பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் கொரோனா பரிசோதனை போதுமானதாக உள்ளதா?

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (4)
Share
Advertisement

புதுடில்லி: 'கொரோனா வைரஸ் தொற்று பரவலைக் கட்டுப்படுத்த, வைரஸ் தொற்று அறிகுறி உள்ளவர்கள் மட்டுமின்றி, அவருடன் தொடர்ப்பில் இருந்தவர்கள் மற்றும் அவர் சென்று வந்த பகுதிகளில் வசிப்பவர்கள் என, அனைவரையும் பரிசோதனைக்கு உட்படுத்த வேண்டும்' என, உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. இப்படி பரிசோதனை செய்தால், கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கலாம்; ஆனால், தொற்று இருப்பவர்களைக் கண்டறிந்து தனிமைப்படுத்தி கொரோனா பரவலை விரைவாகக் கட்டுப்படுத்த முடியும்.latest tamil newsஅதிக மக்கள் தொகை கொண்ட நாடுகளின் பட்டியிலில் இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. இங்கு, மற்ற நாடுகளை விட, பல மடங்கு அதிகமாக கொரோனா பரிசோதனைகளை மேற்கொள்ள வேண்டும். ஆனால், இங்கு போதுமான அளவு பரிசோதனைகள் நடைபெறுவதில்லை. மேலும், கொரோனா தொற்று அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே, பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இதனால், இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு அதிகப்படியானோர் பாதிப்புக்குள்ளாக நேரிடும்.


latest tamil news
174 மையங்கள் மட்டுமே!


இந்தியாவில் தற்போது, 47 தனியார், 127 அரசு பரிசோதனை நிலையங்களில் கொரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்படுகின்றன. மக்கள் தொகை மிகுந்த இந்தியாவிற்கு, 174 பரிசோதனை மையங்கள் போதுமானதல்ல. அதனால், பெரும் எண்ணிக்கையிலான பரிசோதனை மையங்களுக்கு அனுமதி வழங்க அரசு தயாரானது. ஆனால், மற்ற மையங்களில் போதுமான அளவில் பரிசோதனை கருவிகள் இல்லை என்றும் பரிசோதனைகளில் ஈடுபடும் மருத்துவப் பணியாளர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்களும் தட்டுப்பாடாக இருப்பதாகவும் ஆய்வில் தெரியவந்துள்ளது.
இதையடுத்து, வென்டிலேட்டர் போன்ற கருவிகளுடன் கொரோனா பரிசோதனை கருவிகளையும், பாதுகாப்பு உபரணங்களையும் அதிகளவில் தயாரிக்க மத்திய அரசு உத்தரவிடப்பட்டுள்ளது.


latest tamil news
10 லட்சத்தில் 32 பேருக்கு பரிசோதனை


இந்தியாவில் மார்ச் 20ம் தேதி வரை கொரோனா அறிகுறி உள்ளவர்கள் மட்டுமே பரிசோதிக்கப்பட்டனர். அதன் பின், தொற்று உறுதிப்படுத்தப்பட்டவர்களின் உறவினர்கள், நண்பர்கள் ஆகியோருக்கு பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகின்றன.
இதன் படி, இந்தியாவில் நேற்று வரை, 38,442 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன. அதாவது, இந்திய மக்கள் தொகை அடிப்படையில் பார்த்தால், 10 லட்சம் பேரில், 32 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது.


