அரசியல் செய்தி

தமிழ்நாடு

வீட்டு வாடகை வசூலிக்கக்கூடாது; தமிழக அரசு உத்தரவு

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (37)
Share
Advertisement

சென்னை: கொரோனாவால் ஊரடங்கு, தொழில்கள், கல்வி நிறுவனங்கள் மூடல் காரணமாக, தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்கள், மாணவர்களிடம், மார்ச் மாதத்திற்கான ஒரு மாத வாடகையை வசூலிக்க வேண்டாம் என தமிழக அரசு, வீட்டு உரிமையாளர்களுக்கு உத்தரவிட்டுள்ளது. வீட்டு வாடகை கேட்டு யாரும் தொந்தரவு செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.latest tamil newsகொரோனாவால் தமிழகத்தில் 74பேர் பாதிப்பு அடைந்துள்ளனர். நாடு முழுவதும் ஊரடங்கு, தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. வருமானம் இன்றி தவிக்கும் தொழிலாளர்களின் நிலையை கருத்தில் கொண்டு , அரசு உத்தரவிட்டடுள்ள விபரம்:

தமிழகம் உள்ளிட்ட வெளிமாநில தொழிலாளர்களிடம் மார்ச் மாதத்திற்கான வாடகையை வசூல் செய்ய வேண்டாம் என வீட்டு உரிமையாளர்களுக்கு இன்று(மார்ச்-31) உத்தரவிட்டுள்ளது. இதனை மீறி, வீட்டு வாடகை கேட்டு வீட்டை காலி செய்ய வற்புறுத்தும் வீட்டு உரிமையாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் தொழிலாளர்களுக்கு சம்பளம் பிடித்தம் இல்லாமல், முழுத்தொகையை வழங்க வேண்டும் என தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.


latest tamil news


Advertisement
வாசகர் கருத்து (37)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Balagurusamy Ayyanadar - Thirumangalam, Madurai ,இந்தியா
31-மார்-202022:49:30 IST Report Abuse
Balagurusamy Ayyanadar இவ்வளவு களேபரங்களுக்கு இடையிலும் அனைத்து தொலைக்காட்சி சானல்களும் போட்டி போட்டு திரைப்படங்களையும், பழைய சீரியல்களையம் மீண்டும் காண்பிக்க ஆரம்பித்து விட்டார்கள். இதில் வேடிக்கை என்னவெண்றால் ஒவ்வொரு பத்து நிமிடத்திற்கு ஒரு முறை ஏகப்பட்ட விளம்பரங்கள் ஒளி பரப்பாகி காண்போரை சலிப்படையச் செய்கிறது. இதன்மூலம் அனைத்து சானல்களும் ஏகப்பட்ட வருமானம் அடைகினறன. இப்போது சீரியல்களின் தொடருக்காக படப்பிடிப்பம் நடைபெறவில்லை. இப்போது கேபிள் டிவி கட்டணத்தை மூன்று மாதங்களுக்கு வசூல் செய்யாமல் விட்டுக் கொடுத்தால் இதனால் அனைத்து தரப்பு மக்களும் பயன் பெறுவார்களே? அரசும் சம்பந்தப்பட்ட. அதிகாரிகளும் விரைவில் ஆவன செய்யவும். நன்றி.
Rate this:
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
31-மார்-202022:08:30 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) தினமலர் இன்று மத்திய அரசு வெளிட்ட வங்கிகளின் மூன்று மாத EMI ஒத்திவைப்பு செய்தியையும் சேர்த்து வெளியிட வேண்டும். முடிந்தவர்களிடம் வசூலிக்கலாம், முடியாதவர்களிடம் கூடாது.
Rate this:
Cancel
Krishnan (Sarvam Krishnaarpanam....) - Chennai,இந்தியா
31-மார்-202022:06:50 IST Report Abuse
Krishnan (Sarvam Krishnaarpanam....) மூன்று மாத EMI தள்ளிவைப்பதாக பல வங்கிகள் அறிவித்துள்ளன..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X