மோடி பேச்சு: இம்ரான்கானை திருத்திய பாக்., ஊடகம்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (49)
Share
Advertisement

இஸ்லாமாபாத்: பிரதமர் மோடி பேசியதை தவறான பொருள்படும்படி மாற்றி கூறிய பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானை, பாகிஸ்தான் ஊடகம் சுட்டிக்காட்டி திருத்தியது.



latest tamil news




இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கால் பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள இடையூறுகளுக்கு மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக பிரதமர் மோடி தெரிவித்தார். மேலும், இந்தியா போன்ற 130 கோடிக்கும் அதிக மக்கள் தொகை கொண்ட நாட்டில், கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவதை தவிர வேறு வழியில்லை என்றும் தெரிவித்தார்.


மோசமான யோசனை


இதுகுறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், நாட்டு மக்களுக்கு உரையாற்றுகையில், இந்தியாவில் கொரோனாவை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதற்காக பொதுமக்களிடம் மோடி மன்னிப்பு கேட்டதாக குறிப்பிட்டார். ஆகவே, பாகிஸ்தானில் நாடுதழுவிய ஊரடங்கை அமல்படுத்துவது மோசமான யோசனையாக தாம் நினைத்ததாகவும் அவர் கூறினார்.
ஆனால் இம்ரான் கான் கூறியபடி ஊரடங்குக்கு மோடி மன்னி ப்பு கேட்கவில்லை என்றும் மக்களுக்கு ஏற்பட்ட இடையூறுகளுக்காகத் தான் மன்னிப்பு கேட்டார் என்றும் பாகிஸ்தான் ஊடகமான 'ஜியோ நியூஸ்' சுட்டிக் காட்டியது. மேலும் ஊரடங்கு உத்தரவு, சிந்திக்காமல் எடுத்த முடிவு என மோடி கூறவில்லை என தெளிவாக சுட்டிகாட்டியது.


latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (49)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Somiah M - chennai,இந்தியா
03-ஏப்-202018:12:22 IST Report Abuse
Somiah M மழை நீர் நல்ல நிலத்தில் விழுந்தால் நன்னீராகவும் ...................உப்பு படிந்த (களர் )நிலத்தில் விழுந்தால் உப்பு நீராகவும் மாறுவதை போன்றதுதான் இம்ரான்கான் அவர்களின் பேச்சு .
Rate this:
Cancel
Mahadevan Sankaranarayanan - Bangalore,இந்தியா
03-ஏப்-202011:24:42 IST Report Abuse
Mahadevan Sankaranarayanan திரு. மாதவன் ராஜன் அவர்களின் முதல் கருத்து மிகவும் அருமை .உயிர் போன பின்னால் economy இருந்து என்ன பயன். பப்புவும், ஜாமீன் ஜக்குவும் பணத்தை கட்டிப்பிடித்து கொண்டே போக வேண்டியதுதான்.
Rate this:
Cancel
Venkatesh - Chennai,இந்தியா
03-ஏப்-202002:46:57 IST Report Abuse
Venkatesh ஒரு நல்லவர் மற்றவர் பேச்சை கேட்கையில் நல்லதை மட்டுமே பார்ப்பார் /சிந்திப்பார் , இதன்படி பாகிஸ்தான் பிரதமர் எப்படி பட்டவர் என்பது தெளிவாக புரிகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X