latest tamil newsபிரிட்டனில், 10 லட்சம் மக்களில், 1,921 பேர் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகிறார்கள். அமெரிக்காவில், 10 லட்சத்தில் 2,600 பேருக்கு பரிசோதனை மேற்கொள்ளப்படுகிறது. இந்தியாவில் இருக்கும் அனைவரையும் பரிசோதிக்க முடியாது என்றாலும், 10 லட்சத்துக்கு வெறும் 32 என்ற எண்ணிக்கை, நிச்சயம் போதாது என்பதை மற்ற நாடுகளுடன் ஒப்பிடுகையில் தெரிய வருகிறது.
இதனால் இந்தியாவில் கொரோனா பாதிப்பு அதிகரிக்க வாய்ப்புகள் அதிகம். மக்கள் தங்களைத் தனிமைப் படுத்திக் கெள்வது மட்டுமே, பாதிப்பிலிருந்து தற்காத்துக்கொள்வதற்கான ஒரே வழியாக உள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழர்நீதி - சென்னை ,இந்தியா
31-மார்-202019:53:55 IST Report Abuse
தமிழர்நீதி வசதிகள் இல்லை இந்தியாவில் ஆனால் .. வீட்டுக்குள் முடங்கணும் . அதுவே தீர்வு . நம் வீட்டில் யாருக்கேனும் கொரோனாவால்.. ஒருவேளை உடல் நலப்பிரச்னை ஏற்பட்டால் அரசு ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லும்படியான நிலமை உண்டானால். அவர்களோடு கூட துணைக்குச் செல்ல நம் ஒருவருக்கும் அனுமதி கிடையாது. நான் இருக்கிறேன் கவலைப்படாதே என்று அவர்களின் கைகளைப் பிடித்து ஆதரவாகப் பேசமுடியாது. விஸிடிங் நேரத்தில் கூடப் போய் பார்த்தோமா, தேறுதல் சொன்னோமா என்றெல்லாம் கனவு கூடக் காணமுடியாது. குரூரமான உண்மை என்ன தெரியுமா.. படுத்திருப்பவரைச் சுற்றி ஒரு தெரிந்த முகம் கூட இருக்காது. பல நோயாளிகளுடன் போராடி முற்றிலும் சோர்வடைந்த நர்ஸுகள், டாக்டர்களுக்கு மத்தியில் பகலா இரவா என்றுகூட தெரியாமல், வெண்டிலேட்டர்களின் மூலம் மூச்சு விட்டுக் கொண்டு, நோய் கடுமையாகி இறப்பதற்கோ, குணமாகி வீட்டிற்குத் திரும்புவதற்கோ காத்துக் கொண்டிருக்க வேண்டும் இதில் வெண்டிலேட்டர் வைத்துக் கொள்ள அந்த வசதி கிடைத்தால் கிடைத்தவர் பெரிய அதிர்ஷ்டசாலி. ஏனெனில் அந்த அளவு வெண்டிலேட்டர் இருக்கிறதா கிடைக்குமா என்பதே சந்தேகம் யாருக்கும் போன் செய்து நோயாளி எப்படி இருக்கிறார் என்று நம்மால் விசாரிக்கக் கூட முடியாது ஏனெனில்.. நம் கேள்விகளுக்கு பதில்சொல்ல அங்கு யாருக்கும் நேரமும் கிடையாது. பொறுமையும் கிடையாது ஹாஸ்பிடலில் படுத்திருக்கும் நேரம் முழுவதும் வெறும் தனிமை மட்டுமே படுத்திருப்பவர் நினைவின்றி இருந்தாலும் காத்திருக்கும் நமக்கு ஒவ்வொரு நிமிடம் போவது ஒரு யுகமாய் இருக்கும் ஒரு கற்பனை... ஒருவேளை படுத்திருப்பவர் நாமாக இருந்தால்.,அனைத்தையும் தன்னந்தனியாக, துணையின்றி கடந்து வர வேண்டும். நம் கையைப் பிடித்துக் கொள்ள எந்த அம்மா அப்பாவோ, பெண், பிள்ளையோ கிடையாது. முடியவேயில்லை என்று முனகி.. முகம் பார்த்து கண்ணோரம் கண்ணீர்விட ஒருவருமே அருகில் இருக்க மாட்டார்கள் நினைத்துப் பார்க்கவே எந்த அளவு கர்ண கடூரமாக இருக்கிறது .. தயவு செய்து வீட்டில் இருங்கள்.உங்கள் குடும்பத்தில் இருக்கும் ஒவ்வொருவருக்கும் புரிய வையுங்கள் அடுத்த ஒருவாரம் மிகவும் முக்கியமான வாரம்.. இந்த வாரத்தைக் கடந்துவிட்டால்.. அதன் பிறகு மீண்டு வருவதற்கான சாத்தியக் கூறுகள் அதிகம். உங்களைச் சுற்றியிருப்பவர்களுக்கும் இதன் குரூரமான நிஜத்தைச் சொல்லி புரியவையுங்கள்.....
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
31-மார்-202017:34:08 IST Report Abuse
அசோக்ராஜ் உண்மையாகவே தேசப்பற்றுள்ள அரசாக இருந்தால் முதற்கண் அனைத்து இசுலாமிய பெருமக்களையும் சோதிக்க வேண்டும். அதுதான் பரவலின் டார்கெட் குரூப். அதை விட்டுட்டு கைக்கு எட்டியவரை மட்டும் சோதித்தால் பேரழிவுக்கு தயார்படுத்திக் கொள்ள வேண்டியதுதான்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
31-மார்-202016:33:09 IST Report Abuse
Lion Drsekar சென்னையில் ஒரு சாரார் ஒரு காவல் அதிகாரியை கூட்டமாக சேர்ந்து கொண்டு அதுவும் காவல் நிலையத்தின் வாசலில் நின்றபடி, எங்களை நீ எப்படி பரிசோதிக்க அழைக்கலாம் என்று மிரட்டும்போது அவர் பயந்து செல்லும் காட்சி வாட்ஸாப்பில் வந்து கொண்டு இருக்கிறது, இப்படி இருந்தால் யார்தான் என செய்யமுடியும், , நாடு எங்கே சென்று கொண்டு இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X