிப்பவர், அஜய் சோப்ராஜ். இந்தியாவைச் சேர்ந்த இவர், 'பின்ஜா ஜுவல்லரி' என்ற பெயரில், 25 ஆண்டுகளாக, அங்கு நகைக்கடை நடத்தி வருகிறார். ஐக்கிய அரபு எமிரேட்சில், 611 பேர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்; 5 பேர் உயிரிழந்து உள்ளனர். இதையடுத்து, அங்கு, அடுத்த மாதம் 4 வரை, ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கான தனிமை வார்டுகள் அமைக்க, துபாயின் ஜுமைரா லேக் டவர்ஸ் பகுதியில், தனக்கு சொந்தமான கட்டடத்தை தர, அஜய் சோப்ராஜ் முன்வந்துள்ளார்.


latest tamil news
'என் வெற்றிக்கும், வளர்ச்சிக்கும் காரணமாக இருந்த நாட்டுக்கு, ஒரு அவசர நிலை ஏற்படும் போது, உதவ வேண்டியது என் கடமை. 'எனவே, எனக்கு சொந்தமான கட்டடத்தை, தனிமை வார்டுகள் அமைக்க பயன்படுத்திக் கொள்ளுங்கள்' என, சுகாதாரத் துறைக்கு, அவர் கடிதம் எழுதி உள்ளார். சோப்ராஜின் இந்த உதவிக்கு, பல்வேறு தரப்பில் இருந்தும், பாராட்டுகள் குவிகிறது.


தமிழக இளைஞருக்கு பாராட்டு:இதற்கிடையே, தமிழகத்தின் அரியலுார் மாவட்டத்தைச் சேர்ந்த, முரளி சம்பந்தம், 42, என்பவர், துபாயில் உள்ள உணவகம் ஒன்றில், 'டெலிவரி' ஊழியராக பணியாற்றி வருகிறார். அங்கு, அடுத்த மாதம், 4 வரை, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஆபத்தையும் பொருட்படுத்தாமல், வாடிக்கையாளர்கள் வீடுகளுக்கு, உணவுகளை கொண்டு சேர்த்து வருகிறார். இவரை பாராட்டி, அந்நாட்டின் நாளிதழான 'கலீஜ் டைம்ஸ்' செய்தி வெளியிட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
konanki - Chennai,இந்தியா
31-மார்-202013:53:42 IST Report Abuse
konanki ...தடையின்றி கிடைக்குதா?
Rate this:
Cancel
31-மார்-202013:40:29 IST Report Abuse
chandran, pudhucherry நல்லவர்கள் என்றும் வாழ்க
Rate this:
Cancel
Tamilan - kailasa,இந்தியா
31-மார்-202012:35:27 IST Report Abuse
Tamilan நிறைய மலையாளி பிசினஸ் முதலாளிகள் உண்டே ...அவர்கள் எங்கே ? ஆளையே காணோம்
Rate this:
Girija - Chennai,இந்தியா
31-மார்-202015:03:36 IST Report Abuse
Girijaதமிழா, தமிழா நீ கும்மடிப்பூண்டியை கூட தாண்டியதில்லை, பிற மொழி தெரியாது, ஏக் காவுமே ராகு தாத்தா தான் நீ என்றும். ஊரை வெட்டியாக சுற்றி, எந்த ஒரு முன்னேற்ற முயற்சியும் செய்யாமல், தினமும் டாஸ்மாக் கடையை தேடி போதையில் மூழ்கும் நீ அடுத்தவன் திரைகடல் ஓடி திரவியம் தேடினால் பங்கு கேட்கமட்டும் முதல் ஆளாக நிற்பது கரோனாவைவிட கொடியது . பொறுத்திருந்து பார் கேரளா மக்கள் அவர்கள் தாய் மண்ணிற்கு, என்னவெல்லாம் செய்கிறார்கள் என்று ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X