'20 தெருக்களுக்கு ராசிபுரத்தில் சீல்'

Added : மார் 31, 2020 | |
Advertisement
ராசிபுரம்: ராசிபுரத்தில், 20 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, டில்லிக்கு பலபேர் மத சம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கடந்த, 17ல் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் கடந்த, 23ல் சொந்த ஊருக்கு திரும்பினர். அதில், ஆறு பேர் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள். இவர்களை, போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் கண்டறிந்தனர். முதற்கட்டமாக

ராசிபுரம்: ராசிபுரத்தில், 20 தெருக்களுக்கு சீல் வைக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டத்தில் இருந்து, டில்லிக்கு பலபேர் மத சம்பந்தமான நிகழ்ச்சியில் கலந்து கொள்ள, கடந்த, 17ல் சென்றதாக கூறப்படுகிறது. இவர்கள் கடந்த, 23ல் சொந்த ஊருக்கு திரும்பினர். அதில், ஆறு பேர் ராசிபுரத்தை சேர்ந்தவர்கள். இவர்களை, போலீசார் உதவியுடன் சுகாதாரத்துறையினர் நேற்று முன்தினம் கண்டறிந்தனர். முதற்கட்டமாக அரசு மருத்துவமனையில் தனிமைப்படுத்தினர். பின்னர், அவர்களின் ரத்த மாதிரியை எடுத்து, கொரோனா பரிசோதனைக்கு அனுப்பியுள்ளனர். முடிவு வந்த பிறகுதான், அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து கூற முடியும் என, சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். இந்நிலையில், நேற்று மாலை, 6 பேரும் வசித்த பகுதி, அவர்கள் சென்ற பகுதி என, 20 தெருக்களுக்கு சுகாதாரத்துறையினர் சீல் வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X