பொது செய்தி

இந்தியா

டில்லி மாநாட்டில் பங்கேற்ற 16 பேருக்கு கொரோனா

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (59)
Share
Advertisement
கொரோனா, கொரோனாவைரஸ், டில்லி, கோவை, Coronavirus updates, corona india, coronavirus, Tamil Nadu news, covid 19, coronavirus in TN, confirmed cases, coronavirus crisis, Delhi conference, Tamil Nadu, positive cases, corona, chennai

சென்னை: டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு, 'கொரோனா' வைரஸ் தாக்கியிருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க, டில்லி சென்று வந்தவர்களும், அவர்களின் குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்தும்படி, அரசு தரப்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது.

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த, 21 நாட்கள் ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் திடீரென கொரோனா வைரஸ் பாதித்தவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு, டில்லியில் நடந்த இஸ்லாமிய மாநாட்டுக்கு சென்று வந்தவர்களும் காரணமாக இருப்பது தெரிய வந்துள்ளது.'தப்லீக் ஜமாத்' என்ற, இஸ்லாமிய பிரசார குழு சார்பில், டில்லியில், மார்ச், 21 முதல் மூன்று நாட்கள் மாநாடு நடந்தது. இந்த மாநாட்டில், தமிழகத்தை சேர்ந்த, 1,500 பேரும் பங்கேற்றனர். அவர்கள் ஊரடங்கு அமலாவதற்கு முன்தினம், சென்னைக்கு ரயிலிலும், விமானத்திலும் வந்துள்ளனர்.பின், தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்றுள்ளனர்.


latest tamil newsஇதே மாநாட்டில் பங்கேற்ற சிலர், அந்தமானை சேர்ந்தவர்கள். அவர்கள் அந்தமானுக்கு விமானத்தில் சென்று, அங்கு தனிமை பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது, கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியானது.அவர்களிடம் நடத்திய விசாரணையில், டில்லி மாநாட்டில், பங்கேற்றதை உறுதி செய்துள்ளனர். மேலும், ஈரோட்டுக்கு வந்த தாய்லாந்து குழுவினர், ஏற்கனவே டில்லிக்கு போய் வந்தது தெரியவந்துள்ளது. ஈரோட்டில் புதிதாக நோய் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களில் சிலர், டில்லி மாநாட்டில் பங்கேற்றவர்கள்.

மொத்தத்தில், டில்லி மாநாட்டில் பங்கேற்ற, தமிழகத்தைச் சேர்ந்த, 1,500 பேரில், 16 பேருக்கு கொரோனா வைரஸ் பாதித்திருப்பது உறுதியாகி உள்ளது. அதனால், மாநாட்டில் பங்கேற்க டில்லி சென்று வந்த அனைவரும், அவர்களது குடும்பத்தினரும், அருகில் உள்ள அரசு மருத்துவமனைகளில் பதிவு செய்து, தங்களை சுய தனிமைப்படுத்திக் கொள்ளும்படி, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.இந்நிலையில், டில்லியில் இந்த மாநாடு நடந்த நிஜாமுதீன் பங்களாவாலி மசூதியில் 175 பேருக்கு கொரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. மேலும், 2,000 பேர் தனிமையில் வைக்கப்பட்டுள்ளனர்.


மருத்துவ பரிசோதனை


டில்லியில் நடந்த கருத்தரங்கில் தாய்லாந்து சுற்றுலா பயணியருடன், கோவையை சேர்ந்த, 51 பேர் பங்கேற்றனர். தாய்லாந்து குழுவை சேர்ந்த இருவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அவர்களுடன் தொடர்பிலிருந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த, 10 மாத குழந்தை உள்பட நான்கு பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், இக்குழுவில் டில்லி சென்று திரும்பியவர்கள் கண்டறியப்பட்டு, மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. அவ்வகையில் போத்தனூர் திருமறை நகரை சேர்ந்த சிலர், அக்குழுவுடன் சென்றது தெரிந்தது. நேற்று (மார்ச் 30) இவர்களுக்கு, சுகாதார துறையினர் மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்தவர்களும் பங்கேற்றதாக கிடைத்த தகவலை தொடர்ந்து அவர்களை சுகாதாரத்துறையினர் மருத்துவ பரிசோதனைக்கு அழைத்து சென்றனர்.


