பொது செய்தி

தமிழ்நாடு

வங்கிகள் நாளை மறுநாள் முதல் வழக்கம் போல இயங்கும்!

Updated : மார் 31, 2020 | Added : மார் 31, 2020 | கருத்துகள் (3)
Share
Advertisement

சென்னை:'வங்கிகள், நாளை மறு நாள் (2-ம் தேதி) முதல் வழக்கம் போல, மாலை, 4:00 மணி வரை செயல்படும்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.latest tamil news
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில், நாடு முழுவதும் ஊரடங்கு அமலில் உள்ளது. இதையொட்டி, வங்கிகள், காலை, 10:00 முதல், மதியம், 2:00 மணி வரை மட்டுமே செயல்படும் என, அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், வங்கிகள், நாளை முதல் வழக்கம் போல செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, வங்கி அதிகாரிகள் கூறியதாவது:வங்கி ஊழியர்களுக்கும், வாடிக்கையாளர் களுக்கும், கொரோனா வைரஸ் பரவக்கூடாது என்ற நோக்கில், அவசர தேவைகளுக்கு மட்டும், வாடிக்கையாளர்கள் வங்கிக்கு வர அறிவுறுத்தப்பட்டனர்.மேலும், வங்கிகளின் வேலை நேரமும், காலை, 10:00 முதல், மாலை, 2:00 மணி வரை குறைத்திட, மாநில அளவிலான வங்கிகள் குழு, சுற்றறிக்கை அனுப்பியது.


latest tamil news
இந்நிலையில், மத்திய அரசு வழங்கும் நேரடி நிவாரண நிதியை, பயானாளிகள் பெறும் வகையில், வங்கிகள் மீண்டும், மாலை, 4:00 மணி வரை செயல்பட, வங்கிகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. நாளை ( 1-ம் தேதி) வங்கிகளில் பண பரிவர்த்தனை கிடையாது; நாளைமறு நாள் (2-ம் தேதி)முதல், வங்கிகள், மாலை, 4:00 மணி வரை செயல்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sri,India - India,இந்தியா
31-மார்-202022:31:52 IST Report Abuse
 Sri,India If bank union like to strike, it is good time to strike because public are not able to go to bank due to 144. They plan to strike after korono issues.
Rate this:
Cancel
முதல் தமிழன் - தமிழ் நாடு,இந்தியா
31-மார்-202020:38:13 IST Report Abuse
முதல் தமிழன் ஏன்யா இப்போ வங்கிகள்தான் முக்கியமா? மனுஷன் உயிர் போயிட்டு இருக்குது..இதுல கும்மாளம் அடிக்கிறிங்கள்..
Rate this:
காவல்காரன்: சுடலைநிவாரண நிதி வேண்டாம் என்று பொதுமக்கள் சொன்னால் போதும். கணக்கில் வரவு வைக்க வேண்டாம். பணம் எடுக்க கூட வேண்டாம். நாளை முதல் ரேஷன் கடைகளில் கூட்டம் அலை மோதும். ஒரு நாள் 100 பேருக்கு மட்டுமே என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் அவர்களின் பொறுப்பு உணர்ந்து செயல்பட வேண்டும்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X