கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் ஈடுபட்டுள்ள சுகாதார பணியாளர்களை பாராட்டும் விதமாக ஆஸ்திரேலியா தொடக்க ஆட்டக்காரர் வார்னர் தனது தலையை மொட்டை அடித்துக்கொண்டார்.

கோரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்திக்கொண்டிருக்கிறது. பல லட்சம் பேர் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர். 39 ஆயிரம் பேர் உயிர் இழந்துள்ளனர். ஆஸ்திரேலியாவில் கொரோனாவுக்கு இதுவரை 19 பேர் பலியாகியுள்ளனர். 4,500-க்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நோயை கட்டுப்படுத்த தங்கள் உயிரையும் பொருட்படுத்தாமல் ஏராளமான சுகாதார பணியாளர்கள், பாதுகாப்பு துறையினர் களத்தில் பணியாற்றிக் கொண்டிருக்கின்றனர்.
நன்றாக உள்ளதா? இல்லையா?'
அவர்களுக்கு புதுவிதமாக ஆதரவு தெரிவிக்கும் வகையில், வார்னர் தனக்கு தானே மொட்டை அடித்துக்கொண்ட வீடியோவையும், படத்தையும் சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். அதில், 'எனக்கு அளித்த பரிந்துரையை ஏற்று, கோவிட்-19-க்கு எதிராக, முன்னணியில் இருந்து போராடும் பணியாளர்களுக்கு ஆதரவு தெரிவித்து, இதனை செய்துள்ளேன். இது நன்றாக உள்ளதா? இல்லையா?' என குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர், இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோஹ்லி, ஆஸி., வீரர்களான ஸ்டீவ் ஸ்மித், கம்மின்ஸ், ஸ்டொய்னிஸ் உள்ளிட்ட பல வீரர்களையும் மொட்டை அடிக்க பரிந்துரை செய்துள்ளார்.

தினமலர் டெலிகிராம் சேனலில் பார்க்கலாம் Click here to join
Telegram Channel for FREE