26 பேரின் ரத்தம், சளி சேகரிப்பு


சிவகங்கை மாவட்டத்தில் இருந்து டில்லியில் நடந்த கூட்டத்தில் கலந்து கொண்ட 26 பேரை சுகாதாரத்துறை கண்டறிந்தது. சிவகங்கை அரசு மருத்துவமனையில் 15 பேர், காரைக்குடி மருத்துவமனையில் 11 பேர் என தனி வார்டில் கண்காணிக்கப்படுகிறார்கள். ரத்தம், சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக மதுரைக்கு அனுப்பப் பட்டுள்ளது. 'கொரோனா' அறிகுறி தென்படுவோருக்கு 'கொரோனா' தனிமை வார்டில் சிகிச்சை அளிக்கப்படும் என டாக்டர்கள் தெரிவித்தனர்.இதே மாநாட்டில் விருதுநகரை மாவட்டத்தை சேர்ந்த 13 பேர் பங்கேற்றுள்ளனர். அவர்களை மாவட்ட நிர்வாகம் தனிமைப்படுத்தி கண் காணித்து வருகிறது.

ராமநாதபுரம் மாவட்டத்தில் இருந்து 21 பேர் டில்லியில் நடந்த மாநாட்டில் கலந்து கொண்டனர். இரு தினங்களுக்கு முன் 15 பேர் ராமநாதபுரத்திற்கு திரும்பினர். இதில் பரமக்குடியை சேர்ந்த 67 வயது நிரம்பியவரை சுகாதாரத்துறையினர், வருவாய்த் துறையினர், போலீசார் இணைந்து அரசு மருத்துவமனைக்கு அழைத்து வந்தனர்.இதையடுத்து அவர் உள்பட 15 பேரும் தானாகவே ஒரு தனியார்விடுதியில் தனிமைப்படுத்தி கொள்வதாகவும், அங்கு ரத்த மாதிரிசேகரிக்க ஒத்துழைப்பதாகவும் தெரிவித்தனர்.

Advertisement
வாசகர் கருத்து (59)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு கூடுவாஞ்சேரி இந்தோனேசியாவிலிருந்து கொரோனாவை இந்தியாவிற்கு கொண்டு வந்ததுமில்லாமல் வெளிநாட்டவர்கள் எந்தவித மத ப்ரசாரங்களிலும் ஈடுபடக்கூடாது என்று தெரிந்தும் குடியுறிமைக்காக நாடு முழுவதும் போராட்டம் நடத்த திட்டம் போட்டு விட்டு உபி முதல்வரை குறை கூற இந்த தேசவிரோதிகளுக்கு தைரியம் எப்படி வந்தது. காரணம் தேசவிரோத காங்கிரஸ் மற்றும் கட்டுமர கும்பல் கொடுக்கும் இடம். இதில் பங்கு கொண்ட ஆறு பேர் இறந்தும் இந்த இறுமாப்பு. இதை முதலில் வேரோடு அழிக்க வேண்டும். இப்போது இல்லை என்றால் எப்போதும் இல்லை.
Rate this:
Cancel
JSS - Nassau,பெர்முடா
31-மார்-202017:22:20 IST Report Abuse
JSS டில்லியில் மத பிரச்சார மாநாட்டில் கலந்து கொண்டவர்கள் உயிரோடு இருக்க வேண்டுமென்றால் தனிமை படுத்திக்கொள்ளுங்கள்
Rate this:
Cancel
Enrum anbudan - dammam,சவுதி அரேபியா
31-மார்-202016:29:45 IST Report Abuse
Enrum anbudan வேண்டுகோள் எல்லாம் இவர்களுக்கு சரி வராது என்பது நடந்த நிகழ்வுகளின் மூலம் நிதர்சனம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X