மனநலம் பாதித்த 11 பேர் மீட்பு

Added : மார் 31, 2020 | |
Advertisement
நாமக்கல்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி, ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சாலைகளில் சுற்றி திரிந்தனர். அவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் உணவு வழங்கினர். அவர்களை மீட்டு காப்பகங்களில் பராமரிக்க, கலெக்டர் மெகராஜ், நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

நாமக்கல்: கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க, நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. நாமக்கல் நகரில் ஊரடங்கு உத்தரவை மீறி, ஆதரவற்றோர் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட சிலர் சாலைகளில் சுற்றி திரிந்தனர். அவர்களுக்கு தீயணைப்புத்துறையினர் உணவு வழங்கினர். அவர்களை மீட்டு காப்பகங்களில் பராமரிக்க, கலெக்டர் மெகராஜ், நகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதையடுத்து, தாசில்தார் பச்சைமுத்து, நகராட்சி கமிஷனர் ஜஹாங்கீர் பாஷா, துப்புரவு அலுவலர் சுகவனம் ஆகியோர் கொண்ட குழுவினர் போலீஸ் உதவியுடன், 11 ஆதரவற்ற மற்றும் மனநலம் பாதிக்கப்பட்ட நபர்களை மீட்டனர். பின்னர், புதிய ஆடைகளை வாங்கி கொடுத்து இளநகரில் உள்ள காப்பகத்துக்கு, ஏழு பேரையும், ராசிபுரத்தில் உள்ள காப்பகத்துக்கு, நான்கு பேரையும் அனுப்பி வைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X