இ.எம்.ஐ., ஒத்திவைக்கப்படுமா?: நீடிக்கும் குழப்பம்| RBI's 3 month moratorium on EMIs leave banks confused | Dinamalar

இ.எம்.ஐ., ஒத்திவைக்கப்படுமா?: நீடிக்கும் குழப்பம்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (16) | |
மும்பை: நாடு முழுவதும் ஊரடங்கு அமலானதை அடுத்து, அனைத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்களின் இ.எம்.ஐ.,க்களை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. ஆனால், வங்கிகள் சார்பில் இதுவரையில் அதற்கான அறிவிப்பு வெளிவராததால் தவணை செலுத்துபவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு

மும்பை: நாடு முழுவதும் ஊரடங்கு அமலானதை அடுத்து, அனைத்து சேவைகளும் தடைப்பட்டுள்ளன. இதனால், வாடிக்கையாளர்களின் இ.எம்.ஐ.,க்களை 3 மாதங்களுக்கு ஒத்திவைக்க வங்கிகளுக்கு, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. ஆனால், வங்கிகள் சார்பில் இதுவரையில் அதற்கான அறிவிப்பு வெளிவராததால் தவணை செலுத்துபவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.latest tamil news


கொரோனா வைரஸ் பரவுதலை தடுக்கும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு நடைமுறையில் உள்ளன. இதனால் அனைத்து தொழில்நிறுவனங்களும் மூடப்பட்டுள்ளன. மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளன. வங்கிகளில் கடன்பெற்றவர்கள், ஊதியம் இல்லாமல் இ.எம்.ஐ., கட்ட முடியாத நிலையில் உள்ளனர். இதனை போக்க, அனைத்து வங்கிகளும் 3 மாதத்திற்கு தவணைகளை ஒத்திவைக்க, ரிசர்வ் வங்கி அறிவுறுத்தி இருந்தது. ஆனால், பெரும்பாலான பெரிய கடன் வழங்குநர்கள், ரிசர்வ் வங்கியின் உத்தரவைப் பின்பற்றத் தயாராக இல்லை. சில வங்கிகள் சார்பில், பலருக்கு அவர்களின் கடன் இ.எம்.ஐ.,க்கள் தங்கள் கணக்குகளில் இருந்து பற்று வைக்கப்படும் எனவும், போதுமான நிலுவைத்தொகையை பராமரிக்க வேண்டும் எனவும் பலருக்கு குறுஞ்செய்திகள் வந்துள்ளன.


latest tamil news


பெரும்பாலான சில்லரை கடன்கள், வீட்டு கடன், ஆட்டோ மற்றும் பிற தனிப்பட்ட கடன்கள், வாடிக்கையாளர்களின் சம்பள கணக்கிலிருந்து மாதாந்திர இ.எம்.ஐ.,க்களை டெபிட் செய்ய வங்கிகள் நிலையான வழிமுறைகளைப் பெறுகின்றன. நாளை ஏப்ரல் மாதம் தொடங்க இருப்பதால், ஒவ்வொரு மாதமும் முதல் வாரத்தில் கட்டப்படும் தவணை தொகையை ஏப்., மாதம் எடுப்பார்களா மாட்டார்களா என கடன்பெற்றவர்கள் குழப்பத்தில் இருந்து வருகின்றனர். ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, எச்.டி.எப்.சி., வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, கோட்டக் வங்கி மற்றும் ஆக்சிஸ் வங்கி போன்ற கடன் வழங்குநர்களும், வாடிக்கையாளர்களுக்கு ஒரு விருப்பத்தை செயல்படுத்த எந்த திட்டத்தையும் செயல்படுத்தவில்லை.


latest tamil news


இதுகுறித்து எஸ்பிஐ., வங்கி வட்டாரங்கள் கூறுகையில், கடன் வாங்குபவர்களுக்கு தவணை கட்டத்தவறினால் திருப்பி செலுத்த வாய்ப்பளிக்கப்படும். அது வங்கியின் இணையதள பக்கத்தின் மூலம் இணைக்கப்பட்டு, இமெயில் அல்லது குறுஞ்செய்தி மூலமாக தெரிவிக்கப்படும். அதே நேரத்தில் கடன்பெற்றவர்கள் விருப்பப்பட்டால் தவணையை தொடரவும் முடியும், எனக்கூறப்படுகிறது. தவணையை ஒத்திவைக்கும் விருப்பத்தை செயல்படுத்த இரண்டு நாட்கள் ஆகலாம் என்று மற்றொரு தனியார் வங்கி நிர்வாகி கூறினார். பொதுவாக மாத தவணை கட்டத்தவறினால் அல்லது பரிவர்த்தனை தோல்வியுற்றால் ரூ.200 முதல் ரூ.400 வரை அபராதமாக வசூலிக்கப்படுகிறது.


latest tamil news


இது குறித்து வங்கியாளர்கள் கூறுகையில், 3 மாதம் இ.எம்.ஐ., ஒத்திவைப்பது என்பது தள்ளுபடி அல்ல என்பதை வாடிக்கையாளர்கள் உணர வேண்டும். ஆனால் தவணையை தவறவிட்டால், கடனாளியாக வகைப்படுத்தப்படுவதைத் தவிர்ப்பதற்காக வழங்கப்பட்ட ஒரு வசதி தான் இது. வட்டி கட்டணங்கள் மூன்று மாதங்களுக்கு தொடர்ந்து வரும் என்பதால் தாமதப்படுத்துவதில் எந்த நன்மையும் இல்லை, என கூறுகின்றனர். இதுவரையில் வங்கிகள் சார்பில் இ.எம்.ஐ., ஒத்திவைப்பு தொடர்பாக எந்தவித அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாக நிலையில், ஏப்., மாத தவணை பிடித்தம் செய்யப்படுமா என்ற குழப்பம் நீடித்து வருகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X