அரசியல் செய்தி

தமிழ்நாடு

'போஸ்' கொடுக்கும் கரை வேட்டிகளுக்கு 'ஆப்பு?'

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (28)
Share
Advertisement
coronavirus, politicians ,Tamil Nadu, election, coronavirus update, coronavirus death count, coronavirus india

சென்னை: வீடுகளில் முடங்கிய மக்களுக்கு, உதவிகள் செய்யாமல், பெயரளவிற்கு, 'போஸ்' கொடுக்கும் கரை வேட்டிகளுக்கு, வரும் தேர்தலில், 'ஆப்பு' காத்திருக்கிறது.

தமிழகத்தில், கொரோனா பரவலை தடுக்க, ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு உள்ளதால், வீடுகளில் மக்கள் முடங்கி உள்ளனர். ஒவ்வொரு மாவட்டத்திலும், தினக்கூலி தொழிலாளர்கள், வெளி மாவட்ட தொழிலாளர்கள், வாழ்வாதாரத்தை இழந்துள்ளதால், உணவுக்கு சிரமப்படுகின்றனர். அரசு அவர்களுக்கு உதவ, நடவடிக்கை எடுத்தாலும், அனைவருக்கும் கிடைப்பதில்லை. இவர்களுக்கு உதவ வேண்டிய, கரை வேட்டிகளும், வீடுகளில் முடங்கி விட்டனர். அதேநேரத்தில், சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என்ற, அரசின் உத்தரவை பின்பற்றாமல், அமைச்சர்கள், தங்கள் கட்சிக்காரர்களுடன், கிருமி நாசினி தெளிப்பது போல, போஸ் கொடுத்து வருகின்றனர்.

போஸ் கொடுப்பதை தவிர்த்து, அதிகாரிகளுடன் இணைந்து, ஆக்கப்பூர்வமான நடவடிக்கையில் ஈடுபடுவதையே, மக்கள் விரும்புகின்றனர். ஒரு சில எம்.எல்.ஏ.,க் கள், தங்களால் முடிந்த உதவிகளை, தொகுதி மக்களுக்கு செய்து வருகின்றனர்; பலர் பாராமுகமாக உள்ளனர். அதேபோல், வட்டம், பகுதி, மாவட்டம், ஒன்றியம், நகரம் என, கரை வேட்டி கட்டி, மற்ற நேரங்களில் வலம் வரும் கட்சியினரை, களத்தில் காணவில்லை.இதையெல்லாம், மக்கள் கவனித்தபடி உள்ளனர். நெருக்கடியான காலத்தில், மக்களுக்கு உதவி செய்யாத, கரை வேட்டிகளுக்கு, வரும் தேர்தலில், ஆப்பு வைக்க உள்ளனர்.


latest tamil news
இது குறித்து, பொது மக்கள் கூறியதாவது: புயல், வெள்ளம் போன்ற பேரிடர்களின் போது, தன்னார்வலர்கள், பொது சேவையில் இறங்குவர். அவர்களை பார்த்து, அரசியல் கட்சியினரும் களம் இறங்குவர். தற்போது, நோய் தொற்றுக்கு பயந்து, களமிறங்க தயங்குவதாக தெரிகிறது.

முக்கிய நிர்வாகிகள் மட்டும், சில இடங்களில், கிருமி நாசினி திரவம், முக கவசம் கொடுத்து, விழிப்புணர்வு பிரசாரம் செய்கின்றனர்; போட்டோவுக்கு போஸ் கொடுத்து விட்டு போய் விடுகின்றனர்.அதற்கு பதிலாக, சுகாதார பணியாளர்கள் உள்ளிட்ட சேவை துறையினருக்கு, உணவு, குடிநீர் வழங்கலாம்.

வீட்டை விட்டு, வெளியே வராதவாறு, ஏழை மக்களுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை வழங்கலாம். அப்படி செய்தால், மக்கள் சிரமம் குறையும். இல்லையேல், அவர்களின் கோபம், வரும் தேர்தலில் வெளிப்படும். இவ்வாறு, அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
m.viswanathan - chennai,இந்தியா
31-மார்-202021:16:29 IST Report Abuse
m.viswanathan மக்கள் பணியென்றால் , தேர்தலின் போது , ஆயிரம் ரூபாய், quarter பிரியாணி வழங்குதல் , இங்குள்ள கரை வேட்டிகள் நிச்சயமாக செய்வார்கள்
Rate this:
Cancel
Narayanan Thannappa - Canton,Detroit,யூ.எஸ்.ஏ
31-மார்-202017:55:13 IST Report Abuse
Narayanan Thannappa மக்கள் எவ்வழி - மன்னன் அவ்வழி. ஐயா, ஒன்றும் நீங்கள் எதிர்பார்பதுபோல் நடக்காது. முந்தய வரலாறை மறந்துவிடாதீர்கள்.
Rate this:
Cancel
chander - qatar,கத்தார்
31-மார்-202017:28:20 IST Report Abuse
chander இப்போ நடக்கிற காவியை சொல்லுகிறீர்களோ
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X