பொது செய்தி

தமிழ்நாடு

டாக்டர், நர்சுகளுக்கு பணி நீட்டிப்பு

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
doctor, nurse, tngovt, retired doctors, retired nurses, work period, extension, டாக்டர்கள், நர்சுகள்,

சென்னை: இன்று(மார்ச் 31) ஓய்வு பெறவிருந்த டாக்டர்கள், நர்சுகள் மற்றும் தொழில்நுட்ப பணியாளர்களின் பணி 2 மாதம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக முதல்வர் இ.பி.எஸ்., வெளியிட்ட அறிக்கை: கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகளுக்காக ஏற்படுத்தப்பட்ட உயர் அதிகாரிகள் கொண்ட பல்வேறு குழுக்களுடன் ஆலோசனை செய்த பின், மக்களின் நன்மை கருதி கீழ்கண்ட உத்தரவு பிறப்பிக்கிறேன். இன்றுடன் ஓய்வு பெற உள்ள டாக்டர், நர்சுகள் மற்றும் மருத்துவ தொழில்நுட்ப பணியாளர்கள் அனைவருக்கும் ஓய்வுக்கு பின் ஒப்பந்த முறையில் மேலும் 2 மாதங்கள் பணி தொடர தற்காலிக பணி நியமன ஆணை வழங்கப்படும்.


latest tamil news



உலகெங்கும் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த அரசு அனைத்து நடவடிக்கைகளையும் போர்க்கால அடிப்படையில் எடுத்து வருகிறது. பொது நலன் கருதி அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் பொது மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Rameeparithi - Bangalore,இந்தியா
31-மார்-202017:37:15 IST Report Abuse
Rameeparithi குறைந்தது மூன்று மாதங்கள் பணி நீட்டிப்பு செய்திருக்கலாம் . இருப்பினும் பாராட்டுகள் முதல்வரே ...
Rate this:
Cancel
31-மார்-202015:48:46 IST Report Abuse
ஆரூர் ரங் முதியவர்களுக்குத்தான் கொரோனா எளிதில் பரவுதாமே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X