பொது செய்தி

இந்தியா

நிவாரண முகாம்களில் வெளிமாநில தொழிலாளர்கள்: மத்திய அரசு தகவல்

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (2)
Share
Advertisement
Relief camps, migrant workers, central government, fight against corona, migrants, workers, health service, vaccination, health care, நிவாரணமுகாம், மத்தியஅரசு, தொழிலாளர்கள்,

புதுடில்லி: டில்லியில் நிருபர்களை சந்தித்த மத்திய சுகாதாரத்துறை கூடுதல் செயலாளர் லவ் அகர்வால் கூறியதாவது: வெளிமாநில தொழிலாளர்களுக்காக 61 ஆயிரம் நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன. அதில் 6 லட்சம் பேர் தங்கியுள்ளனர். கொரோனா தடுப்பு பணியின் போதும், வழக்கமான சுகாதார பணிகளான தடுப்பூசி போடுதல் உள்ளிட்ட பணிகள் நிறுத்தப்படக்கூடாது.

மருத்துவ உபகரணங்கள் சாதனங்கள் தேவையை அதிகரிப்பது தொடர்பாக தென் கொரியா, துருக்கி மற்றும் வியட்நாம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த நிறுவனங்களுடன் வெளியுறவு அமைச்சகம் பேசி வருகிறது. என் 95 மாஸ்க்குகள் உற்பத்தியை அதிகரிக்க, உள்ளூர் நிறுவனங்களுடன் டிஆர்டிஓ பணியாற்றி வருகிறது. டாக்டர்கள் மற்றும் நர்சுகளை வீட்டை வீட்டு, உரிமையாளர்கள் வெளியேற்றுவது தொடர்பான விவகாரத்தை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க கலெக்டர்கள்,போலீசார், மாநகராட்சி ஆணையாளர்களுக்கு, தொற்றுநோய் சட்டத்தின் கீழ், டில்லி அரசு அதிகாரம் வழங்கியுள்ளது.

நிஜாமுதீன் பகுதி விவகாரத்தில், தற்போது தவறு யார் மீது என கண்டுபிடிப்பது முக்கியமில்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தான் முக்கியம்.


latest tamil newsஇந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் கங்காகேதக்கர் கூறுகையில், கொரோனா குறித்து, இதுவரை 42,788 ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன. நேற்று மட்டும் 4,346 ஆய்வுகள் நடந்துள்ளது. 123 ஆய்வகங்கள் தொடர்ந்து செயல்படுகின்றன. 49 தனியார் ஆய்வகங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நேற்று, தனியார் ஆய்வகங்களில் 38 நோயாளிகளுக்கு பரிசோதனை செய்யப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
31-மார்-202020:25:25 IST Report Abuse
அசோக்ராஜ் //"நிஜாமுதீன் பகுதி விவகாரத்தில், தற்போது தவறு யார் மீது என கண்டுபிடிப்பது முக்கியமில்லை. பாதிக்கப்பட்டவர்களை கண்டறிந்து சிகிச்சை அளிப்பது தான் முக்கியம்"// சொன்னான் பாரு அகர்வாலு. மஹாத்மா விருதுக்கு எப்படி போட்டிக்கு வரான் பாரு. மித்ரோன் நம் எல்லாருக்கும் வாய்ப்பு கிடைக்கும். அத்தனை கோடி விசா கொடுத்திருக்கோம். தள்ளு முள்ளு இல்லாம நிதானமா க்யூவரிசைல வந்து தியாகம் செஞ்சு மஹாத்மா விருது வாங்கிக்கோங்க. மறக்காம ஆதார் அட்டை கொண்டு வந்துடுங்க. நன்றி மித்ரோன்
Rate this:
Cancel
முடியட்டும் விடியட்டும் :: தமிழன் - செந்தமிழ்நாடு ,இந்தியா
31-மார்-202019:37:36 IST Report Abuse
முடியட்டும் விடியட்டும் ::  தமிழன் ஆமாம் உங்கள் துறை மந்திரி யார் ஏன் அவர் பேச்சே காணோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X