பொது செய்தி

இந்தியா

மீண்டும் வருகிறான் 90'ஸ் கிட்ஸ் நாயகன் ‛சக்திமான்'

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020
Share
Advertisement
Shaktimaan, DD National, Doordarshan, Re-Telecast, Television shows, Indian super hero, coronavirus, corona, covid-19, சக்திமான், தொடர், மறுஒளிபரப்பு, தூர்தஷன், டிடி, நேஷனல்

புதுடில்லி: 90களில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்ற ‛சக்திமான்' தொடர், தூர்தர்ஷனில் மீண்டும் ஒளிபரப்பாகிறது.

கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஏப்ரல் 14 வரை நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்யாவசிய தேவைகள் தவிர மற்ற காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியே வரக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது.
இதனால் வீடுகளில் மக்கள் முடங்கியுள்ளனர். இதனையடுத்து ராமாயணம் தொடரை மீண்டும் ஒளிபரப்பு செய்ய வேண்டும் என டுவிட்டர் மூலம் ஏராளமான மக்கள் கோரிக்கை விடத்துவங்கினர். ராமானந்த் சாகர் இயக்கிய ராமாயணத் தொடர் மற்றும் பி.ஆர்.சோப்ரா இயக்கிய மகாபாரதத் தொடர் தூர்தர்ஷனில் ஒளிபரப்பப்படும் என்று மத்திய செய்தி மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் அறிவித்தார். அதன்படி கடந்த 28-ம் தேதி முதல் ராமாயணம் தொடர் டிடி நேஷனல் தொலைக்காட்சியில், தினமும் காலை 9 மணி முதல் 10 மணி வரை ஒருபகுதியும் இரவு 9 மணி முதல் 10 மணி வரை அடுத்த பகுதியும் ஒளிபரப்பப்படுகிறது. அதேபோல் மகாபாரதம் தொடரும் நண்பகலில் ஒளிபரப்பப்படுகிறது.


latest tamil news


இந்நிலையில் 1997 முதல் 2005ம் ஆண்டு வரை சுமார் 520 எபிசோடுகள் ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற சக்திமான் தொடரும் ஒளிபரப்பப்பட உள்ளதாக அத்தொடரின் நாயகனும், தயாரிப்பாளருமான முகேஷ் கண்ணா தெரிவித்திருந்தார். அதன்படி, ஏப்ரல் முதல் வாரத்தில் டிடி நேஷனல் தொலைக்காட்சியில் பிற்பகல் 1 மணிக்கு சக்திமான் தொடர் ஒளிபரப்ப திட்டமிடப்பட்டுள்ளது. இதே போல் சாணக்யா, உபநிஷத் கங்கா, ஸ்ரீமன் ஸ்ரீமதி, கிருஷ்ணா காளி ஆகிய பிரபலமான தொடர்களும் நாளை முதல் ஒளிபரப்பப்பட உள்ளது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருப்பதால் பெரும்பாலான தொலைக்காட்சி தொடர்களின் படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் ஏற்கனவே மக்களால் ரசிக்கப்பட்ட, அதிகம் வரவேற்பு பெற்ற தொடர்களை மறு ஒளிபரப்பு செய்ய பல சேனல்கள் திட்டமிட்டுள்ளன.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X